BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபெயரிலென்ன இருக்கு? (1) Button10

 

 பெயரிலென்ன இருக்கு? (1)

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

பெயரிலென்ன இருக்கு? (1) Empty
PostSubject: பெயரிலென்ன இருக்கு? (1)   பெயரிலென்ன இருக்கு? (1) Icon_minitimeSat Apr 10, 2010 12:54 pm

What''s in a name? என்று ஆரம்பித்தவர் ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர். கவிஞர் என்ன நோக்கத்தில் சொன்னாரோ, பெயரிலென்ன என்று நாத்திகவாதிகளும், பெயர்தான் எல்லாமே என்று ஆன்மீகவாதிகளும் பிரிந்து நிற்கின்றனர்.

29.3.2007 அன்று கோயம்புத்தூரில் திராவிடர் கழகத்தினரால் நடத்தப்பட்ட புரட்சி விழாவில் (கலப்பு மணம் மூலமாகப் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழா) சூட்டப்பட்ட சில பெயர்கள் - ருஷ்யா, க்யூபா, வியட்நாம், வவுனியா, திரிபுரா, ஜகார்த்தா, மலேசியா, மணிலா, தமிழ் ஈழம்.

இப்பெயர்களுக்குக் காரணமாகச் சொல்லைப்படுவன : ஒன்று, இப்பெயர்கள் விடுதலை உணர்வு, புரட்சி சிந்தனைகள் மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களைப் பிரதிபலிக்கின்றன. இரண்டு, சிதம்பரம், பழனி, திருப்பதி என்று ஊர்ப் பெயர்கள் வழக்கமாக வைக்கப்படுவதால், உலக நாடுகளின் பெயர்களை வைத்துக் கொள்வதில் தவறில்லை!

இதோடு திருப்தி அடையாத சிலர், தங்கள் குழந்தைகளுக்கு (ஆன்மீக) வில்லன்களான ராவணன், ஹிரண்யன், மண்டோதரி போன்ற பெயர்களையும் கூட வைக்கிறார்கள்.

விசித்திரமான, நடைமுறையில் அதிகமாக இல்லாத பெயர்களைக் கொண்ட குழந்தைகள், சாதாரணமான பெயர்களைக் கொண்ட குழந்தைகளை விட அதிக அளவில் மன நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது 11.5.2007 அன்று டெக்கான் கிரானிக்கிளில் வந்த ஒரு கட்டுரை.

இது இப்படி இருக்க, பெயரைக் கொண்டு ஒரு புரட்சியே நடத்தியிருக்கிறது விபசாரத்திற்குப் பெயர் பெற்றிருந்த ஒரு சிறு கிராமம். தற்போது திருந்தி வாழ்ந்தாலும், தங்கள் முன்னோர்களால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்கக் கங்கணம் பூண்டார்கள் கிராமத்து மக்கள். தங்கள் குழந்தைகளுக்குக் கடந்த சில வருடங்களாகவே தாசில்தார், தானேதார், ராஷ்டிரபதி, ராஜ்யபால், காங்கிரஸ், ராஜிவ் காந்தி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்கள். இப்பெயர்களினால் சிறுவர்களிடம் நல்ல முன்னேற்ற மனோபாவமும், அவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் கிடைப்பதாகப் பூரிப்படைகிறார்கள். இராஜஸ்தான் மாநிலம் புந்தி மாவட்டம் ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த கஞ்சார் இன மக்களே இவர்கள்.


பெயர்களை ஆன்மீக முன்னேற்றத்திற்கும் தனி மனித ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கும் பயன்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள். குழந்தைகளுக்கு இறைவன் நாமத்தைச் சூட்ட வேண்டும். அவ்வாறு பெயரிடப்பட்ட குழந்தையின் பெயரைக் கூப்பிடும் நேரத்திலாவது மனிதன் கெட்ட எண்ணங்களை மறந்து இறைவனை நினைத்துப் புண்ணியம் தேடிக் கொள்வான் என்பது அடிப்படை நோக்கம்.

இதைத்தான் பெரியாழ்வாரும் (பாசுரம் 30 ),

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஒரு மல வூத்தையை,
மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை,
குன்றிடைக் கோவிந்தா! கோவிந்தா! என்று அழைத்தக் கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரம்புகாள்.

என்று அறிவிக்கின்றார்.

பெயர்கள் நிகழ்காலத்தை உணர்த்துவதாகக் கவிப்பேரரசு வைரமுத்து கூறுகிறார். 16.5.2007 குமுதம் இதழில் வெளி வந்த கேள்வி-பதில் பகுதியில் இந்தக் கேள்வி இடம் பெற்றிருந்தது.

"ஒரு பெயரைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தைக் கண்டு பிடிக்க முடியுமா?''

கவிஞரின் பதில் : "எதிர்காலம் தெரியுமோ இல்லையோ, சில பெயர்களைக் கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும்."

குப்புஸ்வாமி
குப்புசாமி
குப்பன்
குப்பு

"இந்த நான்கும் பெயர்கள் மட்டுமல்ல. வர்க்க அடுக்குகள். ஜாதி-பொருளாதாரம்-வாழ்நிலை-மன நிலை போன்றவற்றை மங்கலாகக் காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம் இந்தப் பெயர்கள். இப்படிப் பெயர்கள் நிகழ்காலம் சொல்லலாமே தவிர, எதிர்காலம் சொல்லும் என்று எண்ண முடியவில்லை என்னால்" என்கிறார் கவியரசு.

இதே மாதிரியான கருத்தைத் தெரிவிக்கிறார் FREAKONOMICS என்ற வித்தியாசமான பொருளாதார ஆய்வுப் புத்தகத்தை எழுதிய Rogue economist என்று பெயர் பெற்ற ஸ்டீஃபன் டி. லிவிட் என்ற அமெரிக்கப் பொருளாதார மேதை. (ISBN 0-141-02580-Cool

பெற்றோர்களுடைய வாழ்க்கைத் தரத்துக்கும் அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர். இதற்கு உதாரணமாக, அமெரிக்கக் கறுப்பர்களையும், அமெரிக்க வெள்ளையர்களையும் எடுத்துக் காட்டுகிறார். கருப்பர்களுக்கே உரிய மற்றும் வெள்ளையர்களுக்கே உரிய பெயர்கள் என சிலவற்றைப் பட்டியலிடுகிறார்.

1. வெள்ளை நிறம் கொண்ட பெண்களுக்கு மட்டுமே வைக்கப்படும் சில பெயர்கள் ---- Molly, Amy,Claire, Emily, Katie, Madeline,Katherine, Hannah, Emma, Kaitlin, Carly

2. கரிய நிறம் கொண்ட பெண்களுக்கு மட்டுமே வைக்கப்படும் சில பெயர்கள் ---- Jazmin, Jasmin, Jasmine, Jazmine, Ebony, Imani, Shanice, Nia, Aaliyah, Precious, Deja, Asia, Aliyah, Diamond, Jada, Kiara

3. வெள்ளை நிறம் கொண்ட பையன்களுக்கு மட்டுமே வைக்கப்படும் சில பெயர்கள் ---- Jake, Connor, Tanner, Dustin, Luke, Jack, Scott, Logan, Cole, Lucas, Bradley, Jacob, Maxwell, Hunter, Brett, Colin

4. கரிய நிறம் கொண்ட பையன்களுக்கு மட்டுமே வைக்கப்படும் சில பெயர்கள் ----- De Shawn, DeAndre, Marquis, Darnell, Willie, Dominique, Demetrius, Reginald, Xavier, Terrance, Darryl, Jalen

புதுமையான பெயர்கள் புதுப்பணக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டு, அவை நடுத்தர வர்க்க மக்களால் காப்பி அடிக்கப்படுகின்றன என்கிறார் லிவிட்.

லிவிட்டின் பெயர் ஆராய்ச்சி மேலும் பல அதிசய உண்மைகளை வெளிப்படுத்துகிறது. நிறப்பாகுபாடுகள் பெயர்ப் பாகுபாடுகளாகி, அவை மேலும் பகுக்கப்படுகின்றன.
[b]



THANKS:


WIKIPIDIA


Last edited by Fathima on Sun May 30, 2010 9:10 am; edited 1 time in total
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

பெயரிலென்ன இருக்கு? (1) Empty
PostSubject: பெயரிலென்ன இருக்கு? (2)   பெயரிலென்ன இருக்கு? (1) Icon_minitimeSat Apr 10, 2010 12:56 pm

பெயர்கள் எப்படி வர்க்க ரீதியாக வேறுபடுகின்றன என்பதை இப்பகுதியில் காண்போம்.

வெள்ளை நிறப் பெண்களுக்கு :

1. பண வசதி குறைந்தவர்கள் வைக்கும் பெயர்கள் - Ashley, Jessica, Sarah, Emily, Taylor, Elizabeth, Jennifer, Rebecca
2. நடுத்தர வசதி படைத்தவர்கள் வைக்கும் பெயர்கள் - Lauren, Rachel, Katherine, Alexandra,
Danielle
3.உயர் வசதி படைத்தவர்கள் வைக்கும் பெயர்கள் - Alexandra, Lauren, Katherine, Rachel,
Madison
4. கல்வி கற்றவர்கள் வைக்கும் பெயர்கள் - Katherine, Emma, Alexandra, Julia, Rachel
5. கல்லாதவர்கள் வைக்கும் பெயர்கள் - Kayla, Amber, Brittany, Brianna

வெள்ளை நிறப் பையன்களுக்கு :

1. பண வசதி குறைந்தவர்கள் வைக்கும் பெயர்கள் - Cody, Brandon, Anthony, Justin, Robert
2. உயர்வசதி படைத்தவர்கள் வைக்கும் பெயர்கள் - Benjamin, Samuel, Jonathan, Alexander, Andrew
3. உயர் கல்வி கற்றவர்கள் வைக்கும் பெயர்கள் - Benjamin, Samuel, Alexander, John, William
4. கல்லாதவர்கள் வைக்கும் பெயர்கள் - Cody, Travis, Brandon, Justin, Tyler

பெயர் விவகாரம் காலத்திற்கேற்ப மாறவும் செய்கிறது. உதாரணமாக, 1960ல் பிரபலமான SUSAN என்ற பெயர் 2000 இல் யாராலும் விரும்பி வைக்கப்படாத பெயராகி விட்டது. இது போலவே ROBERT, DAVID, KEVIN, LISA, MARY, DEBORAH, LINDA, SANDRA போன்ற பெயர்களும்.

லிவிட் இம்மாதிரியான பெயராட்டத்திற்கு மன ரீதியான காரணங்களையும் பட்டியலிடுகிறார். அவர் கூறும் காரணங்கள் :

1. படித்த, வசதியானவர்கள் கண்டுபிடித்த பெயர்களை, படிப்பில்லாத, வசதி குறைந்தவர்கள் காப்பியடித்துக் கொள்கிறார்கள்.

2. பிரபலமானவர்களின் பெயர்கள் குறைவாகவே காப்பியடிக்கப்படுகின்றன.

3. காப்பியடிப்பவர்கள் தங்கள் சொந்தக்காரர்களைப் பார்த்தோ, அடிக்கடி சந்திக்கும் அடுத்த வீட்டுக்காரர்களிடமிருந்தோ காப்பியடிப்பதில்லை

4. தங்களுக்குத் தெரிந்த, ஆனால் அவர்களுக்குத் தெரியாத, நான்கைந்து வீடுகள் தள்ளி இருப்பவர்களின் பெயர்களையே விரும்பிக் காப்பியடிக்கிறார்கள்.

பெயர்கள் நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் விதமாக வைக்கப்படுவதாக லிவிட் போன்ற ஆங்கிலேயர்கள் கூறினாலும், பழந்தமிழர் வாழ்க்கையை ஆய்ந்துணர்ந்த, தமிழை, தமிழனின் வாழ்க்கை முறையை உய்த்துணர்ந்த கவிப் பேரரசு போன்றவர்கள் அக்கருத்தையே ஆமோதிப்பது விந்தையாகவே உள்ளது. அவர் கற்ற கம்பர் என்ன சொல்கிறார்?

கம்பர் இவர்களிடமிருந்து மாறுபடவே செய்கிறார். பெயருக்கு ஏற்றவாறே குழந்தை வளரும், குழந்தையின் எதிர்காலமும் அமையும் என்ற தமிழனின் நம்பிக்கையைச் சித்திரமாக்குகிறார்.

ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்கு வந்து அருளிய கடவுள் எனக் கொண்டு, முதல் குழந்தைக்கு இராமன் எனப் பெயரிட்டதாகப் பாடுகிறார்.

"விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே
இராமன் எனப்பெயர் ஈந்தனன் அன்றே"
எனத் தொடங்குகிறார்.

அடுத்துப் பிறந்த குழந்தையின் ஒளி மிகுந்த வனப்பைக் கண்டு பரதன் எனப் பெயரிட்டதாகக் கூறுகிறார்.

"வரதன் உதித்திடு மற்றைய ஒளியை
பரதன் எனப் பெயர் பன்னினன் அன்றே"
என்றார்.

எதிர்காலத்தில் அரக்கர்கள் துயர் ஒழிந்து அமரர்கள் வாழ்வர் என்ற எண்ணத்தோடு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு, இலக்குவன் எனப் பெயரிட்டார்கள் என்றார்:

"விலக்க அரு மொய்ம்பின் விளங்குஒளி நாமம்
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே"

நான்காவதாகப் பிறந்த குழந்தை எத்திசையிலும பகையை அழிக்கும் எனக் கூறி சத்துருக்னன் எனப் பெயரிடுகிறார்கள்:

"எத்திருக்கும் கெடும் என்பதை எண்ணாச்
சத்துருக்கன் எனச் சாற்றினன் நாமம்"

"தமிழனின் பெயர்கள் இறந்த காலம் சொல்லும்" என்கிறார் பட்டி மன்றம் ராஜா தன்னுடைய 14.6.2007 குங்குமம் வார இதழ் கட்டுரையில்.

"எங்கப்பா ஹெட் மாஸ்டரா இருந்த கிராமத்துல, சென்சஸ் எடுக்கறதுக்குப் போறப்போ கூடப் போயிருக்கேன். பெரும்பாலும் அந்த ஊர் ஜனங்க பேரு மண்ணாங்கட்டி, புளுகாண்டி, சுடலை, கழுவன், பாண்டி, கருத்தம்மா.. அப்பிடீன்னுதான் இருக்கும். அங்க ஒருத்தன் பேரு 'டவுன் பஸ்' ன்னு சொன்னாங்க. என்னன்னு விசாரிச்சா, அவன் சிட்டி பஸ்ல பொறந்தவனாம். பேரைக் கேட்டாலே அவரோட ஜாதியைக் கண்டுபிடிச்சிடலாம். இதையெல்லாம் மாத்தி, பாமர ஜனங்க கூட நாகரிகமாக பேர் வைக்கக் கத்துக் குடுத்தது தமிழ் சினிமாதான். தமிழ்ப் படங்களுக்குத் தமிழ்ல பெயர் வைக்கறதுக்கே கவர்மென்ட் சட்டம் போடவேண்டிய கட்டாயம் வந்து விட்டது" என்று அங்கலாய்க்கிறார்.

தன்னுடைய பெயரை மரியாதையுடன் அழைக்காததால் கொலைக் கோபம் கொண்ட யானை பற்றிக் கூறுகிறது, 10.6.2007 தின மலர்ச் செய்தி. கேரளாவின் கொல்லத்தில் “மணிகண்டா, இங்கே வா” என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டவரை மோதித் தள்ளிக் கொன்றார் மணிகண்டர் (என்கிற கோயில் யானை!).

சரித்திரம் கூறும் பெயர்கள்

தமிழன் எந்த ஒரு பெயரையும் ஒரு சரித்திரத்தின் சுருக்கமாகவே ஆக்கிக்கொண்ட அறிவாளன்.

1. ஐம்பத்து ஒரு ஊர்த் தொகுதியை ----- அம்பத்தூர் என்றழைத்தான்.

2. கோடு (மலை) + அம்பு + ஆக்கம் ---- திரிபுர அசுரர்களை அழிக்க சிவன் மேரு மலையை வில்லாக ஆக்கி அம்பு தொடுத்த இடத்தைக் கோடம்பாக்கமாக ஆக்கினான்.
(ஆதாரம் : வடபழனி ஸ்ரீவேங்கீஸ்வரர் ஆலயத் தல வரலாறு)

3. ஐந்து தலை நாகமாகக் குழந்தைத் தவம் வேண்டி நின்ற அனுசூயையின் கைகளில் பொருந்தி நின்ற ஆதிசேஷனைப் பதறிப் போன அனுசூயை நழுவ விட, கால்களில் விழுந்த அக்குழந்தைக்கு, பதம்(கால்) + சலி(விழு) ---- பதஞ்சலி என்று வணங்கினான்.

4. மகாகவி வால்மீகி பிறந்த ஊரை திரு+வால்மீகி+ஊர் ---- திருவான்மியூர் என்றான்.

5. அகத்தியர் ஈ வடிவில் இறைவனை வழிபட்ட மலைத்தலத்தை ---- ஈங்கோய்மலை என்றழைத்தான்.

6. ஐவர் (பாண்டவர்கள்) பாடி வழிபட்ட தலத்தை ஐவர்பாடி (தற்போது அய்யாவாடி) என்றான்.

7. இராமர் (இலங்கையிலுள்ள அசுரர்கள் தமிழகத்திற்குள் ஊடுறுவி விடக்கூடாதென
வீடணன் வேண்டிக் கொண்டபடி) தன்னுடைய தனுஷால் (வில்லால்) சேது பாலத்தைக் கோடிட்டுப் பிரித்த கடைக் கோடி இடத்தைத் தனுஷ்கோடி என்றழைத்தான்.
[b]
Back to top Go down
 
பெயரிலென்ன இருக்கு? (1)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~இது எப்படி இருக்கு?~~
» == Tamil Story ~~ படிக்க என்ன இருக்கு ?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: