உங்களுக்கு பிடித்த/பிடிக்காத சினிமா பற்றி விமர்சிக்க ...
Author
Message
karthis
Posts : 151 Points : 270 Join date : 2010-03-11 Age : 44 Location : chennai
Subject: உங்களுக்கு பிடித்த/பிடிக்காத சினிமா பற்றி விமர்சிக்க ... Mon Apr 12, 2010 7:03 am
Home alone:
(A family comedy without a fimily) இது தான் படத்தோட subtitle
கதை சுருக்கம்
நான் ரசித்து ருசித்து குடம்பத்துடன் பார்த்த குதூகலமான காமடி படம். உண்மையாக நன்னனின் வி-பு-சி-வார்த்தைக்கான உண்மையான அர்த்தத்தை இப்படத்தை பார்க்கும் அனைவரும் உணரலாம்..
kevin-இவர்தான் படத்தின் 8-வயதே ஆனா இளம் hero.. ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் முக்கியமானவர். . christmas கொண்டாட முழு குடும்பமும் மறுநாள் paris -க்கு உறவினர் வீட்டுக்கு போக இருக்கும்போது முதல் நாள் இரவு தன்னோட pizza -வா தன் சகோதிரன் சாப்பிட்டான் என்று kevin சண்டை போட அவனது அப்பாவும் அம்மாவும் 3-வது மாடியில் தூங்க வைத்து விடுகிறார்கள்.. தூங்குவதற்கு முன்னால் இந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் மறைய வைக்க வேண்டும் என்று அப்போது தன் நிம்மதி என்று சாபம் விடுகிறான்..அடுத்த நாள் அனைவரும் தாமதமாக எழுந்திரிக்க flight -க்கு நேரம் ஆச்சுனு அவசர அவசரமா அனைவரும் கிளம்ப kevin -ஐ மறந்து விடுகிறார்கள். இறுதியாக குழந்தைகள் தலையை எண்ணும்போதும் தவறுதலாக பக்கத்துக்கு வீட்டு சிறுவனை எண்ணிவிட kevin தூங்குவதை யாருமே கவணிக்கவில்லை. kevin பொறுமையாய் எழுந்திரிக்க தனது குடும்பத்தில் உள்ள அனைவரும் காணாமல் போனதை கண்டு திகைக்கிறான்.. தன் இரவு குடுத்த சாபத்தினால் முழு குடும்பமும் மறைந்து விட்டதாக எண்ணுகிறான்..
இவனுக்கோ கொண்டாட்டம், எதையெல்லாம் செய்ய கூடாதுன்னு வீட்டில் உள்ள அனைவரும் சொன்னதை அனைத்தையும் செய்து பாக்குறான். சண்டை படம் பார்பது, அண்ணனோட room -குள்ள பூந்து அனைத்தையும் கிளறுவது, கண்டதை தின்பது.. இன்னும் பல.
flight-இல் நடு வானில் தான் மகனை காணமல் போனதை உணர்ந்து parris -இல் இருந்து திரும்பவும் chicago செல்ல திட்டமிடும்போது ஒரு flight-உம் கிடைக்கவில்லை. இடையில் police -க்கு போன் பண்ணி வீட்டில் தன் மகன் இருப்பதை அறிய முற்படுகிறார்.. ஆனால் ஏற்கனவே தனது சகோதர சகோதிரிகள் பல பயமூட்டும் கதைகளை சொல்லி பயமுறுத்தி வைத்திருந்தனர். police வரும்போது வீட்டையே நிசப்தமாக வைத்துவிடுகிறான். அவரும் வீட்டில் யாரும் இல்லை என்று சொல்ல இறுதியாக ஒரு இசைக்குழுவுடன் வண்டியில் தாய் மட்டும் return ஆகிறார்.
pizza order பண்ணிட்டு அதுக்கு காசு குடுக்காமல் இருக்க tv-யில் படத்தின் பல பகுதிகளை freez பண்ணி situation -க்கு தகுந்த மாதிரி போட்டு தலை தெரிக்க ஓட வைத்துவிடுகிறார் நமது hero..
இரண்டு திருடர்கள் ஏற்கனவே வீட்டை கொள்ளையடிக்க நோட்டம் விட்டு சென்றிருப்பார்கள். அதை தெரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து வீட்டை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மீதி கதை..
பாவம் திருடர்கள் ஒரு சில seen களில் திருடர்கள் மீது நமக்கே பரிதாபம் வந்துவிடும் அளவிற்கு சிறுவன் லூட்டி அடித்திருப்பான்.
அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது முடிந்தால் இதில் பாருங்கள் புரியும்
படத்தின் trailer
karthis
Posts : 151 Points : 270 Join date : 2010-03-11 Age : 44 Location : chennai
ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் 1998 இல் வெளிவந்த இப்படம் 11-ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபெற்று முடிவில் 5-விருதுகளை (Best Cinematography, Best Sound, Best Sound Editing, Best Editing and Best Director) தட்டி சென்ற மிக பெரிய வெற்றி படம். இரண்டாம் உலக போரில் அமெரிகர்களுக்கும் ஜெர்மனியர்களுக்கும் ஒமஹா கடற்கரையில் (Omaha beachhead assault June 6, 1944) நடந்த தாக்குதலை அப்படியே நம் கண் முன்னே நிறுத்திய மிக சிறந்த திரைப்படம். முதல் 30-நிமிடங்கள் பார்த்தாலே போதும் விருதுகள் வாங்கியதற்கான அணைத்து காரணங்களும் உணரலாம்.
ஒரு வயதானவர் குடும்பத்துடன் கல்லறை தோட்டத்திற்கு செல்வதுபோலவும் ஒரு சிலுவையின் முன்னால் அப்படியே மண்டியிட்டு கதறி அழுவது போல ஆரம்பித்து காட்சியை அங்கேயே நிறுத்தி விட்டு அடுத்த காட்சி அதிகாலை June 6 1944-இல் ஒமஹா கடற்கரையில் தொடங்குகிறது.
அமெரிக்க வீரர்கள் படகுகளில் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து கடற்கரையை நேக்கி முன்னேறுகிறார்கள் படகுகின் கதவுகள் திறந்ததுதான் மிச்சம் ஜேர்மனி படையின் பதுங்கு குழி வீரர்களினாலும், இயந்திர துப்பகியினாலும், கனரக ஆயுதங்கள் மூலமாகவும் சின்னபினமகிரர்கள். ஜேர்மனியினர் கடற்கரை மேலே குன்றுகளில் இருந்து நடத்தும் தாக்குதலில் கடற்கரையிலிருந்து செல்லும் அமெரிக்க வீரர்களால் சமாளிக்க முடியாமல் பெரும்பாலானோர் இறந்து விடுகின்றனர்.
இதில் முதலில் இறங்கிய ஒரு Captain (John H. Miller கதையின் நாயகன்) மற்றும் எஞ்சிய வீரர்கள் அனைவரும் குழுவாக சேர்ந்து பல போர் நுணுக்கங்களாலும் மெதுவாக முன்னேறி ஜெர்மனி வீரர்களை ஒடுக்குகின்றனர்.. இதற்கிடையில் அமெரிக்காவில் General George C. Marshall-க்கு ஒரு தகவல் வருகிறது, அது "ரியான் குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரர்களும் போர்முனையில் இறந்துவிட்டதாக கருதப்பட்டது, அனால் அவர்களது தாயாருக்கு ஒரே நாளில் 3-வருடைய இறந்த தகவல் மட்டுமே கிடைக்கிறது". பின்பு தான் சகோதரர்களில் Private James Francis Ryan என்பவர் மட்டும் வேறொரு ரெஜிமேண்டில் ஒமஹா கடற்கரை ஒட்டிய நோர்மண்டி (Normandy) பகுதியில் இருபதாக அறிகிறார் Marshall.. அவர்கள் குடும்பதிற்காக ஒருவராவது வேண்டும் என்று உடனே Private Ryan யை கண்டுபிடித்து வீட்டுக்கு அனுப்புமாறு உத்தரவிடுகிறார்.
அந்த பொறுப்பு Captain John H. Miller ரிடம் கொடுக்கபடுகிறது. அவர் ஆறு வீரர்களை கொண்ட அணியினை உருவாக்கி தேடுதலை தொடங்குகிறார். வழியில் ஒரு சிறிய ஜெர்மனி படையை அழிக்கிறார் பின்பு பல இடர்பாடுகளை சமாளித்து கடைசியாக ரமேள்ளே (Ramelle) என்ற இடத்தை அடைகிறார் அங்கே தான் Private Ryan மற்றும் இருவரை சந்திக்கிறார். சகோதரர்கள் இறந்த செய்தியை தெரிவித்து உடனே வீட்டிற்கு கிளம்ப சொல்கிறார் Miller. அனால் Private Ryan மறுத்துவிட்டு அந்த ரமேள்ளே (Ramelle) நகரத்தை ஜெர்மனிவீரர்கள் கைப்பற்ற விடாமல் பாதுகாக்க செல்கிறார். உடனே miller-உம் தனது வீர்களுடன் நகரை காப்பாற்ற முயல்கிறார். இந்த இறுதிகட்ட சண்டையில் தன்னிடம் உள்ள 20-கும் குறைவான வீரர்களை வைத்துகொண்டு 50-கும் மேற்பட்ட வீரர்கள், இரண்டு பீரங்கி, மற்றும் நவீன ஆயுதங்கள் கொண்ட ஜெர்மனிபடையை எதிர்கொள்கிறார். பல்வேறு யுக்திகளை கையாண்டு படையை திணறடிக்கிறார். முடிவில் வேறு அமெரிக்க படையும் உதவிக்கு வந்து பீரங்கிகளை அழிக்கிறது. குண்டடி பட்டு Miller இறந்து விடுகிறார் முடிவில் Private Ryan சேர்த்து முவர் மட்டுமே உயிரோடு இருகிறார்கள்.. கதையின் ஆரம்பித்தில் அழுத வயதானவர் தான் Private Ryan .... Miller கல்லறையில்..
படத்தின் முதல் பாத்து நிமிடங்கள் இதில் காணுங்கள் நிச்சயம் பிடிக்கும்
உங்களுக்கு பிடித்த/பிடிக்காத சினிமா பற்றி விமர்சிக்க ...