karthis
Posts : 151 Points : 270 Join date : 2010-03-11 Age : 44 Location : chennai
| Subject: The Big Temple - Thanjavur தஞ்சை பெரிய கோவில் Wed May 12, 2010 7:11 am | |
| தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது. இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது. இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது. | |
|
karthis
Posts : 151 Points : 270 Join date : 2010-03-11 Age : 44 Location : chennai
| Subject: Popular Myths Wed May 12, 2010 8:20 am | |
| However, a few of the myths have been proved wrong. Myth No :1 - Cap Stone - முக்கிய விமானம் The cap-stone on the tower is not a monolith, but made of many parts. கோவில் விமானம் ஒரே கல்லில் செய்யப்பட்டது அல்ல. Myth No :2 - Gopuram does not cast a shadow at any time of the day outside its perimeter - கோபுர நிழல் he belief that the shadow of the temple does not fall on the ground turns out to be incorrect. இந்த கோபுர அமைப்பில் நிழல் தரையில் விழும் [புகைப்படம் பார்க்க] ஒருவேளை - இந்த வதந்தி பரப்பப்பட்டதற்கு முக்கிய காரணமே - மக்கள் ஆர்வத்தால் - அங்கு சென்று பார்த்து, ஆன்மீகப் பக்கம் அதிகமாக ஈர்க்கப்படவேண்டும் - என்ற நல்ல எண்ணம்தானோ என்னவோ? எப்பொழுதோ விகடனில் படித்த ஜோக் : தஞ்சாவூர் ஆலய கோபுர நிழல் - கீழே விழுவதில்லை - ஏன் தெரியுமா? பதில்: அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தால் அடி பட்டு விடுமே - அதனால்தான்! For Proof Visit - http://www.thehindu.com/mag/2010/01/10/stories/2010011050010100.htm | |
|