BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதொடரால் பெயர் பெற்ற புலவர்கள் Button10

 

 தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் Empty
PostSubject: தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்   தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் Icon_minitimeSat May 15, 2010 2:26 pm

கல்பொரு சிறுநுரையார்
*********
***********


காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது
அறியலர் கொல்லோ? அமை மதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம் ஆயின்
செறிதுனி பெருகிய நெஞ்சமோடு பெருநீர்க்
கல்பொரு சிறு நுரை போல
மெல்ல மெல்ல இல்லாகுதுமே“

(குறுந்தொகை- 290)

வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி அழிவுற்றுச் சொல்லியது.

தலைவி தலைவனின் பிரிவால் ஆற்றாமை மேலிட்டு தவிக்கிறாள்.தோழி வந்து நின் காமநோயைப் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்கிறாள். அதற்குத் தலைவி, அறிவுரை சொல்பவர்கள் காமத்தின் தன்மையையோ, அதனைப் பொறுத்துக்கொள்ளும் வலிமையும் உடையவரோ? என வினவுகிறாள்.

தன் நிலையைக் கல்லில் மோதி காணாமல்ப் போகும் கடலின் சிறுநுரையோடு ஒப்பிட்டு உரைக்கிறாள் தலைவி. கடலின் அலையில் தோன்றும் சிறு நுரை எவ்வாறு காணாமல்ப் போகுமோ அதுபோல தன் உயிரும் அழிந்துபடும் எனத் தன்னிலையை உரைக்கிறாள்.
இப்பாடலில் வெள்ளம் காமமாகவும், கல் பிரிவாகவும், சிறுநுரை தலைவியின் உயிராகவும். உவமம் கொள்ளப்பட்டதுஇவ்வுவமையின் சிறப்புக்கருதி இப்புலவர்
கல்பொரு சிறுநுரையார் என்னும் ப
ெயர் பெற்றார்.


THANKS:

Wikipedia


Last edited by Fathima on Sun May 30, 2010 8:35 am; edited 1 time in total
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் Empty
PostSubject: கொட்டம்பலவனார்   தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் Icon_minitimeSat May 15, 2010 2:27 pm

கண்ணுக்குத் தெரியாத மனம் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்சமல்ல.
மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனான் ஆனால் சுயநலம் கொண்ட சில மனிதர்களைப் பார்க்கும் போது இவர்களுக்கெல்லாம் மனம் என்றவொன்று இருக்கிறதா?
என்ற எண்ணம் தோன்றுகிறது.
மனம் இல்லாத இவர்கள் எப்படி மனிதராவர்கள்?
என்றும் தோன்றுகிறது.

மனதைப் பறிகொடுத்துவிட்டேன்!!

என பல சூழல்களில் நாம் சொல்வதுண்டு.

மனது எப்போது பறிபோகக் கூடும் என்பது யாருக்குத் தெரியும்?

பறிபோன மனதைத் திரும்பப் பெறுவது எப்படி?


மழலையின் சிரிப்பிலோ!
மழையின் சாரலிலோ!
காற்றின் உரசலிலே!
மலரின் வாசத்திலோ!
மேகத்தின் வடிவத்திலோ!
காகத்தின் கரைதலிலோ!
மயிலின் ஆடலிலோ!
குயிலின் கூவலிலோ!

இன்னும் இயற்கையின் பற்பல விந்தைகளில் ஏதோ ஒன்றிலோ மனதைப் பறிகொடுத்தால் சில நிமிடங்களில் பறிகொடுத்த மனதைப் பறிமுதல் செய்து கொள்ளலாம். ஆனால் இங்கு ஒரு தலைவன் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டுத் திரும்பப் பெற இயலாது தவிக்கிறான்.பாடல் இதோ,


“கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று
அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
5 1கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக்
குன்றகத் ததுவே 2 கொழுமிளைச் சீறூர்
சீறூ ரோளே நாறுமயிர்¢க் கொடிச்சி
கொடிச்சி கையத் ததுவேபிறர்
10 விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே.

நற்றிணை - 95.

கொட்டம்பலவனார்
திணை : குறிஞ்சி.
துறை : இது, தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து இத்தன்மைத்தென உரைத்தது.



நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்ட எம் தலைவியிடம் சிக்குண்டது என் மனது. அவளன்றி யாராலும் என் மனதை விடுவிக்க இயலாது என்று தலைவன் தன் நண்பனிடம் கூறுகிறான்.


பக்கத்திலே குழல் ஒலிக்க, பல இசைக்கருவிகள் முழங்க கயிற்றின் மீது கழைக்கூத்தி நடந்தாள். அந்தக் கயிற்றின் மேல் அத்திப்பழம் போல் சிவந்த முகத்தையும், பஞ்சு போன்ற தலையையும் கொண்ட குரங்கு ஆடியது. அதனைக் கண்டு குறவர்குல சிறுவர்கள் பெரிய பாறையின் மீது மூங்கிலின் மீது ஏறி நின்று தாளம் கொட்டுவர்.

அந்தக்குன்றகத்தில் வளம் நிறைந்த காவற்காடு ஒன்று உள்ளது. அங்கு நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்ட கொடிச்சி (குறிஞ்சி நிலப்பெண்) ஒருத்தி உள்ளாள். அவளிடம் சிக்குண்டது எனது நெஞ்சம். அவளிடம் சிக்கிய எனது நெஞ்சை அவளே மனம் வந்து விடுவித்தால் தான் உண்டு. அன்றி வேறு யாரும் விடுவிக்க இயலாதவாறு சிக்கிக்கொண்டது.

இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில்,

இப்பாடலில்
“தாளங்கொட்டுமென்ற சொல் சிறப்பினாலேயே இவ்வாசிரியர் கொட்டம்பலவனாரெனப் பெயர் பெற்றார்.

உட்பொருள்


ஆடுகள மகளான கூத்தி நடந்த கயிற்றின் மேல் மந்தியின் குட்டி ஏறி ஆடியது என்பது நேர்வழியில் வாழ்ந்துவரும் எனது நெஞ்சத்தில் கொடிச்சி (தலைவி) சென்று தங்குவதனை அறிந்த நீ கைகொட்டிச் சிரிக்கிறாய் (நகை) என்று பாங்கனை (நண்பனை) பார்த்து தலைவன் உரைப்பது உட்பொருளாகவுள்ளது.

மெய்ப்பாடு - வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - பாங்கனிடத்துரைத்தல்.

இப்பாடலின் வழியாக,
கொட்டம்பலவனார் என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், வருத்தம் பற்றி வந்த இளிவரல் என்னும் மெய்பாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் கயிற்றின் மேல் நின்றாடும் கழைக்கூத்தர்கள் இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் இருக்கிறார்கள் என்பதை ஒப்பு நோக்கமுடிகிறது..

அவர்கள் பொழுதுபோக்காக கயிற்றில் ஆடவில்லை!
தம் வயிற்றுப்பாட்டுக்காகத் தான் கயிற்றில் ஆடுகிறார்கள்!

என்ற உண்மையையும் மற
ுக்கமுடியாது.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் Empty
PostSubject: இம்மென்கீரனார்   தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் Icon_minitimeSat May 15, 2010 2:29 pm

இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே மனித வாழ்வியல்,
இன்பத்தை அன்பானவர்களிடம் பங்கிட்டுக்கொண்டால் இரண்டுமடங்காகும்,
துன்பத்தைப் பங்கிட்டுக் கொண்டால் பாதியாகக் குறையும்.

இன்பம் வந்தபோது பங்கிட்டுக்கொள்ள நண்பர்களைத் தேடும் மனது, துன்பம் வந்த போது யாருக்காகவும் காத்திருப்பதில்லை “அழுகை, புலம்பல்“ இவ்விரண்டில் ஒன்றாக வெளிப்படுகிறது...

இவ்விரண்டும் ஒரு வகையில் துன்பம் என்னும் மன அழுத்தத்தை நீக்கும் வாயில்கள் தான்..
மன அழுத்தம் அதிகமானால், நீடித்தால் மனப்பிறழ்வாகிவிடும் என்பது உளவியல்.

இங்கு ஒரு தலைவியின் அழகான புலம்பல்...


களவொழுக்கம் (காதல்) காரணமாக அலர் எழுந்தது. அதனால் தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும் ஆற்றிடம் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.


(காமம் மிக்க கழிபடர் கிளவியால் வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது.)

அஃறிணை உயிர்களிடம் பேசுவது அறிவுடைமை ஆகாது. ஆயினும் துன்பத்தில் வாடிய மனது இதை அறியாது. தலைவன் மீது கொண்ட அன்பு மிகுந்த தலைவி அதனை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியாள். தலைவன் தன்னைக் காணவராததால் அவன் மீது மிகுந்த வருத்தம் கொண்டாள். தன் வருத்தத்தை அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றிடம் இவ்வாறு வெளிப்படுத்துகிறாள்.


“பெரிய ஆண் புலியால் தாக்கப் பெற்று புண்பட்டு, பெண்யானையால் தழுவப் படும் வலிமை குன்றிய ஆண்யானை மூங்கிலால் செய்யப்பட்ட தூம்பு போல ஒலித்தற்கு இடனான எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே….

எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது!
மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று!
உடல் பாழ்பட பசலையும் படந்தது!
உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது!
இந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.

கலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..?

நான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்!

உன்னை மட்டும் ஊர்வழியே அனுப்பிவிட்டு அன்பும் அருளும் இன்றி என்னைத் துறந்து செல்லும் வன்மையுடையோரை என் தலைவன் என்பேனா?
அவரை என் அயலார் என்று கூறுதல் எவ்விதத்தில் தவறாகும்?

நீயோ நெடுந்தொலைவு வந்துள்ளாய்!
நின் ஓட்டத்தைத் தடுத்து தீயினைப் போன்ற மலர்களைப் பூத்து நிழல்தரும் வேங்கை நிழலிலே தங்கிச் செல்வாயாக!

ஆரியரின் பொன்கொழிக்கும் இமயமலையைப் போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கும் எம் தந்தையது காடான இங்கு இன்றைய பொழுது நீ தங்கிச் செல்லலாமே..!
இன்று நீ இங்கு தங்கிச் செல்வதால் உனக்கு ஏதும் தீங்கு நேர்வதுண்டோ..?

என வினவுகிறாள்..

பாடல் இதோ…


'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
5 பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
நன்று புறமாறி அகறல், யாழ நின்
10 குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
15 நயன் அறத் துறத்தல் வல்லியோரே,
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
தமிழில் மின்னூல்களைப் புதிதாக
அறிமுகப்படுத்துகிறோம்.
படித்துப் பயன்பெறவும்.
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
20 பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
25 ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!

இம்மென்கீரனார் (அகநானூறு-398)

இப்பாடல் வழி அறியலாகும் உண்மைகள்..

1.இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில் இப்பாடலில் இடம்பெறும்…

“நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று“

என்னும் அடியில் இடம்பெற்ற “இம்“ என்னும் சொல் இம்மென் கீரனார் என்று இப்புலவர் பெயர் பெறக் காரணமானது.

2. தலைவன் மீது கொண்ட மிகுந்த அன்பு காரணமாக ஆற்றாது புலம்பும் தலைவியின் நிலை காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் அகத்துறையை விளக்குவதாக அமைகிறது.

3. தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி தன் ஆற்றாமையை ஆற்றிடம் வெளிப்படுத்துகிறாள். இயல்பாக மலர் செறிந்து செல்லும் ஆற்றிடம் எனக்கு அஞ்சித் தான் நீ உன் உடலில் மலர் போர்த்திச் செல்கிறாய் என்கிறாள்.

4. தலைவனுடன் சேர்ந்திருக்க இயலாத வருத்தத்தில் இருக்கும் தலைவி, அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றுடனாவது சில காலம் தங்கியிருக்கலாம் என்று கருதி ஆற்றிடம் தன் ஊரில் தங்கிச்செல்லவேண்டும் என வேண்டுதல்
விடுக்கிறாள்.
Back to top Go down
Sponsored content





தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் Empty
PostSubject: Re: தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்   தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் Icon_minitime

Back to top Go down
 
தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிபிஐயின் தேடப்படுவோர் பட்டியல்: பிரபாகரனின் பெயர் நீக்கம், பொட்டு பெயர் நீக்கப்படவில்லை
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» சங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள் ----
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 27. ஆஸ்தானப் புலவர்கள்
» பெற்ற மனசு (1)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: