lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: சீயானின் சிலேடை Sun Mar 14, 2010 6:39 pm | |
| காதல் கொண்டவரின் இயக்கத்தில் நடிக்கிறார் அல்லவா சீயான்? இந்தப் படத்தை அதிவிரைவில் முடிக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் இவர் செய்து வருகிறார். குறிப்பாக காதல் கொண்டவரிடம் படத்தின் ஸ்கிரிப்டை கேட்டிருக்கிறார். ஸ்கிரிப்டை முழுமையாக முடிக்காமல் ஸ்பாட்டில் திணறும் காதல் கொண்டவருக்கு சீயானின் இந்த மூவ் ரொம்பவே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஸ்கிரிப்டை பார்த்தேன்னா அடுத்து நடிக்கப் போற இந்திப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க வசதியாக இருக்கும் என சீயான் மேலும் கூற, வேறு வழியில்லாமல் ஸ்கிரிப்டை முடித்திருக்கிறார். இப்படி பேசியே காதல் கொண்டவரை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாராம் சீயான். | |
|