lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: பிரச்சனையில் பிரகாச நடிகர் Sun Mar 14, 2010 6:58 pm | |
| பிரகாச ஹீரோவின் வீட்டில் ரெய்டுக்குப் போன அதிகாரிகளுக்கு பணமாக பெரிதாக ஒன்றும் சிக்கவில்லையாம். அதேநேரம் கணக்கில்லாத ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. தனது வீட்டில் ரெய்டு வராது என்று நினைத்திருந்த நடிகருக்கு இது பேரிடி. இந்த இடியின் வலி குறையும்முன், அவர் நடித்த ஆயிரம் யானைகள் படத்துக்கு எப்படி சிறந்த மாநிலப் படத்துக்கான விருது தரலாம் என சிலர் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். மலையாளி மேனனின் வாழ்க்கையை சொல்லும் படத்துக்கு தமிழ் மாநிலத்தின் சிறந்த படத்துக்கான தேசிய விருதா என்பதே அவர்களின் கேள்வி. நடிகரின் மனைவியின் அக்கா விருது கமிட்டியில் அங்கத்தினராக இருப்பதே இதற்கு காரணம் என்றும் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். | |
|