GVPrabu
Posts : 116 Points : 272 Join date : 2010-06-01 Age : 40 Location : Kuala Lumpur
| Subject: பூமியில் ஒரு வானவில்! Wed Jun 02, 2010 2:57 am | |
| வளைந்திருக்கவேண்டிய வானவில்லொன்று, கலைந்துப் போனதில்.. வானம் வர்ணமானது!
கலைந்துபோன வானவில்லைக் கண்டு! சற்றே கலங்கினர் கடற்கரை காதலர்கள்!
எண்ணற்ற நட்சத்திரங்களினிடையில் தோன்றும் வானவில்லை,
மண்ணென்ற நட்சத்திரங்களினிடையில் தோன்றவைப்போமா?!
காதலன் முடிக்குமுன்பே தயாரானாள் காதலி, வானவில்லைப் பெற்று தாயாகிட....
மண்ணில் கால் பதித்தனர். கண்ணில் கண் பதித்தனர், உயரே கரம் பதித்தனர்!
விழுந்தால்.....
நீ என்மீது, நான் உன்மீது! நாம் மண்மீது! -என்ற இடைவெளியில் விலகி நின்றனர்
ஆர்வம் தாளாமல்,
கடலுக்கடியிலிருந்த கற்பாறைகளெல்லாம் சிரமம் பார்க்காமல் சிரம் நீட்டின வெளியே,
கட்டியணைக்காத காதலர்கள் வழியே. கட்டியெழுப்பிய கரங்களின் வழியே,
உருக்குலைந்த வானவில் உருப்பெற்றது மீண்டும்!
இம்முறை பூமி வர்ணமானது! | |
|