Subject: HAPPY FATHERS DAY Thu Jun 10, 2010 7:44 pm
What Makes a Dad
God took the strength of a mountain, The majesty of a tree, The warmth of a summer sun, The calm of a quiet sea, The generous soul of nature, The comforting arm of night, The wisdom of the ages, The power of the eagle's flight, The joy of a morning in spring, The faith of a mustard seed, The patience of eternity, The depth of a family need, Then God combined these qualities, When there was nothing more to add, He knew His masterpiece was complete, And so,
He called it ... Dad
DADDY I LOVE YOU ....URE MY FIRST HERO ....
DADDY SHUU.... I HAVE GIFT FOR U .....HEHEHE...DAD ENJOY....
Last edited by !ANGEL_B! on Thu Jun 17, 2010 11:37 am; edited 1 time in total
GVPrabu
Posts : 116 Points : 272 Join date : 2010-06-01 Age : 40 Location : Kuala Lumpur
Subject: Re: HAPPY FATHERS DAY Fri Jun 11, 2010 12:53 am
Nice da... Chutty...
lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
Subject: Re: HAPPY FATHERS DAY Thu Jun 17, 2010 8:51 am
அன்னை தந்தை இருவரும் இணைந்தே எம் இருவரையும் படைத்தீர்கள் இருவரும் இணைந்து ஆக்கிய எம் உயிர் உடலை அன்னை பத்து மாதம் தன் வயிற்றில் சுமக்கிறாள் அல்லும் பகலும் எமை வளர்க்க அயராது உழைக்கிறார்கள் கண்ணை இமை காப்பது போல எம் இருவரையும் காக்கிறார்கள் பசி என்று நாம் சொல்லு முன்னே அன்னம் ஊட்டி இருவரும் மகிழ்கிறார்கள் அல்லும் பகலும் எம் இருவர் உயர்வுக்காக அயராது உழைக்கிறார்கள் ஒவ்வொரு வினாடியும் எம் இருவரையும் அன்போடு அணைத்து அறிவுறை பல கூறி அயலவர் போற்ற எம்மை வளர்க்கும் அம்மாவின் பங்கோ அபரிதமானது அப்பாவின் பங்கோ ஆலமரம் போன்றது இப்படியான எங்கள் அன்பான அப்பாவைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறி மீண்டும் பிறந்தால் நாம் இருவரும் உங்கள் பிள்ளைகளாகவே பிறக்க வரம் வேண்டும் காலம் எல்லாம் உங்கள் மடி மீது கண்ணுறங்க வேண்டும் என எங்களை ஆளாக்கி வரும் எங்கள் அப்பாவை என்றென்னும் இதயத்தில் வைத்துப் பூசிப்போம்
from
Last edited by lakshana on Fri Jun 18, 2010 6:05 am; edited 1 time in total
Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
Subject: Re: HAPPY FATHERS DAY Thu Jun 17, 2010 4:45 pm
நான் கண்ட முதல் ஆண் நீ....
நான் பூமியில் நேசித்த முதல் மனிதன் நீ............]
நான் பிறந்ததும் என்னை ஏந்திக்கொண்ட முதல் கரங்களுக்குரியவன் நீ..........
என்னை பாதுகாப்பதற்காக உன்னை வருத்திக்கொண்ட தேவன் நீ......
என்னை தூங்க வைப்பதற்காக உன்னிடம் இருந்த கற்பனை எல்லாம் செலவளித்தவன் நீ.
என் வளர்ச்சியில் அதிகம் ஆனந்தம் கண்டு நெகிழ்ந்தவன் நீ.....
நீ அதிகம் பேசியது இல்லை.ஆனால் உன் பார்வையும்,மௌனமும் உணர்த்தியவை அதிகம்.
e]அடியை விட உன் ஒரு கடின பார்வையும்,ஒரு சுடு சொல்லும் உணர்த்தியது ஒரு தப்பின் வீரியத்தை.
நீ தான் இந்த உலகத்தில் சிறந்த அப்பா.
dubaisurya
Posts : 117 Points : 279 Join date : 2010-03-09 Age : 44
Subject: அப்பா... Thu Jun 17, 2010 8:55 pm
அப்பா...
எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா...
முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது
உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என...
கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..?
சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
லேசாக என் கால் தடுமாறினாலும் பதறுவார் அப்பா இன்று அவர் தடுமாறிய போது அருகில் நான் இல்லை...
அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன்
அம்மா செல்லமான அப்பா செல்லம் என.
எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும்..?
]
அம்மாவிடம் பாசத்தையும் அப்பாவிடம் நேசத்தையும் இன்றே உணர்த்துங்கள் சில நாளைகள் அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...
பாசத்துடன்
Dubai Surya
NaviNesh
Posts : 249 Points : 572 Join date : 2010-05-24 Age : 35 Location : The Little World Of Cuties
Subject: Re: HAPPY FATHERS DAY Fri Jun 18, 2010 1:26 am