இதோ உலகத் தமிழ்செம்மொழி மாநாடு தொடங்கப் போகிறது...!!
எனது தலைவர் கலைஞரின் நீண்ட வாழ்நாள் கனவு, கோவையில் மிளிரப் போகும் செம்மொழி மாநாட்டிற்கு முன் 3 மாநாடுகள் தமிழ் நாட்டில் நடந்தன..!!
பேரறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் 1968 ஜனவரியில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது. ஜனாதிபதி ஜாஹிர் உசேன் தொடங்கி வைத்தார்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த பொழுது 1981 ஜனவரியில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டினை நடத்தினார். அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கலந்து கொண்டார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து அன்றைய பிரதமர் நரசிம்மராவ், துணை ஜாதிபதி கே.ஆர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு தஞ்சையில் ஜனவரி 1995ல் நடைபெற்ற எட்டாவது உலகத் த்மிழ் மாநாடு (அ) அதிமுக மாநில மாநாடாய் நடந்தது.
நான்கு முறை முதலமைச்சராயிருந்தும், கிட்டத்தட்ட 4 மாநாடுகளில் கலந்து கொண்டிருந்தும், அவரால் ஒரு உலகத்த் தமிழ் மாநாடு நடத்த முடியவில்லையே என்ற வருத்தம் தலைவரை உறுத்த இதோ இன்று அதற்கு மணிமகுடமாய் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துகின்றார்...!!
ஒவ்வொரு தமிழனும் பாராட்டக்கூடிய, பெருமை அடையக்கூடிய ஒரு நல்ல விஷயம் நாளை கோவையில் அரங்கேற்றமாகிறது. அதற்கு முன் செம்மொழியாம் தமிழ் மொழியின் தாயகமாம் தமிழ் நாட்டில் தமிழ் பற்றிய சில விபரங்கள் இங்கே சொல்வது தேவையாய் இருக்கிறது.
ஐந்தாம் உலக்த் தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் செயல்படுமெனத் தெரிவித்தார். அவர் 14.15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். ஆனால் இன்று அங்கு கழிவுநீர் ஓடுகிறது. அதற்குப் பின் மூன்று முறை முதல்வராய் இருந்த கலைஞர் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வருடம் தான் உலகத் தமிழ்ச் சங்கத்தை , "தொல்காப்பியர் உலகத்தமிழ்ச் சங்கமாய் " மாற்றி அறிவித்து அறிவிப்போடு நிற்கிறது...!! இதனையும் ஆக்கப்பூர்வ செயல்பாடு உடையதாக மாற்ற வேண்டும்.
தமிழ் நம் தாய்மொழியாயினும், நமக்கு முறையாய் தமிழை இலக்கணத்தோடு பயிற்றுவிப்பவர்கள் தமிழாசிரியர்கள்..!! தமிழாசிரியர்களின் தமிழக நிலை என்ன? என்று ஆராய்ந்து பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது..!!
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் 7000 தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலிருக்கிறது. சரி தமிழ்ப் பட்டதாரிகள் அதிகமாக இல்லையோ என்று நினைத்தால் அது அதை விடக் கொடுமை..!! "வேலை இல்லாத தமிழ்ப் பட்டதாரிகள் சங்கம் " வைத்துக் கோரிக்கைகள் வைக்கும் கொடுமையும் தமிழ் நாட்டில் தானிருக்கிறது...!!
மொத்தமுள்ள 7800 நடுநிலைப் பள்ளிகளில் 600 பள்ளிகளுக்கு மட்டுமே தமிழாசிரியர்கள் இருக்கிறார்களாம். 772 மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைத் தமிழாசிரியர்கள் 9 ஆண்டுகளாய் இல்லையாம்..!! உயர்நிலைப் பள்ளிகளில் சுமார் 200 பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை..!!
இதில் எங்கே எங்கும் தமிழ்..!! எதிலும் தமிழ்..!!??
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சென்னைப் பிரிவு தரமணியில் இயங்குகிறது. 1971ல் கலைஞரால் தொடங்கப் பட்ட கட்டிடம் அது. இன்றுமிகப் பரிதாபமான நிலையில் எப்போது இடிந்து விழுமோ என்று கேட்கிறது.!! தமிழ்த் துறை தொடர்பான கிட்டத்தட்ட ஒரு லட்சம் அரிய புத்தகங்கள், மழை ஒழுகும் கட்டிடங்களுக்கிடையே பரிதாபமாக காட்சியளிக்கிறது. உள்கட்டமைப்பு வேலைகளுக்காக 3 கோடி திட்ட்ச் செலவு கேட்டு அரசிடம் கொடுத்துக் காத்துக் ஒண்டிருக்கிறார்களாம்..!!
இந்த நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது.. இம்மாநாட்டினை நடத்தும் ஒரே தகுதியையும் தலைவர் கலைஞர் அவர்களே பெற்றுள்ளார். காரணம் தமிழனின் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் பின்னி பினைந்து கிடப்பது அவரின் தமிழ்.
தமிழுணர்வு கொண்ட எங்கள் தலைவர் கலைஞர் இவற்றையெல்லாம் இனி வரும் காலங்களில் நிறைவேற்றி காலத்தால் அழியா புகழுக்கு சொந்தக்காரர் என பெயரெடுக்க வேண்டும், என்னை போன்ற தொண்டனின் வேண்டுகோளும் இதுவே.
எம் மொழி செம்மொழியான தமிழ் மொழியைப் போற்றி இந்த “செம்மொழி மாநாடு” சிறக்க துபாயிலிருந்து எனது வாழ்த்துக்களை எமது BTC யின் மூலமாக தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வாழ்த்துக்களுடன்
ப்ரியமுடன்
துபாய்