எனது இனிய BTC தோழர்களே! வணக்கம்.
நம்மில் பலருக்கு தமிழ் படிக்க தெரிந்தும் கண்ணினியில் தங்லீஸ் மூலம் சிலவற்றினை எழுது வருகின்றோம். தமிழ் எழுத தெரியாதவர்கள் ஆங்கிலத்தி தமது கருத்தினை எழுதினால் பரவாயில்லை. ஆனால் தமிழ் நன்கு எழுத தெரிந்தும் பிற மொழி கலப்பின சொற்களை இங்கு பயன்படுத்துவது வேதனையான ஒன்று. கீழே வ்நான் குறிப்பிட்டுள்ளது நம்மில் பலருக்கு அறிந்திருக்க கூடும். தெரியாதவர்கள் இதனை தெரிந்து கொண்டு பயனடைவோம்.
ஒருங்குறி தமிழில் (unicode tamil) எழுதுவதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்று இதுவாகும். இது ஒலியன் ( phonetic/ transliterate) அடிப்படையில் அமைந்ததாகும்
இ - கலப்பை (http://thamizha.com/ekalappai-anjal) இவ் இணைப்பில் சொடுக்கி (click) பதிவிறக்கம் செய்து உங்கள் கணனியில்
நிறுவிய பின்னர், Alt+1 ஐ அழுத்தி ஆங்கிலத்திலும் Alt+2 ஐ அழுத்தி தமிழிலும் மாறி மாறி தட்டச்சு செய்யலாம். நகலெடுத்தல்
ஒட்டுதல் (copy , paste ) செய்ய வேண்டிய அவசியமில்லை. இணைய அரட்டை செய்யும் போது தமிழ், ஆங்கிலத்தில் மாறி மாறி
விரைவாக தட்டச்சு செய்ய முடியும். அத்துடன் இது பல ( applications : eg : MS office, notepad, IE explorers and so on)
பிரயோகங்களுடன் ஒத்திசைந்து தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது.
மேலதிக உதவிகள்
உயிரெழுத்துக்கள்
அ = a, ஆ = aa அல்லது A, இ = i , ஈ = ii அல்லது I உ = u , ஊ = uu அல்லது U
எ = e , ஏ = ee அல்லது E , ஐ = ai, ஒ = o , ஓ = oo அல்லது O , ஔ = au
ஆய்த எழுத்து
ஃ = q
மெய் எழுத்துக்கள்
க் = k அல்லது g, ங் = ng, ச் = s அல்லது c , ஞ் = nj அல்லது X , ட் = d அல்லது t , ண் = N,
த் = th, ந் = w , ப் = p அல்லது b, ம் = m , ய் = y , ர் = r ,
ல் = l , வ் = v, ழ் = z , ள் = L , ற் = R, ன் = n
விசேட எழுத்துக்கள் ( வட மொழி எழுத்துக்கள் -மெய்)
ஜ் = j, ஷ் = Z அல்லது sh, ஸ் = S, ஹ் = ன் , க்ஷ் = ksh
விசேட எழுத்துக்கள்
க்ஷ் = ksh
ஸ்ரீ = sr
ந்த் = nth
உயிர்மெய் எழுத்துக்கள்
க = க்+அ = ka , கா = (க்+ஆ) =kA அல்லது kaa , கி = (க்+இ) = ki , கீ = (க்+ஈ) = kii அல்லது kI , கு = (க்+உ) = ku கூ =
(க்+ஊ) = kU அல்லது kuu,
கெ = க்+எ = ke , கே = (க்+ஏ) = kE அல்லது kee, கை = க்+ ஐ = kai, கொ = (க்+ஒ) = ko, கோ = க்+ஓ = koo அல்லது kO,
கௌ = (க்+ஔ) = kau
உதாரணங்கள் சில..
அம்மா - ammaa அல்லது ammA
வணக்கம் - vaNakkam
நன்றி - wanRi
( please Note the Capital & small letter diff)
இது போன்று ஏனைய உயிர்மெய் எழுத்துக்களையும் எழுத முடியும்.
எங்கே தமிழில் எழுதுங்கள் பார்க்கலாம்.. அத்துடன் உங்கள் நண்பர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்தவும்...
தேமதுரத் தமிழோசை உலகெலாம் இணையம் வழி பரவச் செய்வோம்
- ப்ரியமுடன்