Click "Like" Button To Join | |
|
| மிளகாய் பஜ்ஜி (Only Vege.) | |
| | Author | Message |
---|
J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: மிளகாய் பஜ்ஜி (Only Vege.) Mon Jun 28, 2010 10:00 pm | |
| மிளகாய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
குடை மிளகாய் - 10 கடலை மாவு - 4 மேஜைக்கரண்டி அரிசிமாவு - 2 மேஜைக்கரண்டி மைதாமவு - 2 மேஜைக்கரண்டி சோடாஉப்பு - சிட்டிகை காயப்பொடி - சிட்டிகை சில்லி பவுடர் - கால் ஸ்பூன் கலர் - சிட்டிகை உப்பு - தேவைக்கு எண்ணெய் - 200 மில்லி
செய்முறை:
குடை மிளகாயைப் பாதியாக கீறி விதை நீக்கி காம்போடு கழுவி வைக்க வேண்டும். எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் சேர்த்து கெட்டியாக கரைத்து வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவில் மிளகாய் தோய்த்து போட்டு சிவக்க, எண்ணெய் கொதி அடங்கியதும் எடுக்க வேண்டும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: நெல்லிக்காய் ஊறுகாய் Mon Jun 28, 2010 10:01 pm | |
| நெல்லிக்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 10 எலுமிச்சம்பழம் - 5 வெந்தயம் - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 1/4 கப் மிளகாய்த்தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்க வேண்டும். நெல்லிக்காய் சூடு ஆறியதும், உதிர்த்து கொட்டை நீக்க வேண்டும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து தூளாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்க வேண்டும். தாளித்த பொருட்களை ஊறுகாயுடன் சேர்த்து உடனடியாக பரிமாற வேண்டும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: பீன்ஸ் பொரியல் Mon Jun 28, 2010 10:02 pm | |
| பீன்ஸ் பொரியல்
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - அரைக்கிலோ வெங்காயம் - 1 பூண்டு மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து பெருஞ்சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி தக்காளி பேஸ்ட்- ஒரு கரண்டி எண்ணெய் -தாளிக்க உப்பு -தேவையான அளவு
செய்முறை:
பீன்ஸ், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். அதில் பூண்டு மிளகாய் பொடியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அதில் பீன்ஸை போட்டு கிளறி மூடியை போட்டு வேகவிட வேண்டும். வெந்ததும் தக்காளி பேஸ்ட் போட்டு இரண்டு நிமிடம் கிளறி இறக்க வேண்டும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: தக்காளி குடைமிளகாய் சூப் Mon Jun 28, 2010 10:03 pm | |
| தக்காளி குடைமிளகாய் சூப்
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி - 7 குடைமிளகாய் - 1 வெங்காயம் - 1 மிளகுத்தூள் – தேவையான அளவு வேகவைத்த காய்கறிகளின் தண்ணீர் - 1 கப் இஞ்சி - சிறிய துண்டு எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பெரிய பெரிய துண்டுகளாக அரிய வேண்டும். இஞ்சியை சிறிதாக அரிய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு எல்லாவற்றையும் லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். வெந்த பின் ஒரு தட்டில் பரப்பி ஆறவிட வேண்டும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வடிகெட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் உப்பு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்க வேண்டும். சூடான பின் மிளகுதூள் தூவி உடனே பரிமாற வேண்டும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: உருளை பாயாசம் Mon Jun 28, 2010 10:04 pm | |
| உருளை பாயாசம்
தேவையான பொருட்கள்:
உருளை - 1/4கிலோ மில்க்மெயிட் - 4டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 200கிராம் நெய் - 4டீஸ்பூன் பால் - 1லிட்டர் முந்திரி - 10 ஏலப்பொடி - 1பின்ச் திராட்சை - 10
செய்முறை:
உருளையை தோல் உரித்து கேரட் சீவியால் துருவிக் கொள்ள வேண்டும். ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு உருளை சீவலை பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும்.
காய்ச்சிய பாலை விட்டு நன்கு கிளற வேண்டும். சர்க்கரை சேர்த்து பாலும், உருளை சீவலும் சேர்ந்து வரும் வரை கிளற வேண்டும். சர்க்கரை, மில்க் மெயிட் சேர்க்க வேண்டும். மீதி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலத்தூள் சேர்த்து சிறு பவுல்களில் ஊற்றி பறிமாற வேண்டும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: காளான் குருமா Mon Jun 28, 2010 10:05 pm | |
| காளான் குருமா
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 100 கிராம் சோம்பு - 1/2 தேக்கரண்டி கசகசா - 1/4 தேக்கரண்டி தேங்காய் - 1/4 மூடி மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பட்டை - 3 கிராம்பு - 3 மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை - 1 கொத்து
செய்முறை:
காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் வெட்டிய காளானைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக சிறிது நேரம் அடுப்பை மெல்லிய தீயில் எரியவிட்டு, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லி தழை சேர்க்க வேண்டும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: பீட்ரூட் அல்வா Mon Jun 28, 2010 10:06 pm | |
| பீட்ரூட் அல்வா
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2 பால் - 2 மேஜைக் கரண்டி கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி நெய் - 1/2 கோப்பை ஏலக்காய் - 4 உலர்ந்த திராட்சை - 5 சர்க்கரை - 1 1/2 கோப்பை வறுத்த முந்திரி - 10
செய்முறை:
1. பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ள வேண்டும்.
2. துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விட வேண்டும். வேகும் போது நன்கு கிளறி விட வேண்டும்.
4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: வாழைப்பழ டெஸர்ட் (குழந்தைகளுக்கு) Mon Jun 28, 2010 10:07 pm | |
| வாழைப்பழ டெஸர்ட் (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்:
• 1. பழுத்த வாழைப்பழம் - 2 • 2. தயிர் - 1 கப் • 3. தேங்காய் துருவல் - 1/2 கப் • 4. முந்திரி, திராட்சை (விரும்பினால்) • 5. எலுமிச்சை சாறு - சிறிது
செய்முறை:
• பழத்தை வட்டமாக வெட்டி எலுமிச்சை சாறில் பிரட்டி வைக்க வேண்டும். • தேங்காய் லேசாக வறுக்க வேண்டும். • முந்திரி, திராட்சை நெய்யில் வறுக்க வேண்டும். • அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாற வேண்டும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: முட்டைகோசுப் பொரியல் Mon Jun 28, 2010 10:09 pm | |
| முட்டைகோசுப் பொரியல்
தேவையான பொருட்கள்:
முட்டைகோசு - 1 தேங்காய் - 1 தக்காளி - 50 கிராம் வெங்காயம் - 25 கிராம் பூண்டு - 10 கிராம் மிளகு - அரைத்தேக்கரண்டி சீரகம் - அரைத்தேக்கரண்டி இஞ்சி - ஒரு துண்டு கொத்தமல்லி - ஒரு கட்டு மிளகாய்ப்பொடி - ஒரு மேசைக்கரண்டி புளி - 5 கிராம் சர்க்கரை - ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி - அரைத்தேக்கரண்டி எண்ணெய் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயை உடைத்துத் துருவி பாதியை எடுத்து வைத்து விட்டு மீதியைப் பால் பிழிந்து கொள்ள வேண்டும். கொத்தமல்லியை வேரை நீக்கி, அத்துடன் எடுத்து வைத்த தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உரித்த பூண்டு இதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். புளியுடன் பாதி உப்புப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஊறவைக்க வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்துத் தோலை நீக்கி பழத்தை மத்தால் மசித்துக் கொள்ள வேண்டும். முட்டைகோசை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு, பாதி உப்பு போட்டு அடுப்பில் வைத்து மூடியால் மூடிவிட வேண்டும். | |
| | | Sponsored content
| Subject: Re: மிளகாய் பஜ்ஜி (Only Vege.) | |
| |
| | | | மிளகாய் பஜ்ஜி (Only Vege.) | |
|
| Permissions in this forum: | You cannot reply to topics in this forum
| |
| |
| |