சற்றும் துளி குறையா நிறையன்பு
வயது குறையா காதல்
கிள்ளும் பசிக்கு கொள்ளுமளவு சோறு
உவர்ப்பு நீர் தெறித்த கூலி
போலியில்லா புன்னகை
உள்வைத்து புறமொன்றில்லா வார்த்தைகள்
சிந்திய ரத்தம் சுவாசிக்க சுதந்திரம்
எம் மண் எனும் உரிமை
இது போதும் ...
வேறெந்த
சொர்க்கமும் வேண்டி நிற்கவில்லை.
- ப்ரியமுடன்