BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inEnglish Class 25 Button10

 

 English Class 25

Go down 
AuthorMessage
Tom Cruise




Posts : 149
Points : 448
Join date : 2010-06-30
Age : 32
Location : pondicherry

English Class 25 Empty
PostSubject: English Class 25   English Class 25 Icon_minitimeTue Jul 27, 2010 5:06 am

Tuesday, February 17, 2009
ஆங்கில பாடப் பயிற்சி 25 (Grammar Patterns 7)
இதுவரை Grammar Patterns -1 றின் இலக்கவரிசைப் படி ஒவ்வொரு வாக்கியத்தையும் விரிவாகப் பார்த்து வருகின்றோம். அதன்படி கடந்தப் பாடத்தில் 26 வதாக வாக்கியத்தை விரிவாகப் பார்த்தோம். இன்று விரிவாகப் பார்க்க வேண்டியது 27 வது வாக்கியத்தையாகும். ஆனால் இன்று இவ்வாக்கியத்தை விரிவாகப் பார்க்கப்போவதில்லை. காரணம் இந்த 27 வது வாக்கியம் Perfect Tense வாக்கியமாகும்.

இதனை விரிவாகக் கற்பதற்கு முன் இவ்வாக்கியத்துடன் தொடர்புடைய கிரமர் பெட்டனை (Perfect Tense) இன்று வழங்குவது பொருத்தமாக இருக்கும் என கருதுகின்றோம்.

நாம் ஏற்கெனவே கற்ற கிரமர் பெட்டன்களைப் போன்று இதனையும் (வாய்ப்பாடு பாடமாக்குவதைப் போல்) மனனம் செய்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம். மனனம் செய்துக் கொண்டீர்களானால் எமது பயிற்சிகளைத் தொடர்வது மிக எளிதானதாக இருக்கும்.

1. I have done a job. (Present Perfect)
நான் செய்திருக்கிறேன் ஒரு வேலை.

2. I have just done a job.
நான் இப்பொழுது (தான்) செய்திருக்கிறேன் ஒரு வேலை.

3. I had done a job. (Past Perfect)
நான் செய்திருந்தேன் ஒரு வேலை.

4. I had done a job long ago.
நான் செய்திருந்தேன் ஒரு வேலை (வெகுக்காலத்திற்கு) முன்பு.

5. I wish I had done a job.
எவ்வளவு நல்லது நான் செய்திருந்தால் ஒரு வேலை.

6. I will have done a job. (Future Perfect)
நான் செய்திருப்பேன் ஒரு வேலை.

7. I have been doing a job. (Present Perfect Continuous)
நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்திருக்கிறேன் ஒரு வேலை.

8. I had been doing a job. (Past Perfect Continuous)
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்திருந்தேன் ஒரு வேலை.

9. I will have been doing a job. (Future Perfect Continuous)
(குறிப்பிட்டக் காலத்தின் பின்) நான் செய்திருப்பேன் ஒரு வேலை.

10. He may have done a job.
அவன் செய்திருக்கலாம் ஒரு வேலை.

11. He might have done a job.
அவன் செய்திருக்கலாம் ஒரு வேலை.

12. He must have done a job.
அவன் நிச்சயம் செய்திருக்க வேண்டும் ஒரு வேலை.

13. He would have done a job.
அவன் செய்திருக்க வேண்டும் ஒரு வேலை.

14. He could have done a job.
அவன் செய்திருக்க இருந்தது ஒரு வேலை.

15. He should have done a job.
அவன் செய்திருக்கவே இருந்தது ஒரு வேலை.

16. He shouldn’t have done a job. (should + not)
அவன் செய்திருக்கவே வேண்டியதில்லை ஒரு வேலை.
அவன் அநியாயம் செய்தது ஒரு வேலை. (போன்றும் பொருள் கொள்ளலாம்/பேசலாம்)

17. He needn’t have done a job. (need + not)
அவன் செய்திருக்க (அவசியமில்லை) வேண்டியதில்லை ஒரு வேலை.

18. He will have been done a job.
அவன் செய்திருப்பான் ஒரு வேலை.

19. He seems to have done a job.
அவன் செய்திருப்பான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

20. Having done a job I got experience.
செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை நான் பெற்றிருப்பேன் அனுபவம்.

பயிற்சி

கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியத்தையும் 20 விதமான வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதவும். அவை கூடிய விரைவில் உங்கள் மனதில் பதிந்து விடும். அதுவே ஆங்கிலம் கற்பதற்கான மிக எளிதான வழி.

1. I have done - நான் செய்திருக்கிறேன்.
2. I have written - நான் எழுதியிருக்கிறேன்.
3. I have chosen - நான் தெரிவுசெய்திருக்கிறேன்.
4. I have worked - நான் வேலைசெய்திருக்கிறேன்.
5. I have watched. - நான் பார்த்திருக்கிறேன்.
6. He has spoken - அவன் பேசியிருக்கிறான்.
7. He has started. - அவன் ஆரம்பித்திருக்கிறான்.
8. She has cooked. - அவள் சமைத்திருக்கிறாள்.
9. She has visited - அவள் போயிருக்கிறாள்.
10. She has walked - அவள் நடந்திருக்கிறாள்.

கவனிக்கவும்

இந்த "Perfect Tense" வாக்கியங்களில் பிரதான வினைச்சொல் எப்பொழுதும் "Past Participle" சொல்லாகவே இருக்கும் என்பதை மறவாதீர்கள். மேலும் சொற்களின் வேறுப்பாட்டை "Irregular verbs" அட்டவணையைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் கேள்விகள்

எமக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல் கேள்விகளின் அதிகமானவைகள் “Perfect Tense” தொடர்பானதாகவே இருந்தது. அதனாலேயே இவற்றை பிரத்தியேகமான ஒரு பாடமாக வழங்குகின்றோம்.

உதாரணம்: நீ அமெரிக்காவுக்கு போயிருக்கிறாயா? என ஒருவர் உங்களிடம் கேள்வி கேட்டால் “ஆம்” என்றோ “இல்லை” என்றோ சுருக்கமாக பதிலளிக்கலாம். ஆனால் “ஆம், நான் பலமுறை அமெரிக்காவுக்கு போயிருக்கிறேன்.” என்று கூற வேண்டுமானால் அப்பதிலை “Present Perfect Tense” வாக்கியத்திலேயே பதிலளிக்க வேண்டியதாக இருக்கும்.

I have visited.
நான் போயிருக்கிறேன்.

I have visited America several times.
நான் போயிருக்கிறேன் அமெரிக்காவுக்கு பல தடவைகள்/பல முறை.

(குறிப்பு: இவ்வாக்கியத்தை போகிறேன், போகின்றேன், போனேன் என்பதுப் போல் குழப்பிக்கொள்ள வேண்டாம்)

மேலும் இப்பாடத்தில் உள்ள ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாகத் தொடரும். அப்போது அதனதன் வாக்கியங்கள் தொடர்பாக மேலும் விரிவாகக் கற்றுக்கொள்ளலாம்.
Back to top Go down
 
English Class 25
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» English Class 11
» English Class 28
» English Class 12
» English Class 13
» English Class 15

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: