நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஒடிவா என்று
பாட்டு பயின்ற காலத்திலே
எட்டி பிடித்து நிலவை
கட்டி புரண்டு விளையாட எண்ணி
தூரமாய் இருந்த நிலா அது சிரிக்க
ஓரமாய் உட்கார்ந்து அழுதேன் அன்று
கடற்கரை மணலிலே
சின்ன சின்ன விரலால்
வீடு கட்டி விளையாட
பேயாக சீறி வந்த அலை ஒன்று
நேராக வீட்டினிலே புகுந்து--அதை
கரைத்து இழுத்து சென்று
கடலோடு சேர்த்தது அன்று
இம்சை பண்ணவே
அம்சமாக இருக்கும் உன்னை
பார்த்து பார்த்து ரசித்து ரசித்து
மனசுக்குள்ளே கட்டிய கோட்டை
உன் மாமனோடு உனக்கு கல்யாணம் என்று
விதி வைத்த வேட்டால்
உடைந்து தூளகியதே இன்று