lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: உணவு... மனம்... கவனம்! Mon Aug 02, 2010 10:08 am | |
| "ருசியான உணவுகள் என்பதைவிடவும் ஆரோக்கியமான உணவுகள்தான் முக்கியம். அதற்காக தீவிரமான பத்தியம் இருக்கத் தேவை இல்லை. சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும் மேற்கொண்டால் போதும்!" என்று உணவுப் பழக்கங்கள் பக்கம் கவனம் திருப்புகிறார் டயட்டீஷியன் பூங்கோதை.
"காலை உணவுக்கு புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைக் காலையில் சாப்பிடுவது மிகவும் மந்தமான மனநிலையைத் தரும். மதியமும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். 'வெள்ளை நிற' உணவுகளான அரிசிச் சாதம், சர்க்கரை, பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு சாலட், மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த உணவுகளை எடுக்கும்போது எல்லாம் உங்களுக்கு மந்த நிலை ஏற்படுகிறதோ அந்த உணவுகளைத் தவிர்ப்பது நலம்.
காபி அருந்துவதைத் தவிர்த்து டீ அருந்தலாம். ஆனால், அதுவும் மிதமிஞ்சிப் போகக் கூடாது. ஆரஞ்சு, தக்காளி போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகளை அதிகம் உண்பது மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளையும் உட்கொள்ளலாம்.
மதியம் சாப்பிட்டவுடன் குட்டித் தூக்கம் போடுவதில் தவறு இல்லை. ஆனால், அதுவே நீண்ட நேரத் தூக்கமாக மாறிவிடக் கூடாது. அவ்வப்போது நடப்பது, சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பகல் நேர மந்தநிலையைச் சமாளிக்கலாம். ஆர்டிஃபீஷியல் கலரிங் உள்ள உணவுகளைத் தவிர்த்து, தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலமாக மனதை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கலாம். கவனமும் மேம்படும் | |
|