BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ நகைச்சுவை நேரம் ~~ Button10

 

 ~~ நகைச்சுவை நேரம் ~~

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ நகைச்சுவை நேரம் ~~ Empty
PostSubject: ~~ நகைச்சுவை நேரம் ~~   ~~ நகைச்சுவை நேரம் ~~ Icon_minitimeWed Nov 24, 2010 7:57 am

நகைச்சுவை நேரம்






"உங்க தாத்தாவுக்கு ஹார்ட் ரொம்ப வீக்காயிருக்கு!"

"அது இன்னும் எத்தனை 'வீக்' தாங்கும் டாக்டர்?"

************

"ஐயா, தூர்வார்லீங்களா?"

"கிணத்துலே அது ஒண்ணுதான் இருக்கு. அதையும் வாரிடறேன்றியா?"

**************

"எதிர்வீட்டு இளைஞன் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது?"

"பதில எல்லாம் சொல்லலை. 'நேத்து ஏன் பீச்சுக்கு வரலை'ன்னு நான்அவனைக் கேள்விதான் கேட்டேன்."


***************

"எப்படி நீ தைரியமா கிச்சன்ல உன் பர்ஸை வெச்சிருக்கே?"
"இந்தப் பக்கம் என் பொண்டாட்டி வர சான்ஸே இல்லியே. அதான்!"

************

"சொத்துக் கணக்கு கேட்டதுக்கு அந்த அரசியல்வாதி, அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை கோர்ட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்காரே... ஏன்?"

"படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும் தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தான்."

**************

"என்னய்யா, மஞ்சள்காமாலைக்கு இன்னும் பத்திய சாப்பாடுதான் சாப்பிடறியா?"

"எனக்கு எப்ப சார் வந்தது மஞ்சள்காமாலை?"

"மாட்டிக்கிட்யா... போன வாரம் நீ போட்ட லீவுக்கு அதுதான் காரணம்னு உன் டாக்டர் சர்டிபிகேட்ல எழுதி இருந்தாரே...!"

*****************

"என் கிரகப்படி என் தலையெழுத்து நல்லா இருக்குன்னு சொன்னீங்களே... இப்ப பாருங்க, கால்ல அடிபட்டு அவஸ்தை படறேன்!"

"அதனாலதான் தலையிலே அடிபடிலே!"


*****************


"நம்ம டாக்டர் காலையில் இருந்து பயங்கர கடுப்பில் இருக்காரே! ஏன்?"

"நம்ம ஆஸ்பிடல் வாசலில் 'ஒன்-வே' சிம்பல் போர்டை இன்னிக்கு நட்டாங்களே! அதனாலதான்!!"

*************

"பைக் ஓட்டிட்டுப் போனதுக்கு உங்களுக்கு அஞ்சு வருஷம் தண்டனை கொடுத்திட்டாங்களா... ஏன்?" லைசென்ஸ் இல்லாமப் போனீங்களா...?"

"லைசென்ஸ் எல்லாம் இருந்துச்சு. ஆனா பைக்தான் யாருதுன்னு தெரியலை....!"

****************

"இன்னும் இருபது வருஷம் கழிச்சு பண்ணப் போற உங்க பொண்ணு கல்யாணத்துக்கு இப்பவே கடன் கேட்கிறீங்களே?"

"அவசரத்துக்கு கேட்டா நீங்க கொடுக்க மாட்டீங்கன்ன சொன்னாங்க, அதான்."

********

"உங்க மாமனார் தேர்தல்ல நின்னு தெருத் தெருவா பிரச்சாரம் பண்றாரு. வாக்குறுதியும் கொடுக்குறாரு. நீங்க பின்னாலயே போய் அவரு சொல்றதை எல்லாம் நம்பாதீங்கன்ன சொல்றீங்களே ஏன்?"

"கல்யாணத்தப்ப எனக்க ஒரு மோட்டார் பைக், ·பிரிஜ், டி.வி. எல்லாம் வாங்கித் தர்றேன்ன சொல்லிட்டு வாங்கித் தராம ஏமாத்திட்டாரே!"

*************

"யாருய்யா அது... இந்த நேரத்துல ஆராய்ச்சிமணி அடிக்கிறது?"

"மன்னா, அது ஆராய்ச்சிமணி இல்லை... வீதியிலே சோன்பப்படிக்காரன் போறான்..."

*********

"எங்க தலைவர் ரொம்ப மரியாதை எதிர்பார்ப்பார். ரெண்டு தடவை அவருக்கு போன் பண்ணதுக்காக ஒருத்தரைக் கட்சியைவிட்டே நீக்கிட்டார்!"

"இதுல என்ன தப்பு...?""

"கால் மேலே கால் போட்டுட்டாரில்ல..."

******

"நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில் உங்களுடைய ஓவியம்தான் பார்க்கிற மாதிரி இருந்தது!"

"தாங்க்ஸ்..."

"ஆமாம்... மற்றவர்களுடைய ஓவியங்களைச் சுற்றி செம கூட்டம்... பார்க்கவே முடியலே!

********

"இந்த முறை கள்ளவோட்டே போட விடலே, பார்த்தீங்களா?"

"அட... நல்ல வோட்டே போட விடலே, நீங்க வேற!"

*********

"நீங்கதான் கையில வாட்ச் கட்டிட்டு இருக்கீங்களே அப்புறம் எதுக்கு என்னை டைம் கேட்கறீங்க?"

"என்னோட டைம் இப்ப சரியில்லைன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு...!"

**********

"எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று கேட்கின்றார்கள். அடுத்த விநாடி என்ன நடக்கும் என்று தெரியாத இந்தப் பாரினிலே, இரண்டு மூன்று மாதத்திற்க அப்புறம் நடப்பதைப் பற்றி எண்ணலாமா. சிந்தியுங்கள்."

*********

"ஆபரேஷனுக்குத்தான் முழுப் பணத்தையும் கட்டச் சொல்றீங்க. சரி... போஸ்ட் மார்ட்டத்துக்கும் இப்பவே கட்டச் சொல்றீங்களே, இது நியாயமா டாக்டர்?"

"ஆபரேஷனுக்குப் பிறகு உன்னைக் கேட்க முடியுமா? அதான்யா!"

********

"அம்மாவை எதிர்த்தா பேசுறே?"

"உனக்கு ஏம்ப்பா பொறாமை!"

*******

"ஏய் மிஸ்டர். நீ யாருன்னே தெரியலை. எதுக்காக எனக்கு முத்தம் குடுத்தே?"

"மிஸ். பிடிக்கலைன்னா திருப்பிக் குடுத்துடுங்க."

********

"எப்ப பார்த்தாலும் சண்டை போடறீங்களே என்கிட்டே?" பக்கத்து வீட்ல போய் பாருங்க, புருஷன் பொண்டாட்டி எப்படி சந்தோஷமா இருக்காங்கன்னு...?"

"அவங்க சந்தோஷமா இருக்கும்போது நீ ஏன் போய் பார்த்தே?"

********

அப்புறம் இன்றைய மெகா ஜோக்:

"எதுக்கு வாட்ச்மேனை கூட்டுட்டு வந்து கடன் கேட்கறீங்க?"

"நீங்கதானே செக்யூரிட்டி இருந்ததாதான் கடன் தருவேன்ன சொன்னீங்க?!"







Back to top Go down
 
~~ நகைச்சுவை நேரம் ~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கவிதை நேரம்
» கவிதை நேரம்
» கவிதை நேரம்
» கவிதை நேரம்
» கவிதை நேரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: