Posts : 55 Points : 174 Join date : 2010-12-26 Age : 64
Subject: காண திகட்டாத அழகு Fri Jan 28, 2011 3:13 am
காணகாண திகட்டாத அழகு எது? உண்மையான அழகு எது?
வானத்து சந்திரனை ஆயிரம் முறை பார்த்தாலும் மீண்டும், மீண்டும் பார்த்து ரசிக்க தோன்றும்.
அது தான் திகட்டாத அழகு.
முறம் போன்ற காதுகளை வீசி, கயிறு போன்ற வாலை அசைத்து கொண்டே குன்றென நிற்குமே யானை
அதுவும் தனி அழகு தான்.
ஓயவே ஓயாத சமுத்திரம் ஒவ்வொரு நாளும் புதுப்புது அழகை காட்டி நிற்கும்.
மனித படைப்பில் கூ வென கூவி குபு குபு யென புதை தள்ளி தடதட என ஓடுமே ரயில்
அதுவும் பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு தான்.
ஆனால் உண்மையான நிரந்தரமான அழகு எது தெரியுமா?
தானம் வழங்கும் கைகள்,
பெயோரை கண்டால் குனியும் தலை, துக்கத்திலும் சோராத முகம், உண்மை மட்டுமே பேசும் நாவு, நல்ல ஒழுக்கத்தில் இருந்து வழுவாத மனம், கெட்டதை கேட்காத காதுகள் இவைகள் தான் உண்மையான அழகு.