எதைச் சொல்வது? எதை விடுவது? ~~ சிறுகதைகள்
இன்றைக்கு அன்றாட வாழ்வில் ஏழை எளிய மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். மாத வருமானம் என்று எதுவும் இல்லாமல் அவ்வப்போது கூலி வேலைக்குச் செல்வது, யாராவது வேலைக்குக் கூப்பிடுவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது, கிடைக்கும் கூலியைக் கருத்தாக வைத்துக் கொண்டு, கையிருப்பை ஈவித்து நாட்களை நகர்த்துவது, இப்படிப் பலரும் இருந்து கொண்டிருக்கிறார்கள். என்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதுதான் சரி.
குறைந்தது மாதத்திற்குப் பத்தாயிரமாவது வருமானம் வந்தாலன்றி ஒரு மூன்று பேர் அல்லது நான்கு பேர் (நான்கு பேர் என்பதே அதிகம்தான்) அடங்கிய குடும்பத்தை சுமாராக நடத்திச் செல்வது என்பது இன்று பெரும் துர்லபம்.
நாட்டின் ஏழை எளிய மக்களுக்காக அவ்வப்போது அரசியல்வாதிகளால் ஏதேனும் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் அவர்களின் இருப்பை ஞாபகப்படுத்தும் துண்டு துண்டான நிகழ்வுகளாகவே முடிந்து போகின்றன. ஏழை எளிய மக்களின் பிரச்னைகளில் ஏதேனும் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு நடத்தப்படும் போராட்டம் வெறும் ஒரு நாள் நிகழ்வுகளாகவும், ஒரு நாள் செய்திகளாகவும் கூடிக் கலைகின்ற சிறு மேகக் கூட்டங்களாக மறைந்து போகின்றன என்பதுதான் உண்மை. அந்தப் போராட்டங்களால் இன்ன பலன்கள் ஏற்பட்டன என்பதாக எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடிவதில்லை.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுக்கடங்காமல் போய்விட்டது. கணவன் மனைவி என இரண்டு மாநில அரசு ஊழியர் அல்லது ஒரு மாநில அரசு ஒரு மத்திய அரசு, அல்லது ஒரு மாநில அரசு ஒரு வங்கி ஊழியர், அல்லது ஒரு மத்திய அரசு ஒரு வங்கி ஊழியர், அல்லது இரண்டு வங்கி ஊழியர், ஒரு மாநில அரசு ஊழியர், ஒரு தனியார் நிறுவன ஊழியர், இப்படியாக ஜோடி சேர்ந்த குடும்பங்களில் கூட இரண்டு வருமானம் இருக்கிறதே என்று சற்று நீட்டி அகலக்கால் வைத்தால் ஆபத்துதான்.
இதில் ஒருவர் மட்டும் வேலை பார்க்கும் குடும்பங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வீட்டுச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, அவ்வப்போது ஏற்படும் உறவுகளின் விழாச் செலவுகள், பண்டிகைச் செலவினங்கள், மருத்துவச் செலவுகள், பிற எதிர்பாராச் செலவினங்கள், என்று ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் பொதுச் சேம நல நிதி சேமிப்பிலிருந்து கடனை நம்பியிருக்கும் நிலை (தன் சொந்த சேமிப்புப் பணத்தை எடுத்தாலும் மாதத் தவணையாகத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும்). பகுதி இறுதியாக எடுத்தால் மொத்த சேமிப்பு குறைந்து போகும் நிலை.
அரசு ஊழியர்களுக்காவது ஆண்டுதோறும் ஊதிய உயர்வு என்று உண்டு. அதனால் கூடும் அடிப்படைச் சம்பளம், பிற படிகள் என்று பார்க்கலாம். ஆண்டுக்கு இரு முறை அரசு வழங்கும் அகவிலைப்படி உயர்வும், பொங்கல் போனசும் என்றும் உள்ளன அவர்களுக்கு.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இவர்களுக்கு ஊதிய உயர்வு, அகவிலைப் படி உயர்வு என்கிற செய்தி வந்தவுடனேயே அரிசி, பலசரக்கு, காய்கறி, பால், பழம் என்று மூக்கில் வியர்த்தாற்போல் எல்லாப் பொருட்களும் உடனேயே விலை கூடி விடுகின்றன. அறிவிப்பு வந்த மறுநாளே சந்தையில் வியாபாரிகள் மத்தியில் அந்தப் பேச்சு பராபரியாய் இருப்பதைக் கண்கொண்டு பார்த்து காது கொடுத்துக் கேட்கலாம்.
“என்னங்க, இந்த வெல சொல்றீங்க?”
“அதான் கவர்ன்மென்ட்டு சம்பளத்தக் கூட்டிட்டாகள்ல? எங்களுக்கு யாரு தருவா?”
அவ்வப்போதைய விலைவாசி ஏற்றங்களைச் சமாளிப்பதற்காகத்தான் இந்த அகவிலைப்படி உயர்வு என்பது போக, அறிவிப்பு வந்ததும் விலை ஏறினால் ஏற்கனவே ஏறிய விலைவாசி, அறிவிப்பினால் ஒரு ஏற்றம் என்று விழி பிதுங்குகிறது மொத்த மக்களுக்கும்.
அடித்தட்டு மக்கள் எப்படி இந்த ஏற்றத்தைப் பொறுத்துக் கொள்வார்கள்? எப்படித் தாங்குவார்கள்? எப்படிச் சமாளிப்பார்கள்? ஏதாவது இருந்தால்தானே சமாளிப்பதற்கு? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
அரசு ஊழியர்களுக்காவது ஆறாவது சம்பளக் கமிஷன் மூலம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர்க்கு ஊதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?
விலைவாசி உயர்வினை மட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் என்ன? ஆட்சியாளர்கள் என்னதான் அப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? இந்தக் கேள்விகள் கேள்விகளாகவேதான் இருந்து கொண்டிருக்கின்றன. விலைவாசி குறைந்து கண்கூடாக மக்கள் அதை அனுபவித்தால்தான், அரசின் நடவடிக்கை ருசுவானதாக அர்த்தமாகும்.
சமீபத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.80 வரை சென்றது. சாதாரண மக்கள் சந்தையில் இருக்கும் வெங்காயத்தைக் கண் கொண்டு பார்க்கப் பயப்பட்டார்கள். அந்தப் பக்கமே தலையைத் திருப்பாமல் போய் வந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
சற்றே வசதியுள்ளவர்கள் அரை கிலோ வெங்காயம் என்றும், சுமாரான வருவாய் உள்ளவர்கள் கால் கிலோ என்றும் ஏதோ தப்பு செய்வதைப் போல் வாங்கிக் கொண்டு போனார்கள். அதாவது கால் கிலோ ரூ.20 விலையில். சின்னச் சின்னதாக ஐந்து வெங்காயங்கள் அல்லது நாலு. சற்றுப் பெரியதென்றால் மூன்றுதான் நிற்கும். ஐந்து என்றால் ஒரு வெங்காயத்தின் விலை ரூ.4. மூன்று என்றால் ஒரு வெங்காயத்தின் விலை ரூ.7. அந்தக் கணக்கில் கூட ஒரு ரூபாய் கூடத்தான் வருகிறது. இதைப் போய் இப்படிப் பிரித்துச் சொல்ல வேண்டுமா என்று தோன்றும்தான். ஒரு பெல்லாரி வெங்காயத்தின் விலை:ரூ.4 என்றால் அது கொள்ளையில்லையா? நான்கு ரூபாய் கொடுத்து ஒரு வாழைப்பழத்தை வாங்கி மனசோடு சாப்பிட மாட்டார்களே ஐயா நம் மக்கள். எல்லாவற்றிற்கும் பேரம் பேசி விலையைக் குறைத்து வாங்கித்தானே அவர்களுக்குப் பழக்கம். அப்பொழுதுதானே அவர்கள் மனது சமாதானம் ஆகும். கடைக்காரர்கள் என்றாலும் அவர்களுக்கும் மனசாட்சி என்று ஒன்று உள்ளதே? ஐந்து வெங்காயத்தை மனசில்லாமல் தராசில் நிறுத்துவிட்டு, கூட ஒன்று எப்பொழுதும்போல் தாராளமாக எடுத்துப் போட அவர்களுக்குக் கை வரவில்லை. அவர்களுக்கே மனம் கூசுகிறது. அந்த அளவுக்கு உயரத்தில் எட்டி நிற்கிறது விலைவாசி.
பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. அடுத்தாற்போல் கொஞ்சம் குறைந்தது விலை. எவ்வளவு என்கிறீர்கள்? வெறும் 60 ரூபாய்தான் ஒரு கிலோவுக்கு. சில சமூகங்களில் செவ்வாய், வெள்ளி என்றும் சிலவற்றில் எப்பொழுதுமே என்றும் வெங்காயம், ப+ண்டு என்று எதையுமே தொட மாட்டார்கள். அவர்களைப் போல் இனி எல்லோரும் இருக்க வேண்டியதுதான்.
வெறும் வெங்காயம் மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். அநேகமாக எல்லாக் காய்கறிகளுமே விலை ஏறித்தான் இருக்கின்றன. ஒரு கிலோ பீன்ஸ்.ரூ.60 விற்றது தெரியுமா? கத்தரிக்காய் 40, காரட் 35, பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் முறையே 70, 60. அவரைக்காய் 60, இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அசைவ உணவே இதற்கு எவ்வளவோ பரவாயில்லை என்ற முடிவுக்கு அசைவம் சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக வந்திருப்பார்கள். ஒன்றுமில்லாத வாழைத்தண்டு விரல் நீளத்திற்கு 5 ரூபாய் என்றால் நம்புவீர்களா? இக்கிணிய+ண்டு வாழைக்காய் 2 ரூ.
விகல்பமில்லாத இந்தக் கிராமத்து மக்களுக்கு எப்படி இப்படி விலை சொல்லத் தெரிந்தது? அடேயப்பா? எங்கே கற்றார்கள் இந்தக் களங்கத்தை? இந்தாங்கய்யா கொண்டு போங்க... என்று நிறுத்தபின்பும் கூட ஒரு கை அள்ளிப் போடுவார்களே வெள்ளந்தியாய்? அந்தப் பழக்கமெல்லாம் எங்கே போயிற்று? அட ஒன்றும் வேண்டாமய்யா, வழக்கமாய் கடைக்கு வருபவர் என்கிற புரிதலில் ஒரு புன்னகை தானாக விரியுமே இலவசமாய்? அது கூடவா இல்லை? எங்கே லேசாகச் சிரித்து வைத்தால் விலை மறந்து போகுமோ என்கிற பயமோ? அல்லது பழக்க தோஷத்தில் கூட எடுத்துப் போட்டு விடுவோம் என்கிற ஜாக்கிரதை உணர்வோ? இந்தச் சாதாரண மக்கள் கூட எப்படியெல்லாம் மாறிப் போனார்கள்? அவர்களின் களங்கமற்ற சிரிப்பு எங்கே? வெடித்த பேச்சு எங்கே? வாய்விட்டு அழைக்கும் வரவேற்பு எங்கே? அடடா! இந்த வாழ்க்கைச் சிக்கல்கள்தான் இந்த அப்பாவி மக்களைக் கூட எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றன? கலாச்சார ரீதியாய் பழகிப் போன எத்தனை மேன்மைகள் இதில் அடிபட்டுப் போகின்றன?
அரசின் எத்தனையோ திட்டங்கள் நடைமுறையில் உள்ளனதான். ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், இலவசக் கலர் டி.வி., காஸ் அடுப்பு, இலவச வீடு வழங்கு திட்டம், நகர்ப்புற மக்களுக்கு மான்யத்துடன் வீடு கட்டும் கடனுதவித் திட்டம், பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம், மகப்பேறு உதவித் திட்டம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கு திட்டம், என ஏராளமான சலுகைகள்.
ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் என்கிறார் முதல்வர்.
கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கிடைப்பதாலும், கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை என்ற மத்திய அரசின் வேலை உறுதி அறிவிப்புத் திட்டத்தாலும், கூலி வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்கிற நிலை உருவாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. விவசாய வேலைகளுக்கும் இதே நிலை நீடிக்கிறது.
மழையை நம்பியிருக்கும் விவசாயம். போதிய மழை இல்லாத காரணத்தால் உணவு உற்பத்தித் தேக்கம். பருவ மழை தொடர்ந்து விடாமல் பெய்து ஏற்படுத்தும் நாசம். அந்த மழை நீரைக் கருத்தாகச் சேமித்து வைத்து வறண்ட காலங்களில் பயன்படுத்திக் கொள்ள இயலாத கண்மாய்களும் குளங்களும் ஓடைகளும் காலி மனைகளாகவும், கட்டிடங்களாகவும், உருவான அவலம். விளை நிலங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக மாறி பார்க்கவே அச்சமூட்டும் பிரம்மாண்டம்.
நகர்ப்புறங்கள் என்று சொல்லப் போனால் அங்கும் வௌ;வேறுவிதமான சூழல் சீர்கேடுகள். பெட்ரோல் விலை கடந்த ஆறு மாதங்களில் ஆறு முறை உயர்த்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அது ஆறா, ஏழா, எட்டா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஐம்பது ரூபாய் இருந்த பெட்ரோல் இன்று லிட்டருக்கு அறுபத்தைந்து. ஐம்பது வந்தபோதே புலம்பியதுதான். பயன்?
எண்ணெய் நிறுவனங்களே விலைகளை ஏற்றிக் கொள்ளலாம், இறக்கிக் கொள்ளலாம் என்று சொல்லியாகி விட்டது. எங்கேயாவது, எப்பொழுதாவது, எதிலாவது ஏறியது இறங்கியிருக்கிறதா?
இறக்குவது என்பது மக்கள் மீது அக்கறையுள்ள அரசால் மட்டுமே சாத்தியம் என்று சாதாரண மக்கள் நினைக்கிறார்கள். (பெட்ரோல் போடுபவர்கள்) ஒரு வேளை மக்கள் நடைக்குப் பழகட்டும் என்று ஏற்றிக் கொண்டேயிருக்கிறார்களோ என்னவோ?
பக்கத்தில் உள்ள கடைகண்ணிகளுக்குப் போகிறவர்கள் இப்பொழுதெல்லாம் காலை வீசி நடக்க ஆரம்பித்து விட்டார்கள். (அப்பாடீ, நமக்குக் கட்டுப்படி ஆகாதுப்பா....! சொல்லுவது காதில் விழுகிறதா?)
நிறையப் பேர் பேருந்தில் போய்வர ஆரம்பித்து விட்டார்கள். போய் வந்த பின்னால்தான் தெரிகிறது. இதற்கு வண்டியே பரவாயில்லை போலிருக்கிறதே, நேரமாவது மிச்சமாகுமே என்று. அந்த அளவுக்கு பஸ் கட்டண உயர்வுகள். சொல்லியும், சொல்லாமலும். அதாவது அரசு சொல்வதில்லை. கண்டக்டர் சொல்வதுதான். பெட்ரோலுக்குச் சமமாய். ஏன் கூட என்று கூடச் சொல்லலாம் என்பதாகத்தான் உள்ளது.
“என்னண்ணே ஏழு வாங்குறீங்க...நாலுதான...?”
“இந்த வண்டில ஏழு, காசில்லையா...இறங்கு...”
பயணி அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி விடுகிறார். போகிற இடத்தின் தூரம் ஓசியில் கொஞ்சம் குறைந்ததே என்று. சாதா வண்டிக்காக நிற்கிறார். நிற்கிறார். நின்று கொண்டேயிருக்கிறார். அவர் எதிர்பார்க்கும் சாதாரணக் கட்டண வண்டி வந்தபாடில்லை.அப்படி ஒன்று அப+ர்வமாய் கண்ணில் பட்டால் உண்டு. எல்லாம் உயர்தர சொகுசு பஸ்கள்தான். அது சரி மக்கள் எல்லோரும் “நாங்கல்லாம் சொகுசு பஸ்லதான் போவோம்...சாதா பஸ்லல்லாம் ஏற மாட்டோம்” என்று எப்பொழுது சொன்னார்கள்? அதுதான் வருகிறது என்றால் வேறு வழி? அதிக, தவறு தவறு அதீதக் கட்டணத்தை மனதில் திட்டிக் கொண்டே ஏறித் தொலைக்கிறார்.
“ஏங்க, இங்கருந்து அங்க போய் இறங்குறதுக்கு ஏழு ரூபாயாங்க? ரொம்ப அநியாயம்ங்க இதெல்லாம்...” – புலம்பிக்கொண்டே காசைக் கொடுக்கிறார். சீட்டைக் கிழித்துவிட்டு அடுத்த ஆளுக்கு நகர்கிறார் நடத்துநர்.
“பஸ் ஸ்டான்டுக்கு பதிமூணு ரூபாயா? இதென்ன சிட்டி பஸ்ஸா? வெளிய+ர் பஸ்ஸா?
“ஏங்க, உங்க வீட்லேர்ந்து ஜங்ஷனுக்கு எண்பது ரூபா ஆட்டோவுக்கு...அதே சமயம் திருநெல்வேலிக்கு மதுரைலேர்ந்து அறுபதுதான்...அறுபது ரூபாய்க்கு அம்புட்டுத் தூரம் கொண்டு விடுறாக...நீ என்னய்யா ஆட்டோவுக்கு இம்புட்டுக் கேட்குறன்னு சொல்லுவியா? அத மாதிரித்தான்யா இதுவும்...”
“மக்கள்ட்டக் காசில்லைன்னு யார் சொன்னது?”- யாரோ இதச் சொன்னாங்களே? மறந்து போச்சு, விடுங்க...
அவர்கள் தற்பொழுது சொகுசு பஸ்களில் பயணம் செய்யத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு விட்டார்கள். அதாவது பஸ் கட்டணத்தை அனுசரித்து மற்ற செலவைக் குறைத்துக் கொண்டு விட்டார்கள்.
இத்தனை ஏற்றத்திலும் வாகனங்களின் பயன்பாடு கணக்கிட முடியாமல் அதிகரித்துத்தான் இருக்கின்றன. அதையும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. வாகனப் புகையினால் ஏற்படும் மாசு சொல்லி மாளாது. வாகனங்களினால் ஏற்படும் நெருக்கடி, கணக்கிலடங்காமல் பெருகி விட்ட வாகனங்களினால் அடிக்கடி ஏற்படும் கோர விபத்துக்கள், உயிர்ப் பலிகள், எல்லாமும் நினைக்க நினைக்க எதுவுமே வேண்டாம் என்று வீட்டோடு முடங்கிக் கிடக்கலாம் போலிருக்கிறது.
எப்படி? அப்படி முடங்கினால் ஜீவிதத்திற்கு என்று இப்படி வெளியே வந்துதானே ஆக வேண்டும்? எல்லாவற்றையும் அன்றாடம் எதிர் கொண்டுதானே ஆக வேண்டும்? ஒரு தனி மனிதன் வீட்டில் முடங்குவதுபோல் விலைவாசி தனக்குத்தானே முடங்கிக் கொள்ளுமா? ஏற்றம் நின்று போகுமா? போக்குவரத்து ஸ்தம்பித்துப் போகுமா? வருமானம் கூடி விடுமா? வாழ்நிலை உயர்ந்து விடுமா?
எல்லா அரசியலும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துதான் கிடக்கின்றன. அத்தனை சங்கடங்களும் மக்களுக்குத்தான். அத்தனை நல்லது கெட்டதுகளாலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அப்படியானால் ஆட்சியாளர்கள்? அவர்கள் அவர்கள்பாட்டுக்கு ஆட்சி செய்து கொண்டிருப்பார்கள், அவ்வளவுதான்! நடப்புக்களை செய்திகளாக மட்டும் நீவீர் அறிந்து கொள்வீர்களாக! எதிர்ப்படும் துன்பங்களை சகிப்புத்தன்மையோடு அனுபவிப்பீர்களாக! அப்படியானால் இதற்குத் தீர்வு?
அட, பார்ப்போம்யா...! என்னா நீ ரொம்ப டென்ஷனாகுற? மடில நெருப்பக் கட்டிக்கிட்டவன் மாதிரி? இப்டியேவா போயிரும்? ஏதாச்சும் ஆகும்.......விடு...விடு...அந்த டி.வி.யப் போடு...இன்னைக்கு என்னா படம் போடுறாங்ஞ? அதப் பார்ப்போம்.முதல்ல....நம்ம பொழுத சந்தோஷப் படுத்துறதே அதுதானய்யா...
ஒவ்வொரு சேனலாய்த் திருப்புகிறது ஜனம். எல்லாச் சேனல்களிலும் குறைந்தது இரண்டு படங்கள் தினமும். ஒன்றிரண்டில் நாள் பூராவும் படம்தான். அட, அத விடப்பா...மாத்துவியா? எழரைக்கு ஒரு பழைய படம் போடுறாங்ஞல்ல....செவ்வாய், புதன்னு. அதுக்கு ஈடு வருமா? எல்லாம் சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்கதான். அது போக வெள்ளிக்கிழமை ஒண்ணு இருக்கு.. தெரியுமா? அதுதான் லேட்டஸ்ட்டு! உங்கள ஒண்ணும் சும்மா விடறாப்ல இல்ல...! உங்க டேஸ்ட்டு என்னன்னு தெரியாமயா ஒக்காந்திருக்கோம்... ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்! அனுபவி ராஜா அனுபவி!! நிம்மதியா இருப்பியா? பெனாத்திக்கிட்டே இருக்கியே? யோசிக்காதய்யா... யோசிக்காத... யோசிக்க ஆரம்பிச்சின்னாவே எப்பவும் தலவலிதான்.... புரியுதா நாஞ்சொல்றது?
------------------------
உஷாதீபன்

ஒவ்வொரு சேனலாய்த் திருப்புகிறது ஜனம். எல்லாச் சேனல்களிலும் குறைந்தது இரண்டு படங்கள் தினமும். ஒன்றிரண்டில் நாள் பூராவும் படம்தான். அட, அத விடப்பா...மாத்துவியா? எழரைக்கு ஒரு பழைய படம் போடுற