BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமறக்க முடியாத நினைவுகள்... Button10

 

 மறக்க முடியாத நினைவுகள்...

Go down 
AuthorMessage
unnudan nan




Posts : 26
Points : 60
Join date : 2010-03-11

மறக்க முடியாத நினைவுகள்... Empty
PostSubject: மறக்க முடியாத நினைவுகள்...   மறக்க முடியாத நினைவுகள்... Icon_minitimeWed Mar 17, 2010 7:56 pm

மறக்க முடியாத உன் நினைவுகள்
நான் தூங்கும் போது என்
கண்ணைத் தூங்க விடாமல்
கலங்க வைக்கிறது

இருந்தும் என் கண்கள்
உன் நினைவுகளை
சுமக்கவே தயாராகி விட்டது

அன்று ஒரு நாள்
பச்சைப் பசும் சோலைகள் நடுவே
உன் மார்பில் தலை சாய்த்தேன் நான்
அந்த நிமிடம் என்னை அறியாமலே
காதல் அதிகரித்தது

கண்ணா
கண்ணாம்மூச்சி
ஆட்டம் போல் என்
வாழ்க்கையும் ஆகிவிட்டது

மறக்கத்தான் நினைக்கிறேன்
ஏனோ உன் நினைவுகள்
மறுபடியும் வளர்கிறது

உன்னை நான் தொலைத்த
வேளையிலே என் வாழ்க்கையின்
தேடல் தொடங்கியது
இன்றுவரை தேடல் முடியாமல்
தொடரவே செய்கிறது

பள்ளியில் படித்த
பாடத்தை விட
காதல் பாடத்தை படித்ததே அதிகம்
இருந்தும் காதல் பரீட்சையில்
தோற்றுவிட்டேன் நான்

காதலை மையமாக்கி நீ
என் கனவில்
நுழைந்தது ஞாபகம் இருக்கிறது
அதே காதலை மையமாக்கி இன்று
என்னை கைது செய்துவிட்டாயே
அது ஏனோ என் இதயத்தைக் கொல்கிறது

சோகக் கவிதையை எழுத
மனம் இல்லை எனக்கு
இருந்தும் என் பேனா சோகத்தை
மட்டுமே எழுதத் துடிக்கிறது

என் மனதில் உள்ள
காயங்கள் மாறும் வரை
காயம் கொண்ட கவிதைகளே
தொடரும்
Back to top Go down
 
மறக்க முடியாத நினைவுகள்...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» *~*நினைவுகள்*~*
» காதல் நினைவுகள் !!!
» வைரமுத்துவின் "இரக்க முடியாத சிலுவை - கவிதை
» எம்.ஜி.ஆர் சில நினைவுகள்
» உன் நினைவுகள்...!!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: