lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: சிரிக்க சிந்திக்க-02 Wed Apr 13, 2011 3:15 pm | |
| ஆஹா ஆடி..!
——————————————————————————————-
(நகைக்கடை அருகே கணவனும் மனைவியும்…)
‘‘சொன்னாக் கேளு, பட்ஜெட் உதைக்குது, மாப்பிள்ளைக்கு அரைப்பவுன்லயே மோதிரம் எடுத்துக்கலாம்.’’
‘‘வேணாங்க. ஆடி பதினெட்டு முதல் நோம்பி. மாப்பிள்ளை கோவிச்சுக்குவார், நமக்கும் மரியாதை இல்லை.’’
‘‘நெனைச்சுப் பாருடி, ஃபிளாஷ் பேக்கை! இதே என் முதல் நோம்பிக்கு ‘தங்கம்’ங்கற பேர்ல ஒரு கடுகை என் விரல்ல போடச் சொல்லிக் கொடுத்தானே உங்கப்பன்! அப்ப எங்கடி போச்சு இந்த மரியாதை?’’
‘‘எங்கப்பன் பொண்ணைக் கொடுத்தது, மளிகைக்கடையில பொட்டலம் கட்டுறவருக்கு… நான் என் பொண்ணைக் கொடுத்திருக்கிறது, ஹோல்சேல் காய்கறி மண்டி ஓனருக்கு!’’
(இடிக்கும் லாஜிக் அறிந்து ஒரு பவுனுக்கு சம்மதிக்கிறார் கணவர்).
__________________________________________________________
(பெட்டிக்கடை அருகே கடைக்காரரும், வாலிபரும்…)
‘‘ஏன் தம்பி, டெய்லி அந்தப் பொண்ணை ஓரம்கட்டி நின்னு பேசுறியே, எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே லவ்ஸ் விடறதா உத்தேசம்? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’’
‘‘அட, நீங்க ஒண்ணுங்க, அது என் பொண்டாட்டி.‘ஆடி’க்கு அவுங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. அங்க இருந்து வேலைக்கு வர்றா… அதான் இங்கே வந்து நின்னு பேசுறோம்… இப்ப புரியுதா?’’
(ஆனாலும் கடைக்காரரின் சந்தேகக் கண்கள் இமைக்கவேயில்லை).
______________________________________________________________
குளிர்பானக் கடையொன்றில் இருவர்…
‘‘என்ன தம்பி.. வர்றவங்க, போறவங்களையெல்லாம் கூப்பிட்டு ‘கூல்டிரிங்க்ஸ்’ வாங்கித் தர்றே..?’’
‘‘அண்ணே..! வர்ற ஆவணி மாசம் எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சு… எட்டாம் கிளாஸ் படிச்ச எனக்கு ‘எம்.சி.ஏ.’ படிச்ச பொண்ணு கிடைச்சிருக்கு… அந்த சந்தோஷத்தைத்தான் கொண்டாடறேன்…’’
‘‘இங்க பாரு தம்பி… ஏரில் பூட்டற மாடுகள், ஒரே மாதிரி இருந்தாத்தான் வயலை உழுது பயிரு பச்சையைப் பாக்க முடியும். எட்டாங்கிளாஸ் படிச்ச நீ எருது வண்டி வேகத்திலயும், எம்.சி.ஏ. படிச்ச அந்தப் பொண்ணு ஏரோப்பிளேன் வேகத்திலயும் போனாக்கா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாரு..’’
(‘எட்டாங்கிளாஸ்’ எரிச்சலுடன் நகர்கிறது).
_________________________________________________________________-
ஒரு வீட்டுவாசலில் கணவனும் மனைவியும்…
‘‘ஆடித்தள்ளுபடியில ஒரு புடவை எடுத்துத் தாங்களேன்!’’
‘‘நான் பணக் கஷ்டத்துல தள்ளாடிக்கிட்டிருக்கேன். உனக்குத் தள்ளுபடியில புடவை கேக்குதாக்கும்…’’
‘‘சாயங்காலமானா நீங்க ‘தள்ளாடுறது’தான் ஊருக்கே தெரியுமே…’’
(கணவர் கப்சிப்). | |
|