lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: பழவகைகளைச் சாப்பிடும் முறை Tue Dec 13, 2011 1:55 am | |
| இன்றைய நவீன வாழ்க்கை தொழில் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு வசதிகளைப் பெற்றிருந்தாலும் தவிர்க்க இயலாத மன அழுத்தத்தினாலும், தவறான உணவுப் பழக்கவழக்கங்களைப்பின்பற்றுவதாலும் சிறுவர் முதற்கொண்டு பொயவர் வரை கணக்கற்ற உடல்நலம் மற்றும் மன நலம் சார்ந்த பிரசினைகளை எதிர்கொண்டு போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எவர் எந்த மருத்துவரை அணுகினாலும் அவர்கள் வலியுறுத்திப் பாந்துரை செய்வது நான்கு செயல்களையே :
1. குறித்த நேரத்தில் உண்ணவேண்டிய சாவிகித உணவு 2. யோகா அல்லது உடற்பயிற்சி 3. உணவில் கொழுப்பை அதிகம் சேர்க்காமல் பூமிக்குக் கீழே பயிராகும் கிழங்கு வகைளைத் தவிர்த்து அன்றாட உணவில் புத்தம் புதிய காய் கனிகள், இறைவனின் கொடையாகிய கீரை வகைகளை அதிகம் உபயோகித்தல் 4. மனதை தியானம் போன்றவற்றிலும், அவரவருக்கு விருப்பமானவற்றிலும் ஈடுபடுத்தி மன நலம் காத்தல்.
புதிய கனிவகைகளை உண்ணுவதற்கு உகந்த வழி முறைகள்
நாம் அனைவரும் கடைகளில் விற்கும் பழங்களை வாங்கி அப்படியே சாப்பிட்டால் போதும் என எண்ணுகிறோம். பதிலாக, அப்பழங்களை எப்பொழுது, எந்த முறையில் சாப்பிட வேண்டும் என்று அறிந்து கொண்டு அவ்வாறு பயன்படுத்தினால் அதிக அளவில் பயன் பெறலாம்.
உணவு உட்கொள்ளுவதற்கு முன்பு பழங்களை சாப்பிடுவது மிக்கப் பயன் அளிக்கும். பெரும்பாலோர் உணவிற்குப் பிறகு நிறைவு செய்யும் dessert ஆக உண்பது வழக்கம். நாம் முதலில் பழங்களை உண்ணப் பழகினால் நமக்குத் தொயாமல் நம் வயிற்றிலும், உணவுக்குழலிலும் சேரும் நச்சுப்பொருட்கள் நீங்குவது மாத்திரமின்றி பெரும்பாலோர் எதிர் கொள்ளும் உடல் எடை அதிகரிப்பையும் குறைக்க இயலும். போனசாக நாள் முழுவதும் உற்சாகத்துடனும், துடிப்புடனும் செயல்பட முடியும்.
அடுத்து நாம் சாப்பிடும் சாப்பாட்டுடன் பழங்களைச் சாப்பிட்டால் நம் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் வினைபுரிந்து பழங்கள் கெட்டுப் போக வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, நாம் பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவு உண்ணும் முன்பாக சாப்பிடுவது நலம்.
பழங்களை சாப்பிடும் பொழுது தமக்கு நேரும் பின் விளைவுகளைப் பற்றி பலர் பற்பலவிதமாகக் கூறுவதை கேட்டிருப்போம். சிலர் தர்பூசணி பழத்தை சாப்பிடும்பொழுது ஏப்பம் வருவதாகவும், டூயான் பழத்தை உண்டால் வயிற்றில் உப்புசம் ஏற்படுவதாகவும், வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் கழிவறைக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் சொல்வார்கள்.
சற்று முன்யோசனையுடன் செயல்பட்டால், அதாவது, வெறும் வயிற்றில் பழங்களை சுவைக்கப் பழகினால் இப்பிரச்சினைகள் நேராது. பழச்சாற்றுடன், உணவும், அதனுடன் வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் கலந்தால்தான் வாயுத் தொல்லையும், வயிற்று உப்புசமும் வந்து சேரும்.
இளம் நரை, தலை முடி கொட்டுவதால் உண்டாகும் வழுக்கை, கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் போன்றவற்றை நாம் வெறும் வயிற்றில் பழங்களை உண்போமானால் தவிர்க்க இயலும்.
நீங்கள் பழச்சாறு பருக விரும்பினால் பழங்களை ன்றாகக் கழுவி, அப்பொழுதே தயாத்த புத்துணர்ச்சியூட்டும் சாற்றையே பருக வேண்டும். அட்டைப்பெட்டிகளிலோ அல்லது டப்பாக்களிலோ அடைக்கப்பட்ட சாற்றைப் பருக வேண்டாம். அதே போன்று சூடாக்கிய பழச் சாற்றையோ அல்லது சமைத்த பழங்களையோ உண்ணக்கூடாது. இவற்றை உண்பதால் சுவை வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால், தாதுப்பொருட்களும், விட்டமின் சத்துக்களும் முழுமையாக அழிந்திருக்கும்.
எனவே பழங்களை சமைத்து உண்பதால் அதிலுள்ள சத்துக்கள் முழுமையாக அழிந்து விடுவதை அறிந்து இன்றிலிருந்து அதனைத் தவிர்க்கலாமே.
பழங்களைத் துண்டாக்கியோ அல்லது முழுப் பழமாகவோ உண்டால் பழச்சாறு பருகுவதைக் காட்டிலும் பழங்களின் முழுமையான பலன்களைப் பெறலாம்.
நீங்கள் பழச்சாற்றைப் பருகும் பொழுது சிறிது சிறிதாக சுவைத்துக் குடித்தால் அப்பழச்சாறு உங்கள் வாயில் சுரக்கும் உமிழ் நீருடன் நன்றாகக் கலந்து எளிதில் ஜீரணமடைய ஏதுவாகும்.
மூன்று நட்கள் பழ உணவை கடைபிடிப்பது நம் வயிற்றில் சேரும் நச்சுப் பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்தும் ஓர் எளிய பயிற்சியாக அமையும். அந்த மூன்று நாட்களும் பழங்களை மாத்திரமே உண்டு, பழ ரசங்களையே பருகுங்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் முக ஒளியைப் பார்த்துப் புகழ்வதைப் பார்த்து வியப்பீர்கள்.
பழ உணவை உண்ணும் அந்த மூன்று நாட்களும் நீங்கள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமான பழங்களை உண்ணலாம். உங்கள் சுவை நரம்புகளை புத்துணர்ச்சியூட்ட சில நேரங்களில் துண்டாக்கிய பழத்துண்டுகளை fruit salad ஆகவும் செய்து சுவைக்கலாம்.
என்ன நண்பர்களே, பழங்களை உண்ணும் சாயா முறைகளை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள். உங்கள் உடல் அழகு ஒளி வீச, ஆரோக்கியமான நீண்ட ஆயுளோடு, மன மலர்ச்சியுடன், நித்தம் நித்தம் புத்துணர்ச்சியுடன் உங்கள் உடலுக்குத் தக்க எடையுடன் ஆண்டவன் கொடுத்த அரும் வாழ்க்கையை நிறைவாக வாழலாமே. ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையா திறவுகோல் உங்கள் கையில். என்ன பழக்கடைக்கு புறப்பட்டு விட்டீர்களா?
Thanks nila saral. | |
|
sreelavanya 89
Posts : 47 Points : 67 Join date : 2012-03-26 Age : 34
| Subject: Re: பழவகைகளைச் சாப்பிடும் முறை Fri May 04, 2012 7:01 am | |
| This hundred percent true i like your post am waiting your more tips thanks for nice sharing.
....................... Plc Training In Chennai|automation training in chennai | |
|