ஸ்ரீ யாழினி :
கண்ணிமைக்காமல் பார்கின்றாய்
நான் பார்த்தல் மட்டும்
ஏன் பார்வையை மாற்றி கொள்கிறாய் இது
உன் மனதில் நினைப்பதா? இல்லை நீ நடிப்பதா?
தனியாக வந்தால் நீயே தானாக பேசுகிறாய்.
கூட்டத்துடன் வந்தால் மட்டும் ஏன் குனிந்து செல்கிறாய்?
வெட்கமா ? இல்லை வேசமா ?
தொலைபேசி எண் தந்து அழைக்க சொன்னாய் .
தொலைவில் இருந்து நான் அழைக்க,
தொடர்பே இல்லாதவன் போல் பேசினாயே?
நாணமா? இல்லை அதுவும் நடிப்பா ?
பேருந்து நிலையம் வந்து போகும் வரை
பொறுப்புடன் அனுப்பினாய் .காதலின் மீதுள்ள பொறுப்பா? இல்லை நான் பெண் என்ற கடமையின் மீதுள்ள பொறுப்பா ?
மனதில் வந்ததை மறக்க நினைக்கிறாயா ?
இல்லை என் மனதை மாற்றி குழப்ப நினைக்கிறயா?
நீ விளையாடுகின்றாய் !
நான் விளைவை அனுபவிக்கின்றேன் !
ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன்
உன் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள நினைத்தால் ?
என் மனமே பித்தாகி விடும் என்று …!!