Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: தமிழர்களிடையே உள்ள குழப்பமும் Tue Apr 06, 2010 10:45 pm | |
| எப்போழுதுமே ஒரு முக்கிய நிகழ்வு நடந்து முடிந்தபின் அது வெற்றியாக நடைபெற்றிருந்தாலும் சரி, தோல்வியாக நடந்திருந்தாலும் சரி அந்த நிகழ்வு பற்றிய ஒரு கணிப்பீட்டை செய்வது அவசியம். எனவே இந்த கணிப்பீட்டையும், பகுப்பாய்வையும் நாம் வெற்ரிகரமாக செய்வதினூடாக அந்த நிகழ்வின் போக்கு, அதில் நாம் விட்ட தவறு என்ன, நாம் கொண்ட வெற்றிகள் என்ன, அந்த நிகழ்வுக் காலத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன, இது போன்ற பலவிடையங்களை எம்மால் சரியாகக் கணக்கிட்டுக்கொள்ள முடியும்.
தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் என்பது இன்னும் சில காலத்திற்கு அரசியல், மற்றும் இராஜதந்திர வழிகளினூடாகத் தான் நடைபெற சாத்தியங்கள் உண்டு. அந்த அரசியல் போராட்டத்தில் தமிழர் தரப்பு சரியாக நகர்ந்து தமது வெற்றிப்பாதையில் பயணிக்க வேண்டுமானால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக, உறுதியாக அதேவேளை மிகக் கவனமானதாக இருக்க வேண்டும். | |
|