கணவனும், மனைவியும் இப்படி இருந்தா வீட்டுல களை கட்டும்தானே!!
வாரத்தில் இரண்டு நாட்கள் நாங்கள் ஹோட்டலுக்குச் செல்கிறோம் - நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிட.
ஆமாம், நான் ஒரு ஹோட்டலுக்கும், அவள் ஒரு ஹோட்டலுக்கும்!
*****
நாங்கள் தனி மெத்தையில் படுக்கிறோம். நான் படுக்கை அறையில்; அவள் ஹாலில்.
*****
நான் அவளைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால் என்ன செய்ய?! அவள்தான் திரும்பி வந்து வந்துவிடுகிறாளே!
*****
நான் என் மனைவியிடம் கேட்டேன். "உன்னை நம் கல்யாண நாளுக்கு எங்கே அழைத்துப் போக வேண்டும்?“
அவள் சொன்னாள். "இது வரை போகாத இடத்துக்கு"
அதனால் அவளை சமையலறைக்கு போகச் சொல்லிவிட்டேன்!
*****
நான் எப்போதும் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பேன்.
இல்லாவிட்டால், கடைக்குள் நுழைந்துவிடுவாள் - ஏதாவது வாங்குவதற்காக!
*****
எங்கள் வீட்டில் அவள் உபயோகத்திற்கு எலெக்ட்ரிக் குக்கர், எலெக்ட்ரிக் மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருக்கிறது. "வீட்டில் எல்லாம் 'ஒரே சாமானாக' இருக்கிறது; உட்காரவே இடமில்லை" என்று அவள் குறைபட்டுக் கொண்டாள்.
அதனால் அவள் பிறந்த நாளுக்கு 'எலெக்ட்ரிக் நாற்காலி' வாங்கலாம் என்றிருக்கிறேன்.
*****
என்னுடைய மனைவி தனது கார் சரியாக ஓடவில்லை. கார்பரேட்டரில் தண்ணீர் புகுந்து விட்டது என்றாள். போய்ப் பார்த்தேன்.
ஆம்.. கார் ஏரிக்குள் மிதந்து கொண்டிருந்தது!
*****
குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என் மனைவி வேகமாகச் சென்றாள், குப்பையைக் கொட்ட. அந்த டிரைவரிடம் " நான் ரொம்ப லேட்டா? என்று கேட்டாள்.
அவர் சொன்னார். "பரவாயில்லை, உள்ளே குதித்து விடுங்கள்."
*****
"உன்னுடைய ஐம்பதாவது கல்யாண நாளை எப்படிக் கொண்டாடப் போகிறாய்?" என்று நண்பர்கள் கேட்டார்கள்.
இருபத்தைந்தாவது கல்யாண நாளன்று கல்கத்தாவிற்குச் சென்றோம். இப்போது வேண்டுமானால் அவளை அங்கிருந்து அழைத்து வரலாம்" என்றேன்.