BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகிறுக்கல்கள் ... கிறுக்கல்கள் ... Button10

 

 கிறுக்கல்கள் ... கிறுக்கல்கள் ...

Go down 
AuthorMessage
GVPrabu

GVPrabu


Posts : 116
Points : 272
Join date : 2010-06-01
Age : 40
Location : Kuala Lumpur

கிறுக்கல்கள் ... கிறுக்கல்கள் ... Empty
PostSubject: கிறுக்கல்கள் ... கிறுக்கல்கள் ...   கிறுக்கல்கள் ... கிறுக்கல்கள் ... Icon_minitimeWed Jun 02, 2010 2:56 am

மௌனம் சம்மதம்?
சூழ்நிலைக்கைதியின் மௌனம்
சூழலால் மௌனம்
பாசத்தால் மௌனம்
பயத்தால் மௌனம்
அறிவினால் வரும் மௌனம்
அறியாமையால் வரும் மௌனம்
துக்கத்தால் மௌனம்
தூக்கத்தால் மௌனம்
காதலால் மௌனம்
கனவால் மௌனம்
மேன்மையின் மௌனம்
மூடனின் மௌனம்
மௌனம் என்றுமே சம்மதம் அல்ல ...

-------------------------

காதலனின் கண்கள்
மண்ணின் தாகத்தை தனிக்கும் அருவியோ
பெண்ணின் மோகத்தைப் போக்கும் கருவியோ

வானவில்லைத் தீட்டும் வெயிலோ
வசந்தத்தைத் தெரிவிக்கும் குயிலோ

வேந்தன் கையேந்திய வெற்றி வாளோ
சிவமைந்தன் கையமர்ந்த வீர வேலோ

வண்ணத் தோகை விரித்தாடும் மயிலோ
வனப் பெண்ணைத் தேடியோடும் ஆவலோ

மண்ணைத் தின்ற குழந்தையின் கபடமோ
வெண்ணை உன்ற கண்ணனின் விகடமோ

அவளைச் சிறைச் செய்த விலங்குகலோ
அவை உரைக்கும் பொருள் விளங்கலையோ

பாராமல் பார்த்த வித்தையோ
விரையாமல் தவழ்ந்த தத்தையோ

மொட்டழகி இவள் வசமே!
கட்டழகுக் காதலனின் கட்டிப் போடும் காந்தள் விழிகளே!

----------------------

காதல்
காதல் என்பது கடவுள் போல
அடுத்தவர் மனதில் இருக்கிறதா இல்லையா என்று கண்டுகொள்வது கடினம் ...
ஆனால் காதல் கடவுள் அல்ல
ஏனென்றால் அது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல ...

காதல் என்பது காற்று போல
பிறர் சொல் கேளாமலே உணர முடியும் ...
ஆனால் காதல் காற்று அல்ல
அது கலைவதில்லை ...

காதல் நிலவைப் போல
வளரும், தேயும், ஓடி ஒழியும், ஒரேயடியாக மறைந்து விடாது ...
காதல் நிலவு அல்ல
கலங்கமின்றி, அடுத்தவர் ஒளி இல்லாமல் வாழும் ...

காதல் பூவைப் போல
பார்ப்பவரை முகம் மலரச் செய்யும் ...
ஆனால் காதல் பூ அல்ல
சூடிக் கொள்ளப் பறிக்கையில், ஈன்றச் செடி கண்ணீர் விடும் ...

காதல் காந்தியைப் போல
ஒருவனை உண்மை எல்லாம் பேச வைக்கும் ...
ஆனால் காதல் காந்தி அல்ல
பொய்யும் பேசச் சொல்லும் ...

காதல் ஒரு கடத்தல்காரன் போல
கண்ணைக் கட்டி போட்டு விடும் ...
ஆனால் காதல் கடத்தல்காரன் அல்ல
அடுத்தவரை வற்புறுத்தி வாழ விரும்பாதே ...

காதல் என்பது மென்பொருள் போல
எவ்வளவு பிழைகள் இருந்தும் பிழைத்துக் கொள்ளும் (கொல்லும்!!!) ...
ஆனால் காதல் மென்பொருள் அல்ல
விலை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் வாங்க இயலாது...

ஆதலால் காதல் அதுவாகவே வந்தால் ...
காதல் செய்து இன்புறுவாயாக !!!

--------------------------------

ஒற்றைப் பாதை
(பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் மெட்டை உபயோகித்து வாசியுங்கள்)

கண் எட்டிய தூரம் பார்த்தேன் ஒற்றைப் பாதையை
மனம் ஓடிய நினைவைக் கேட்டென் அப்பாதையின் கதையை
ஒற்றைப் பாதை மேடு பள்ளம் வாழ்க்கைப் போன்றதே
ஒற்றைப் பாதை தந்த ஞானம் அருமைப் பாடமே

அதில் மாடும் கன்றும் ஒரத்தில் மகிழ்வாய் சென்றதே
அங்கே மேடும் குன்றும் தூரத்தில் விண்ணை வென்றதே
தங்கத் தைலக் காட்டின் நறுமனம் காற்றில் விரைந்ததே
எங்கும் தையல் வீட்டின் சமையல் நாற்றம் நிறைந்ததே

பொழிந்த மழையில் நனைந்த இலையில் நீர் முத்துக்கள்
விழுந்த இடத்தில் முனைந்து முளைத்த கீரை நாத்துக்கள்
அடித்த காற்றே வளரும் பிள்ளைக்கு வீர வித்தைகள்
ஆடிய நாற்றே உழைத்த உழவனின் ஆயிரம் சொத்துக்கள்

ஈர மனலில் உள்ளே புதைந்த கால் தடங்கள்
ஒர புதரில் ஒளிந்து படர்ந்த பாம்பின் தோல்கள்
வீரம் மிகுந்து வெளியே பார்க்கும் மண் புழுக்கள்
நேரம் கழித்து மேலே தோன்றும் விண் பூக்கள்

கணவன் மனைவி குழந்தை குடும்பம் இனிதாய்ச் சென்றதே
ஆண்கள் பெண்கள் சிறார் கூட்டம் விரைந்து போனதே
மக்கள் மாக்கள் மரங்கள் அனைத்தும் தாங்கி நின்றதே
சாதி மத பேதம் ஒதுக்கி மனதை வென்றதே

நடந்து போன பெண்களைப் கேலி பேசி களித்து நின்றனரே
ஆடிச் சென்ற போதை ஏரியவனைக் கண்டு பயந்தனரே
விடாது பிரித்துப் பார்க்கும் பழக்கம் கொண்ட மானிடரே
கடைசியில் ஒற்றைப் பாதை வழி சென்றனர் மயானதுக்கே ...

-------------------------------------

காதலின் வெற்றி
ஞாபகமுண்டோ ஞாபகமுண்டோ ஞாபகமுண்டோ
முதன் முதலாக உன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் ஞாபகமுண்டோ ?

முதன் முதலில் சுவைத்த அமுதின் சுவை
முதன் முதலில் வைத்த காலடி அளவு
பார்த்துக் களித்த முதல் முகம் அழகு
பழகக் கிடைத்த முதல் பெண் தோழி ஞாபகமுண்டோ ?

பள்ளிக்கூட முதல் ஆசிரியை பேர்
அள்ளித் தெளித்த முதல் புது மாரி
விழுந்துத் தொழுத முதற் கடவுள் கோவில்
அழுது வேண்டிய முதல் வரம் நெஞ்சில் ஞாபகமுண்டோ ?

கடலில் கண்ட முதல் நிறம் ரம்மியம்
படகாய் வளைந்த முதல் வானவில் ஓவியம்
மடலில் எழுதிய முதல் வரி அர்த்தம்
தொடலால் எழுந்த முதல் பரிவர்த்தம் ஞாபகமுண்டோ ?

காற்றில் நுகர்ந்த முதல் மலர் நறுமணம்
சேற்றில் நகர்ந்த முதல் செந்தாமரை
சோற்றைப் பகிர்ந்த முதல் சுக நேசம்
சுற்றி மகிழ்ந்த முதல் ராட்டின வேகம் ஞாபகமுண்டோ ?

அடுக்கடுக்காய் அத்தனை கன்னி நினைவுகளும்
அன்றன்றே சட்டென கண்ணி நீ மறந்தாயே ...
அற்பன் மேல் கொண்ட அற்புதக் காதலை
முதற் காதல் முற்றும் அல்ல என்றுரைத்து
புதர் மேல் சுற்றித் தூக்கிப் போடாததேனோ ?

நடைவண்டித் தள்ளி விழுந்த மழலையைப் பார் !
அடை அடையாய்க் கட்டும் தேனியைப் பார் !
வெட்ட வெட்ட துளிர்த்த முருங்கையைப் பார் !
முட்ட முட்ட வளர்ந்த விருட்சம் பார் !

தீயிற் சுட்டாலே தான் இரும்புக்கு உறுதி
வெயிற் பட்டாலே தான் அரும்புக்கு மலர்ச்சி
மையல் கெட்டதாலே மங்கையின் மணமே நீ
தொய்யல் கொள்ளாமல் பொங்குவாய் நலமே ...

முதல் காதல் தோல்வி வரும் காதலின் வெற்றி
வாழ்க்கையென்னும் பயனத்திலே வரும்
ஒரு சிறு துறைமுகமே முதற் காதல் ...
பேரானந்தப் பெருமழை வருவதை
பறைசாற்றும் சிறு ஊசித் தூரலே முதற் காதல் ...

----------------------------------

என் பிள்ளை எங்கே?
தங்கம் எங்கே ஏங்கினேன்
பொங்கி நெஞ்சம் விம்மினேன்
தங்கும் வீட்டில் தேடினேன்
தாங்காமல் தேடி வாடினேன்

பாடிப் பாடி அழைத்தேன்
கோடியில் ஓடிக் களைத்தேன்
சுற்றிச் சுற்றி அழிந்தேன்
போற்றிப் போற்றி மொழிந்தேன்

கண் தெரியவில்லை என்றேன்
காது கேளவில்லையென ஏசினேன்
மரம் போல நின்றாயென்றேன்
கரம் பிடித்துப் போவாயென்றேன்

வேதனைத் தாயின் நெஞ்சமே
சேய்தனைக் காணக் கெஞ்சுமே
பேதையின் எண்ணம் தெளிந்ததே
இக்குழந்தைகள் சிரிப்பில் ஒளிர்ந்ததே ...

('கடவுள் எங்கே?' என்று தலைப்பை மாற்றிப் படிக்கவும்)

----------------------------------------

'தெய்வத்தின் வடிவமே!
பலர் பட்டத் துன்பங்களை அழித்ததோ
பலர் சொன்ன வன்மங்களை ஒழித்ததோ
பலர் மன சஞ்சலங்களைக் கிள்ளியதோ
பலர் குண வஞ்சனைகளைத் தள்ளியதோ
பலர் பாவம் கழுவிய அந்தச் சுத்தச் சீருடை?

இறைவன் தந்த சோதனைகள் புரிந்துப் புதைக்கவோ
அரும்பும் அந்த ஆசைகள் அன்றன்றே அடக்கவோ
விரும்பும் சின்ன சொகுசுகள் விடுத்து மூடவோ
துரும்பாய் நினைத்த சுகபோகங்கள் அடைத்த குகையோ
அந்தச் சிறியத் தலை மூடி?

மனிதனுள்ளே மறைவாய் இருக்கும் மனக் கண்ணாடி - அதை
இனிதாய் மேலே விரைந்து தள்ளும் உம் முகக் கண்ணாடி!
ஒளிக்க ஏதும் எம்மிடம் இல்லை என்றுரைக்கும் நரைமுடிகள்
வலிக்கும் போதும் உம்முளம் மறக்கவில்லையே இறையடிகள்!

அழுத்தும் கொடியில் எளிதாய் மலர்ந்த செந்தாமரை
இழுக்கும் சங்கிலியில் மீண்டுத் தெளிந்த முகமந்தாரை!
கேளாமல் கனி கொடுக்கும் காட்டு மரங்கள்
துவளாமல் பணி புரியும் உம் அன்புக் கரங்கள்!

தேவைச் சுருக்கித் தேக்கிய ஓடையோ உம் கன்னச் சுருக்கங்கள்
சேவைப் பெருக்க ஆக்கிய மேடையோ உம் எண்ண விருப்பங்கள்!
வாழ்க்கைப் புரிந்ததால் வந்த ஞானமோ உம் மனக்களிப்பு
வாழத் தெரியாத மாந்தர்க்கு பாடமோ உம் புன்சிரிப்பு!

சொந்தப் பந்தப் பாசம் யாவும் சொல்லாமல் போகுமே
உம் கண் சொல்லும் மொழி கேட்டால்! - இங்கே
வந்து விழுந்த பாடம் யாவும் கேளாமல் விளங்குமே
உம் விழிப் பார்வைக் கொஞ்சமாய்ப் பட்டால்!

[எம் பள்ளிக் காலத்தில் பாடக் கல்வி மற்றும்
வாழ்க்கைக் கல்வி புகட்டிய நல்லுளங்களுக்கு (சிஸ்டர்ஸ்) இக்கவிதை சமர்ப்பனமே.]

-------------------------------

காக்கவைக்கும் என் காதலனே!
காத்திருக்க வைத்தாயே, காலம் பார்த்திருக்கச் செய்தாயே,
எதிர்பார்த்திருக்கச் சொன்னாயே, எதிர்பாராமல் வந்தாயே!
தண்ணீர் வெள்ளமாய் இதயக் கேணியில் மெல்லப் பாய்ந்தாயே!
சந்து பொந்தெல்லாம் சென்றாயே!
நொந்து வெந்த நெஞ்சின் வரம் நீயே!

வரும் போது வந்த உன் நினைவுகள், இருளோடு நீங்காதே!
தரு நிழல் மீது தனித்திருக்க அழகாய் அனைத்துச் செல்வாயே!
உரு மாறி நடித்தாலும், பெரு மாரியாய்த் தேகத்தைத் தொடுவாயே!
ஒரு முறை எட்டித் தீண்டிவிட்டு, மறுமுறைத் தூக்கிப் போவாயே!

அடிமனதில் உன்னையே அசைத்திருப்பேன், ஆனால் வீட்டிற்கு வாராதே!
அம்மையப்பன் என்னிலே ஆசைக்கொண்டர், வீணாய்த் தீமூட்டித் தீர்க்காதே!
என் விழிப் பார்வைக் கிட்டாமல், அடுத்த வீட்டு வழி வாசல் தட்டாதே!
கண் கிழிக் கொண்டு விரட்டுவேன், எடுத்த அடிப் பாய்ச்சல் நிற்காதே!

பந்து போல உன் முகம் நெஞ்சில், தந்துப் போகும் ஒரு சோகம்,
அந்த முகம் தங்கும் என் அகம், அதன் சோகம் தரும் பெரும் சுகம்!
வதம் வதம் உன்னைக் கண்டால் என் மதம் மதம் - நீ என்னைப்
பதம் படுத்தும் விதம் உணர்ந்தாலே வரும் இதம்!


காதலா காதலா என் மேல் உனக்கு காதலா?
இல்லை எல்லை மோதலா?
முல்லை மலர்ச் சூடலா?
என் மனக் காதலா, நீ என் மரணக் காதலா!!!

உனக்காக என்னை காக்கச் செய்து எனக்காக நீ பொறுத்தாயே,
உந்தாள் வராமல் என் கால் ஓடினால் என்னை நீ தொடராதே!
மறுக்காதே மறைக்காதே, உன் நோக்கத்தை நான் மறவேனே!
அறுக்காதே அழைக்கதே, என் சொந்தங்களை யான் பிரியேனே!

----------------------------------
Back to top Go down
http://www.besttamilchat.com/
 
கிறுக்கல்கள் ... கிறுக்கல்கள் ...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ரூல்ஸ் நண்பரின் கிறுக்கல்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: