BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!! Button10

 

 உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!! Empty
PostSubject: உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!   உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!! Icon_minitimeSun Jul 18, 2010 6:23 pm

சாதனைகள் பல செய்தும் இன்னும் உலக அரங்கில் சரிந்த நிலையில் நம் நாடு ஏன் இருக்கிறது என்று எப்பொழுதாவது நாம் சிந்தித்தது உண்டா . நமது வேலைகளை நாம் பார்ப்பதற்கே நேரம் இல்லை நமக்கு எதற்கு இந்த தேவையற்ற வேலை என்று பலரும் சலித்துகொள்வதும் உண்டு . ஆனால் இந்த சரிவுக்கு முக்கிய காரணம் நாம்தான் . என்னடா இவன் இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுகிறானே என்று என்ன வேண்டாம் .இதுதான் உண்மை

அணுகுண்டு வைத்திருக்கிறோம், ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி காண்கிறோம், ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.. ஆனாலும் ‘இந்தியா லஞ்ச ஊழலில் திளைக்கும் நாடு என்றுதான் உலகமும் பார்க்கிறது. இந்த அவமானம் நம்மை விட்டு போவேனா என்கிறது. உலக அளவில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறதாம். ஓட்டப் பந்தயத்தில் அத்தனாவது இடத்தில் வந்தால் வேடிக்கை பார்க்கக்கூட எவரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆய்வை நடத்துகிறது. சென்ற ஆண்டு நமக்கு 85ம் இடம். அதற்கு முன்னால் 72. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகள் கைமாறிய விவகாரத்தால் தடாலென்று 13 படி சறுக்கினோம். அரசு துறைகளில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வேலைகள் எப்படி முடித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. அதில் மொத்தம் 13 குறியீடுகள். அதிகாரிகளின் நேர்மை ஒரு குறியீடு. லஞ்சம் வாங்காமல் வேலையை முடித்து தருவதாக ஆய்வில் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தால் முழு மதிப்பெண் போடப்படும். இந்த விஷயத்தில் இந்தியா பெற்றுள்ளது 10க்கு 3.4 மட்டுமே. பக்கத்தில் உள்ள குட்டி நாடு பூடான் 5 மார்க் வாங்கியுள்ளது. தனியார் துறை ஊழல்கள் இந்த கணக்கில் வராது. உலகிலேயே லஞ்சம் குறைந்த நாடு நியூசிலாந்து. அடுத்து டென்மார்க், அப்புறம் சிங்கப்பூர். இம்மூன்றும் 9க்கு மேல் பெற்றுள்ளன. இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்து ஆடும் துறைகளில் முதன்மையானது காவல் துறை.

லஞ்சம் குறைந்தது பள்ளிக் கல்வித் துறை. ஊழல் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை பெறுவது பீகார். அடுத்து வருவது காஷ்மீர், மத்திய பிரதேசம். அரசுப் பணிகளை கணினி மயமாக்கியதால் லஞ்சம் பெரிய அளவில் குறைந்துவிடவில்லை என்று அகமதாபாத் IIM நடத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஏனென்றால் அந்த கணினிகளை கையாள்வது மனிதர்கள். அவர்களுக்கு பதில் ரோபோக்களை நியமித்து அரசு எந்திரத்தை உண்மையிலேயே எந்திரமாக்கினால் இந்தியாவும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு இருக்கிறது..

நமது உரிமைகளையே பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கும் அளவில் ஒரு நாடு சீரழிந்திருந்தால் அப்போது நம் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது சில வேளை நிர்ப்பந்தமாகி விடுகிறது. இது போன்ற நிலையை அடைவோர் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தால் அது மன்னிக்கப்படும்.

நமது முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஒரு முறை மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த உரையாடல் நினைவிற்கு வருகிறது

அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஒரு அறிவியல் புரட்சி ஏற்படும். அப்போது பயோ டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகியவை சேர்ந்து ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தக் காலத்தில் லஞ்சம், பெருமளவு பெருகி விட்டது. எந்த அளவுக்கு எனில் சில ஊழியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தை விடக் கூடுதல் வருமானமாக லஞ்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல பல கம்பெனிகளுடைய வரவு, செலவு கணக்கு (பட்ஜெட்)களில் பல்வேறு (மறைமுகமான) பெயர்களில் லஞ்சம் கொடுக்கல், வாங்கல்கள் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான கொடுக்கல், வாங்கல்கள் எப்படி மாறி விட்டன என்றால் அவை ஆரம்பமாவதும் லஞ்சம் மூலமாகத்தான் முடிவதும் லஞ்சம் மூலமாகத்தான். அதனால் ஏழைகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதனால் (மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட) பல்வேறு பொறுப்புகள் பாழாகி விட்டன. தொழிலாளிகள் கெட்டுப் போவதற்கும் அதனால் முதலாளிகள் நஷ்டம் அடைவதற்கும் இதுதான் காரணம். அது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பவருக்குத் தான் வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுகிறது. எவர் லஞ்சம் கொடுக்கவில்லையோ அவருடைய வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுவதில்லை. அல்லது அவருடைய வேலை தாமதப்படுத்தப்படுகிறது.

நமது நாட்டை லஞ்சம் இல்லாத நாடாக உருவாக்க முடியும். நமது நாட்டில் 100 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 20 கோடி வீட்டில் இருப்பார்கள். அப்படி என்றால் ஒரு வீட்டில் 5 பேர் இருப்பார்கள். அனைத்து வீட்டிலும் லஞ்சம் வாங்குபவர்கள் இருக்க முடியாது. 50 சதவீதம் அதாவது 10 கோடி வீட்டில் லஞ்சம் வாங்கும் தாயோ அல்லது தந்தையோ அல்லது வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஊழலில் மாட்டிக் கொண்டு இருப்பார்கள்.

துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் தாய் அல்லது தந்தையிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? (மாணவர்கள் முடியும் என்றனர்). முடியும். வெரிகுட்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து கேட்கிறேன். நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக உங்களது குழந்தை வந்து அப்பா லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? (கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கேட்போம் என்றனர்) கேட்பீர்கள். அப்படியானால் இன்னும் 5 ஆண்டுகளில் லஞ்சம் இல்லாத இந்தியா மலரும்.

ஒவ்வொரு குடிமகனும் லட்சிய சிகரத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு படிக்கும் மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.

வந்திருக்கும் மாணவர்களில் எத்தனை பேர் அரசியல் தலைவர்களாக வர விரும்புகிறீர்கள்? கையை உயர்த்துங்கள். (7 மாணவ- மாணவிகள் கையை உயர்த்தினர்) உயர்த்தியவர்களில் 3 பேர் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஏன் அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று அவர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மாணவிகளில் ஒருவர், "குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் கஷ்டப்படும் சிறுவர்களை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவராக ஆகவேண்டும் என்று விரும்புவதாக'' பதில் அளித்தார்.

அந்த மாணவியை பார்த்து உனக்கு 100 மார்க் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறி பாராட்டு தெரிவித்தார்.

எப்பொழுதோ பார்த்த இந்தியன் படத்தில் சொல்லும் ஒரு கருத்து இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகிறது . வெளி நாடுகளில் நான் லஞ்சம் யாரும் வாங்கவில்லை என்று சொல்லவில்லை . வாங்குகிறார்கள் . அவர்கள் எல்லோரும் தங்கள் பணியை மீருவதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள் . ஆனால் நமோ நமது பணிகளை செய்வதற்கு லஞ்சம் வாங்குக்கிறோம் .இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை .அதனால்தான் இன்னும் அடிப்படை தேவைகளுக்குக் கூட கை ஏந்தும் நிலை நமது நாட்டில் . இந்த நிலை இன்னும் நீடித்தால் உலக அரங்கில் நமது நாடு மக்கள் தொகையில் முதல் இடம் பிடிக்கிறதோ இல்லையோ அதற்கு முன்பாக லஞ்சத்தில் முதல் இடம் பிடித்துவிடும் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகிப்போகலாம் .

Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!! Empty
PostSubject: Re: உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!   உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!! Icon_minitimeMon Jul 19, 2010 4:30 am


ஆமா லஞ்சம்னா என்ன??????
Back to top Go down
 
உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மலிவு விலையில் மனித உயிர்கள், மரண வியாபாரத்தில் இந்தியா!
»  ரஜினி பற்றிய கட்டுரை... மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே!
» இந்தியா 2020 வல்லரசா வருமா...?
» இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு
» Mangalore: Air India aircraft overshoots runway, 160 feared dead

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: