BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசொந்த ஊர் !!! Button10

 

 சொந்த ஊர் !!!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

சொந்த ஊர் !!! Empty
PostSubject: சொந்த ஊர் !!!   சொந்த ஊர் !!! Icon_minitimeThu Jul 29, 2010 4:00 am

சொந்த ஊர் !!!

வயல்வெளிபார்த்து
வறட்டி தட்டி
ஓணாண்பிடித்து
ஓடையில்குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோபடித்தநான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு

சிறுஅறையில்குறுகிப்படுத்து
சிலமாதம்போர்தொடுத்து
வாங்கிவிட்டவேலையோடு
வாழுகிறேன்கணிப்பொறியோடு !


சிறிதாய்த்தூங்கி
கனவுதொலைத்து
காலை உணவுமறந்து
நெரிசலில்சிக்கி
கடமைஅழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசுபார்க்க !


மனசுதொட்டு
வாழும்வாழ்க்கை
மாறிப்போகுமோ ?


மௌசுதொட்டு
வாழும்வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர்மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?


சொந்தபந்த
உறவுகளெல்லாம்
ஷிப்பைலாய்
சுருங்கிப்போகுமோ?


வாழ்க்கை
தொலைந்துபோகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!


தாய்மடியில்தலைவைத்து
நிலவுமுகம்நான்ரசித்து
கதைகள்பேசி
கவலைகள்மறந்தகாலம்
இனிதான்வருமா ?


இதயம்நனைத்த
இந்தவாழ்வு
இளையதலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?


சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

சொந்த ஊர் !!! With_r21
Back to top Go down
 
சொந்த ஊர் !!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இந்த மண் எங்களின் சொந்த மண்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: