அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?
நண்பர்களே ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும்
எனப் "படிக்காத மேதை காமராஜர்" எனும் நூலின் வாயிலாகச்
சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன். அரசியல்வாதிகளுக்குக்
கீழ்க்கண்ட 11 வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு
கிடைப்பது 111. (அதாங்க நாமம்! நாமம்!!)
1 . பொழுதெல்லாம் பொது நலத்துக்கு உழைக்க வேண்டும்.
2 . மக்களுக்காகத் தாங்களே தவிர, தங்களுக்காக மக்கள் இல்லை.
3 . செய்யும் முன்பு கூறக் கூடாது. செய்த பின்பு பேசக் கூடாது.
4 . அரசுப் பணிகள் அரசின் பணிகளே தவிர, அரசியல்வாதிகள் பணியல்ல.
5 . அரசுப் பணியாளர்களை முடுக்க வேண்டும் , முடக்கக் கூடாது.
6 . அரசியல்வாதிகள் எல்லாமும் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் தெரிந்தவராக மட்டும் இருக்கக் கூடாது.
7 . வெற்றியை தமது தோளிலும், தோல்வியை பிறரின் தோளிலும் வைக்கக் கூடாது.
8 . கொள்கையினைப் பகைக்கலாமே தவிர, அதைக் கொண்டவர்களைப் பகைக்கக் கூடாது.
9 . எதிர்கட்சியினர் எதிரணி தானே தவிர, எதிரிகள் இல்லை.
10 . நல்ல பொருளுக்கு விளம்பரம் வேண்டாம். நல்ல அரசியல்வாதிக்கும்
விளம்பரம் தேவையில்லை.
11 . அரசியல் என்பது ஒரு நாட்டில் நடப்பது தெரியாமல் நடக்க வேண்டும்.