தேவையான பொருட்கள்
* இட்லி மாவு - 3 கப்
* உருளைக்கிழங்கு - 100 கிராம்
* பச்சைப்பட்டாணி - 100 கிராம்
* காரட் - 100 கிராம்
* பெரிய வெங்காயம் - 100 கிராம்
* குடைமிளகாய் - 2
* எண்ணெய் - 2 தேக்கரண்டி
* கடுகு - அரை தேக்கரண்டி
* கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
* உப்பு - தேவையான அளவு
* பச்சைமிளகாய் - 2
செய்முறை
* அனைத்து காய்கறிகளையும் சுத்தப்படுத்தி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்கறி, உப்பு, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும்.
* எண்ணெய் தடவிய இட்லி தட்டில் கால் கரண்டி மாவை விட்டு ஒரு தேக்கரண்டி காய்கறி மசாலா பரப்பி அதன்மேல் மேலும் சிறிது மாவு ஊற்றவும்.
* இப்போது இட்லியை நன்றாக வேகவிட்டு இறக்கி, சூடாக எடுத்துப் பரிமாறவும்