lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: அதிசய தகவல் துளிகள் Mon Apr 11, 2011 7:10 pm | |
| குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய் விட்டுச் சிரிக்கின்றனர். ஆனால் பெரியவர்கள் 15 முறை மட்டுமே சிரிக்கின்றதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சராசரியாக ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அடிகளை ஒரு மனிதன் எடுத்து வைக்கிறான்.
பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 40% அதிகமாக வியர்க்கும்.
மேற்கு சீனாவில் வசிக்கும் மக்கள், தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பைக் கலந்து குடிக்கின்றனர்.
பெண்களை விட ஆண்கள் அதிகமாக சத்தம் போட்டு சிரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அமெரிக்கர்களில் 40% பேர் பல் மருத்துவர்களிடம் சென்றதே இல்லை. இதனால் 55 வயதை நெருங்கும் போது, ஏறக்குறைய 50% பேர் அதிகளவில் பற்கள் விழுந்து 'பொக்கை' வாயர்களாக மாறுகின்றனர்.
அதன் பிறகே மருத்துவர்களிடம் ஓடிச்சென்று சிகிச்சை பெறுகின்றனர். | |
|