BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : வலையகம் / வலைத்தளம் Button10

 

 உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : வலையகம் / வலைத்தளம்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : வலையகம் / வலைத்தளம் Empty
PostSubject: உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : வலையகம் / வலைத்தளம்   உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : வலையகம் / வலைத்தளம் Icon_minitimeMon May 24, 2010 3:09 pm






எந்த ஒரு வலையகத்தையும் பயன்படுத்துவதற்குக் கணினி ஒன்றும் அதில் இணைய இணைப்பும் தேவை.

செய்தித்தாள்கள், விளம்பரங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் மற்றும் உணவு விடுதிகள், அரசு நிறுவனங்கள் போன்ற பிற சேவை நிறுவனங்கள் ஆகியவற்றின் முகவரிகளில் www என்ற எழுத்துகளைத் தொடர்ந்து சில சொற்கள் அமைந்திருப்பதைக் காணலாம். இதனை வலையகம் அல்லது வலைத்தளம் எனத் தமிழிலும், website என ஆங்கிலத்திலும் அழைப்பர். இவ்வலையகம் இணையத்தின் முக்கியமானதோர் உறுப்பாக விளங்குகிறது. குறிப்பிட்ட பொருள் அல்லது செய்தி பற்றிய தகவல்கள் அல்லது விவரங்கள் பற்றிய பக்கங்களை இவ்வலையகங்கள் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி விளக்கும் புத்தகம் போன்று இவ்வலையகங்கள், கணினி மற்றும் இணையத்தின் வாயிலாகச் செயல்படுகின்றன.

பென்னர்ஸ் லீ என்னும் பிரிட்டிஷ் கணினித் தொழில்நுட்ப அறிஞர் 1989ஆம் ஆண்டு வலையகத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். ஐரோப்பியக் கண்டத்தைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி விவரங்கள் அனைத்தையும் தரும் நோக்கத்தோடு "புலனாய்வு (Enquiry)" என்று இதற்கு அவர் பெயரிட்டார். பின்னர் இத்தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சியுற்று மேம்பாடடைந்த பின்னர் www என்ற எழுத்துகள் முகவரிக்கு முன்னர் சேர்க்கப்பட்டன. மீ உரைச் சுட்டு மொழி (Hyper Text Markup Language – HTML) தெளிவடைந்த பின் வலையகங்கள் மேலும் வளர்ச்சியுற்று நவீனப்படுத்தப்பட்டன.

எந்த ஒரு வலையகத்தையும் பயன்படுத்துவதற்குக் கணினி ஒன்றும் அதில் இணைய இணைப்பும் தேவை. கணினியில் "இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை" (Internet Explorer) சொடுக்கித் திறக்க வேண்டும். வெற்றுப்பக்கம் திறக்கப்படும். முகவரிக்கான இடத்தில் www………. என்ற நமக்குத் தேவையான முகவரியைத் தட்டச்சு செய்து, நாம் விரும்பும் வலையகத்தைத் திறக்க முடியும். இதில் உள்ள தலைப்புகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சொடுக்கித் திறந்து விரும்பும் தலைப்பிலான பக்கத்தைத் திரையில் ஒழுங்காகத் தோன்றச் செய்யலாம். ஏறக்குறைய ஒரு கோடி வலையகங்கள் இன்று உலகில் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருகிறது.

வலையகங்களின் எண்ணிக்கை உயர உயர அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்லும். மாநில மொழிகளிலும் கூட த் தற்போது வலையகங்கள் உருவாக்கப்படுகின்றன. மீ உரைப் பரிமாற்ற நெறிமுறை (Hyper Text Transfer Protocol – HTTP) வலையகங்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதன் உதவியுடன் விரும்பும் வலையகங்களில் தேவையான தரவுகளை நாம் பெற இயலும். இதனோடு HTMLஉம் சேர்ந்து தெளிவான படங்கள், தெளிவான ஒலி, காட்சிகள், சரியான வடிவமைப்பில் அமைந்துள்ள பக்கங்கள் ஆகியவற்றைப் பெற இயலும். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், செய்தி இதழ்கள், செய்தி நிறுவனங்கள், அரசுத் துறைகள், வங்கிகள், சுற்றுலா மையங்கள் போன்ற பல நிறுவனங்களும் தமக்கே உரிய வலையகங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் உதவியுடன் நமக்குத் தேவையான தகவல்களைப் பெற முடியும். இவ்வலையகங்களின் துணைகொண்டு பேருந்து, இரயில், விமானம் ஆகியவற்றில் நமது இருக்கைகளை முன்பதிவு செய்யவோ, தேவைப்பட்டால் அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ செய்யலாம். சுருங்கக் கூறினால், உலகின் பல்வேறு வளர்ச்சி, முன்னேற்றம் பற்றி அறிய வலையகங்கள் நவீன நூலகங்கள் போன்று விளங்குகின்றன.
Back to top Go down
 
உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : வலையகம் / வலைத்தளம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள்
» உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வெளி (Space)
» பெற்ற மனசு (1)
» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு
» தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY :: Education Special-
Jump to: