குப்பி விளக்கு
மின்சாரம் இல்லா வீட்டில்
மண் வாசனையைக் காட்டுவது!
கூண்டுக்கிளி
சிறைக்குள் அடை பட்டும்
சிறகடிக்க விரும்புகின்ற ஜீவன்!
குறட்டை ஒலி
ஒருவர் தூக்கத்தில் உருவாகி
இருவர் தூக்கத்தை(க்) கெடுப்பது.
பழமொழி
பழமையாய் இருந்தாலும் பூமியில்
பண்பானவர்களை உருவாக்குவது!
நிலாச்சோறு
அன்னையின் அரவணைப்பில்
அமிழ்தமாய் இனித்தது!