BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாணாமல் போன கனவுகள்! Button10

 

 காணாமல் போன கனவுகள்!

Go down 
2 posters
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 42

காணாமல் போன கனவுகள்! Empty
PostSubject: காணாமல் போன கனவுகள்!   காணாமல் போன கனவுகள்! Icon_minitimeThu Apr 01, 2010 6:32 am

காணாமல் போன கனவுகள்!


பட்டாம்பூச்சிகள் பிடிப்பது
பாவமென்றாய்,
மழையில் நனைந்த சிறகானது மனது..
வெயிலும், மழையும்
விரும்புதல் தவறென்றாய்..
கற்பனைக் காளான்கள் கருகின
ஒவ்வொரு மழைநாளிலும்...
இடைவருட எத்தனித்த
ஒற்றைப்பின்னல் கூடாதென்றாய்,
இரண்டானது
பின்னலும், மனதும்..
பால்ய நண்பனிடம் பழகுதல்
குற்றமென்றாய்,
நண்பர்கள் தொலைத்து
நான் மட்டும் நடைபோட்டேன்
நாட்கள் தள்ளி...
பிடித்த நிறங்களும்,
பணிகளும், பொழுதுபோக்குகளும்,
விளையாட்டுகளும்
என்னால் கண்டுகொள்ளப்படாமல்
உன்னால் திணிக்கப்பட்டது...
கனவில் மட்டுமே கைநிறையும்
மண்குடிசை மழலையின்
மாளிகை பொம்மையென
கண்ணீரில் பிரதிபலிக்கும்
செவ்வானமானது
என்னின் காதல் கனவுகள்
இதோ,
இன்று, வேறு பாதையை நோக்கி
என்னை செலுத்த தயார்படுத்துகின்றாய்
கடிவாளமிட்ட குதிரையென
கடக்க காத்திருக்கிறேன்
மீதமுள்ள வாழ்க்கையையும்
தலையை மட்டும் ஆட்டும்
பழக்கப்பட்ட பொம்மையாய்..
உனக்கும், எனக்குமாய்
பல கற்பித்தல்களும்,
கருத்து வேறுபாடுகளும்
இவற்றினூடே,
இன்னும் காணப்படாமலே
இருக்கின்றன அம்மா,
என்னின் பல கனவுகள்...


(02-03-09)உயிரோசை இதழில் பிரசுரமானது.

-அன்புடன்,
Anand
Back to top Go down
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

காணாமல் போன கனவுகள்! Empty
PostSubject: nice nice super   காணாமல் போன கனவுகள்! Icon_minitimeWed Apr 07, 2010 9:05 pm

super super
Back to top Go down
http://wwww.myacn.eu
 
காணாமல் போன கனவுகள்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கனவுகள்-1
» காணாமல் போனவன் - ஜப்பானிய சிறுவர் கதை
» ~~Tamil Story ~~ ஆடுகள் காணாமல் போகின்றன
» *~*யாரையும் நோகாத கனவுகள்..*~*

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: