BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமேற்கிந்தியத் தீவுகளிடம் வீழ்ந்தது இந்தியா Button10

 

 மேற்கிந்தியத் தீவுகளிடம் வீழ்ந்தது இந்தியா

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

மேற்கிந்தியத் தீவுகளிடம் வீழ்ந்தது இந்தியா Empty
PostSubject: மேற்கிந்தியத் தீவுகளிடம் வீழ்ந்தது இந்தியா   மேற்கிந்தியத் தீவுகளிடம் வீழ்ந்தது இந்தியா Icon_minitimeMon May 10, 2010 10:54 am

பிரிட்ஜ்டவுன், மே 9: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எஃப் பிரிவு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சூப்பர் 8 பிரிவு போட்டியின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையிடம் தோல்வியைத் தழுவியது. அதேபோல் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இரு அணிகளுமே வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் போட்டி கடுமையாக இருந்தது.

டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கெயில் மற்றும் சந்தர்பால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசினர். சந்தர்பால் 23 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அவரை நெஹ்ரா வீழ்த்தினார். அதன்பிறகு கெயிலுடன் சமி ஜோடி சேர்ந்தார். அவரும் தன் பங்குக்கு 10 பந்துகளில் 19 ரன்கள் அடித்தார். இதில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பிறகு வந்த பொல்லார்டு 11 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். அவர் ஜாகீர் கான் பந்தில் யூசுப் பதானிம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கெயில் சதத்தை நோக்கி வேகமாக ரன்களைக் குவித்துவந்தார். பின்னர் வந்த பிராவோ (1), சர்வான் (0) அடுத்தடுத்து அவுட்டாயினர். கெயில் ஒருவர் மட்டும் நிலைத்து ஆடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். கடைசி ஓவரில் 2 பந்துகளில் எஞ்சியிருக்கையில் கெயில் ரன் அவுட்டானார். அவர் 66 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது.

இந்தியத் தரப்பில் ஆஷிஸ் நெஹ்ரா 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாகீர் கான், ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஹர்பஜன் 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. முரளி விஜய் (7), கம்பீர் (15), ரெய்னா (32), ரோஹித் சர்மா (5), யுவராஜ் சிங் (12) ஆகிய மூத்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
Back to top Go down
 
மேற்கிந்தியத் தீவுகளிடம் வீழ்ந்தது இந்தியா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தன் கண்ணை தானே குத்திக்கொள்ளும் இந்தியா
» உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!
» இந்தியா 2020 வல்லரசா வருமா...?
» இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு
» Mangalore: Air India aircraft overshoots runway, 160 feared dead

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Sports Special-
Jump to: