BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதமிழ் கவிதைகள் Button10

 

 தமிழ் கவிதைகள்

Go down 
Go to page : 1, 2  Next
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: தமிழ் கவிதைகள்   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 6:47 pm


படிக்காதவன்




அன்று...
தள்ளி வைத்தேன்
பள்ளி நாட்களை
இன்று...
அள்ளிக் கொண்டது
என்னை
எள்ளி நகையாடும்
ஏளன நாட்களும்
ஏழ்மை வாழ்க்கையும்!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: தமிழ் கவிதைகள்-2   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 6:50 pm


அழகு



சிங்கத்தில் அழகு..
ஆண் சிங்கம்!

யானைஇல் அழகு
ஆண் யானை!!

மயிலில் அழகு
ஆண் மயில்!!!

மனித இனத்தில்
மட்டும் - ஏன்
பெண்கள் அழகு????
.
.
.
ஆண்கள் வர்ணிப்பதால்.
.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: தமிழ் கவிதைகள்-3   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 6:53 pm


நினைவு



சாலையை
கடக்க உதவிய பின்,
"பார்த்துப் போங்க"
என்ற
என்னைப்பற்றி
என்ன நினைத்திருப்பார்
அந்த பார்வையற்றவர்?
!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 6:56 pm




தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?





வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?




JANU
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: காதல்!   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 6:58 pm


காதல்!


கடற்கரையில்
உன் பெயரை எழுதினேன்
கடல் அலை வந்து
அள்ளிச் சென்றது
அழகான கவிதை என்று!



Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: மனசு   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:00 pm



மனசு


மீன் சாப்பிடக்கூடாது என்றிருந்தேன்
இப்போது சாப்பிடுகிறேன்
மீனவன் சாப்பிடுவதற்காக




Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: தமிழ் கவிதைகள்-6   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:09 pm



கனவு

கனவே கலையாதே...
கடைசி சந்திப்பு நிகழட்டும்
விடிந்தால் காதலிக்கு திருமணம்
!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: அழகிலக்கணம்   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:12 pm



அழகிலக்கணம்


நாளை எனக்கு
இலக்கணத் தேர்வு
இருக்கின்றது...
இந்த நேரம் வரையிலும்
உன்னைத்தான்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
நாளை நிச்சயம்
எழுதி விடுவேன்
உன் பெயரை
இலக்கணப் பிழை
இல்லாமல்...



Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: கண்டு கொண்டேன்   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:14 pm



கண்டு கொண்டேன்



கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!

ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: விடியல் உன் கையில்   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:17 pm



விடியல் உன் கையில்




இரவின் மடியில் சாய்ந்து கொண்டு
விடியலுக்காக காத்திருப்பதை விட
இரவின் கைபிடித்து நடைபயணம்
- செய்துபார்
விடியல் உனக்காக வரவேற்புகம்பளம்
விரித்து காத்திருக்கும்

உழைப்பென்னும் உளி கொண்டு
செதுக்கிபார் - உன் மனதை
உயிருள்ள சிற்பமாய் காட்சியளிப்பாள்
உன் வெற்றி தேவதை

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என
காலச்சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதை விட
காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்
நிற்க வாய்ப்பு கேட்கும்

கற்கள் கால்களை பதம்பார்த்தாலும்
நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை
கடலில் கலக்கும் வரை

மனிதா
நீயும் கடிவாளம் கட்டிய குதிரையாய் - ஓடிப்பார்
உன் இலட்சிய பாதையில்
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்
நிலக்கரி பிரித்த வைரமாய்.

Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: அஞ்சலி   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:19 pm



அஞ்சலி

தீக்குச்சியின்
மரணம்
கண்ணீர் வடிக்கிறது...
மெழுகுவர்த்தி!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: அழகால் ஆபத்து   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:21 pm



அழகால் ஆபத்து

அழகாக
இருக்கின்ற
மயில்களின்
இறகுகளைத்தான்
பிடுங்குகிறார்கள்...
அண்டங்
காக்கைகளின்
இறகுகளை அல்ல!

அழகாக
இருக்கின்ற
ரோஜா
பூக்களைத்தான்
பறிக்கிறார்கள்...
எருக்கம்
பூக்களை அல்ல!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: அழகு...   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:23 pm



அழகு...

புள்ளி வைக்காத
எழுத்து
அழகு...
அதைவிட அழகு
பொட்டு வைக்காத
உன் நெற்றி.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: காத்திருப்பு   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:35 pm



காத்திருப்பு

நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
உன்னுடன் பேசியதுதான்
அதிகம்
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: நம்ப முடியவில்லை   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:38 pm


நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை
வீடு கட்டக் கொட்டப்படுகிற
ஆற்றுமணலில் இன்னும்
சிப்பிகள் கிடப்பதை.

அதனினும் முடியாதது
சிப்பியின் உட்புறச் சுவர்களின்
மாய மினுமினுப்புக்குள் குதித்து
எல்லாச் சிறுபிள்ளைகளும்
நீந்திக் கொண்டிருப்பதை.

மணல் நறநறக்கிற
சொப்பனங்களுக்கிடையில்
அவர்கள் புரண்டு படுக்கையில்
பொத்திய கைகளுக்குள்
புதைந்திருக்கும்
சிப்பிகளின் இதயத்திலிருந்து
பெருகுகிறது
வற்றாத நதி ஒன்றின்
பாடல்.


Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: ஞாபகம் இருக்கிறதா?   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:42 pm



ஞாபகம் இருக்கிறதா?

ஊர்க்கோடி அய்யனார்...
ஓடித் திரிந்த வயல்வெளி...
காக்காய் கடி கடித்து மகிழ்ந்துண்ட
நண்பன் தோட்டத்து
அணில் கடித்த கொய்யா காய்...
மனம் ஈர்க்கும் சிலுவை கோபுரம்...
சாரை சாரையாய்
சந்தனக் கூடு காண...
யானையின் பின்னே
நடந்து போன நாட்கள்...
இவையெல்லாம் உனக்கு
ஞாபகமிருக்குமெனில்,
அன்பே...
என்னையும் உனக்கு
ஞாபகம் இருக்கும்!!

Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: கோடுகளும் சித்திரங்களே   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:46 pm


கோடுகளும் சித்திரங்களே



என்
பாதங்களுக்குக் கீழே
பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.

என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்

ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்

என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிருபிக்க வேண்டியதாயிற்று

என் நிர்வாணத்தை
ஒரு கையால்
மறைத்துக்கொண்டு
என்
அடுத்த கையால்
ஆடை நெய்து
அணிந்து கொண்டேன்

இன்று-
என்
பிரவாகம் கண்டு கரைகள்
பிரமிக்கலாம்
ஆனால் -
இந்த நதி
பாலைவனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான்
இறங்கி வந்தது

தனது
சொந்தக் கண்ணீரும்
சுரந்ததால்
இரட்டிப்பானது
இந்த நதி

இந்த விதை
தன்மேல் கிடந்த
பாறைகளை
முட்டி முட்டியே
முளைத்துவிட்டது

இன்று என்
புண்களை மூடும்
பூக்களினால்
நான்
சமாதானம் அடைவது
சாத்தியமில்லை
இந்தச்
சமூக அமைப்பு
எனக்குச்
சம்மதமில்லை

சரிதம் என்பது
தனி ஒரு
மனிதனின்
அறிமுக அட்டையோ...?
அல்ல
அது
முடிவைத்தேடும்
ஒரு சமூகத்தின்
மொத்த விலாசம்

இதுவோ...
ரணத்தோடு வாசித்த
சங்கீதம்...
எனது
ஞாபக நீரோடையின்
சலசலப்பு...
நசுங்கிய
நம்பிக்கைகளுக்கு
என்
பேனாவிலிருந்தொரு
ரத்ததானம்

இதில்
சில நிஜங்களைச்
சொல்லவில்லை என்பது
நிஜம்.
ஆனால் -
சொன்னதெல்லாம் நிஜம்

நான்
வரைய நினைத்தது
சித்திரம்தான்.
வந்திரப்பவை
கோடுகளே
ஆனால் -
கோடுகளும்
சித்திரங்களே!

மனித நேசம்தான்
வாழ்க்கை என்பதை
அறிய வந்தபோது
என்
முதுகில் கனக்கிறது
முப்பது வயது.



Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: மழைக்காலப் பூக்கள்   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:49 pm



மழைக்காலப் பூக்கள்



அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்

நனைந்து கொண்டே
நடக்கின்றோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.

எவ்வளவோ பேச எண்ணினோம்

ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?

நீ சிரித்தாய்
அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்.



Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: அர்த்தமற்ற வார்த்தை   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:52 pm



அர்த்தமற்ற வார்த்தை




அப்பாவும் அம்மாவும்
கவனிப்பாரற்று காலத்தைக்கடத்துகிறார்கள்
அடிப்படை வசதியுமற்ற
என்
கிராமத்தில்!

எனக்கிணையானவளும்
வெளியிலும் சொல்லமுடியாமல்
வெட்கி
வெட்கி
சோகத்தில் கழிக்கிறாள்
தன்
விடியாத இரவுகளை!

வாரிசுகளும்
நாலு இடம் அழைத்துச்செல்ல
நல்லது கெட்டதுகளைச் சொல்லித்தர
ஆளின்றி
புழுங்கி
புழுங்கி
நகர்த்துகிறார்கள் நாட்களை!

எனக்கும் எவருமில்லை
இந்த
அந்நிய மண்ணில்
இருந்தும்
வெட்கமற்று சொல்லிக்கொள்கிறேன்
நான்
குடும்பக்காரன்!


Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: பார்வை   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:54 pm


பார்வை



மெல்லிய சாம்பற்படிவாய்
கொட்டுகிறது மழை...

வயல்,
ஓரங்களில் தயிர்வளை
பறக்கிற கொக்கு, குடையுடன் மனிதரும்
மெல்லிய சாம்பலின் படிவாய்...

காற்று வீச்சில்
வெண் முத்தென முகம் நனைத்த நீரொடு
அழுவது உன் குரலா...?

போ
போவதுமில்லை...
பின்னர் வா
வருதலுமில்லை...

கொட்டுகிறது மழை
மெல்லிய சாம்பற் படிவாய்...

Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: சந்ததி சங்கிலி   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:57 pm


சந்ததி சங்கிலி



செம்மண் வயிற்றை
கொழுவால் கிழித்து
விதைகளைத் தூவி
வயல்; வயிற்றை தைத்து
மண் புழுவோடு
மனம் விட்டு பேசி
செவலமாட்டுக் கழுத்தில்
உப்புமூட்டை ஏறி
உழவனின் தோளில்
துண்டாய்க் கிடந்து
மானத்தை, பசியை
உடனே காத்து
பேசாத உயிராய்;
உயிராக வாழ்ந்த - எங்கள்
"ஏர் கலப்பையை"
உலகமய கரையான்கள்
அனுமதியின்றி
தின்கிறது....

அ"ம்மா" - என்ற
ஒரு வார்த்தையை மட்டுமே
அசைபோட தெரிந்த
எங்கள் கிராமத்து
உழவு மாடுகள்
அண்டை மாநிலத்தில்
அடி மாடாய்; அடிமையாய்
சாகிறது

விவசாயத் தோழனின்
வியர்வை நதியில்
முளைத்த விதைகள்
பழைய மரப்பத்தாயத்தில்
வீரியம் இழந்து முளைத்த விதைகள்
உலகமயக் கடைகளில்
விற்பனையில்

பசுமையாய்
பயிர்கள் தாங்கிய நிலம்
அடுக்குமனை சுமைகளை
சுமந்து கொண்டே
போகிறது.
ரசாயன உரங்களால்
விளை நிலம் வளம் இழக்கிறது
தரகு கரங்களால் - நாடு
விலைபோகிறது

நிலத்தில்
இனத்தில், கலப்படம்
மொழியில் நவீன முறையில்
கலப்படும்

என்னவோ?
அன்னப்பறவையும்
அனிச்சமலரும்
அழிந்ததே கடைசியாய்
இருக்கட்டும் - நம்
சந்ததி சங்கிலி அறுந்துவிடாமல்
தமிழ்த் தேசியமே முட்டி
முளைக்கட்டும்!

Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: வெளியேற்றம்   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 7:59 pm




இன்னும்
இருவரிகள் தேவைப் படலா‘ம்
இந்தக் கவிதை முடிவதற்கு

அழைப்புமணி
அலற அடுத்தநொடி நுழைந்தவரின்
பாதங்களின் அவசரங்களில்
நசுங்கினவோ அவ்வரிகள்!

எழுதி முடித்த
எந்த வரியிடமும் எஞ்சிய இருவரிகள்
எதிர்பார்த்துத்
தாகமோ தவிப்பா ஏதும் இல்லை
"எழுதுகிறவன் பாடு அது
எதற்கு நமக்கென்றிருந்தன

நிர்வாணமாக
எனது நெஞ்சில் நீந்திக் கொண்டிருக்கும்
இருவரிகள்மேல்
தேடல் அடையாளம்
இழந்து கிடக்கும்
தருணம் தகர்ந்து போனது
"எரிவாயு தீர்ந்து போனது
சொன்னீர்களா?" என்ற என் மனைவி
சொற்களால்.

சன்னலோரம்
போய் நின்றபோது
குழாயடியில் குடங்களின் வரிசை
தெரிந்தது

பள்ளிக்கூடம் ஒன்றுக்கு விட்ட வேளையில்
பசங்கள் பறப்பது
தெரிந்தது
ஈ மொய்க்கும் இலந்தைப் பழ வியாபாரம்
சுறுசுறுப்பாய் நடப்பது
தெரிந்தது

அத்திமரத்தடியில்
இலாடம் அடிக்கக் கவிழ்க்கப்பட்ட
மாடுகள் மூக்கில்
நுரைதள்ளி யெழுந்த
மூச்சில் வேதனை நெடி
தெரிந்தது

அந்திப்பழம் கொத்திப்போடும்
காக்கைகள் நிறம்
துக்கம் அனுசரிப்பது
தெரிந்தது
என் கவிதை முடியத் தேவைப்படும்
இருவரிகள் தவிர
என்னென்னமோ தெரிந்தன

மீண்டும்
மேசைக்குத் திரும்பிக்
காகிதத்தில்
கண்களைக் கவிழ்த்தபோது
"நீ
தேடும் இருவரிகளே போதும்
எதற்கு நாங்கள்" என்று
ஏனையவரிகள் எழுதி வைத்திவிட்டு
வெளியேறியிருந்தது
தெரிந்தது.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: என்னவள்   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 8:13 pm


என்னவள்



இரா உணவு முடித்து
துப்பட்டிக்குள் தஞ்சம் புகுந்து
துயில் விழையும் வேளையில்
தூங்க விட மறுக்கிறாய்

எத்தனையோ நினைத்திருந்தேன்
என்னவென்று மறந்தே போனேன்
எப்போதும் உன் நினைவால்
என் கனவெல்லாம் கலைந்தே போனேன்

கண் மூடித் தூங்கும்போது
காதுக்குள்ளே ரீங்காரமிடுகிறாய்
கால் சதையைக் கடித்து
கதண்டு கதண்டாய் வீங்க வைக்கிறாய்

ஏய்... இரக்கமற்ற கொசுவே
என்னை முழுவதுமாய்த் தந்துவிட்டேன்
என்னவளை மட்டுமாவது உறங்கவிடு!

Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: தூரத்து விண்மீன்கள்   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 8:17 pm


தூரத்து விண்மீன்கள்

எதைக் கொண்டும் நிரப்ப முடியாத
வாழ்வின் கணங்களை
வழிந்தோடும் தேவைகளால் நிரப்பிக்
குடித்துத் தீர்ந்தபோதும் மீண்டும்
அவற்றை நாடித் திரிகிறோம்
ஆசைகளால் நிரப்புகிறோம்
அடைந்தபின்னும் தீராமல்
ஆசை வழிந்தோட
நமக்கான தருணங்களை
தூரத்து விண்மீன்களாக்கி
மறைத்தே வைக்கிறோம்
ஒவ்வொரு விடியலுக்கு முன்பும்


Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் Empty
PostSubject: சிவந்த கடல்   தமிழ் கவிதைகள் Icon_minitimeWed Jun 23, 2010 8:20 pm

சிவந்த கடல்

கடல் வெளியில் நடக்கிறேன்
சுற்றிய நரம்பு வலைகளுக்குள்
மிருதுவான உடல்
களைத்துறங்கும் இரவுகளில்
கெட்ட கனவுத் தசைகளை
பல மீன்கள் கவ்வுகின்றன
உதறி எடுத்துக் கைகளை அசைக்க முயல்கிறேன்
யாரோ ஒருவன் அதனை
வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டிருக்கிறான்
இருந்த இடததிலேயே உழல்கிறேன்
காயம்பட்ட புண்ணிலிருந்து ரத்தம் கசிகிறது
சிவந்த கடலலையில் ரத்தக் கவிச்சி
பெருத்த உடல் தளர்த்துகிறது
படபடப்பு குறைந்த இதயம்
சாவுக்குக் காத்திருந்தவர்கள் துரத்தி வருகின்றனர்
தாரை தப்பட்டையுடன்
கண்கள் இருட்டிக் கடல் வெளி மறைகிறது
சிதிலமான உடலில்
மூடாத கண்களுடன்
ஆழ்ந்த நித்திரையில்
ஈட்டியுடன் வருகிறாள்
வாய் மூடிக் கதறுகிறேன்

Back to top Go down
Sponsored content





தமிழ் கவிதைகள் Empty
PostSubject: Re: தமிழ் கவிதைகள்   தமிழ் கவிதைகள் Icon_minitime

Back to top Go down
 
தமிழ் கவிதைகள்
Back to top 
Page 1 of 2Go to page : 1, 2  Next
 Similar topics
-
» தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்
» தபூ சங்கர் கவிதைகள்
» காதல் கவிதைகள்
» மகிழ்ச்சி கவிதைகள்
» மகிழ்ச்சி கவிதைகள் 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: