BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதிருமணத்திற்கு முன்பு Button10

 

 திருமணத்திற்கு முன்பு

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

திருமணத்திற்கு முன்பு Empty
PostSubject: திருமணத்திற்கு முன்பு   திருமணத்திற்கு முன்பு Icon_minitimeSat Jul 17, 2010 10:23 am

திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் நாம் சிலவற்றைப் பற்றி அறிந்துகொள்வது நல்லது, பழைய காலத்தில் மணமகனுக்கும் மணமகளுக்கும் வயது வித்தியாசம் என்பது கணக்கே இல்லாமல் இருக்கும், இதைத்தவிர பெற்றோர் யார் கழுத்தில் தாலி கட்ட சொன்னாலும் கட்டிவிட வேண்டியதுதான், ஆனால் தற்காலத்தில் நிலைமை மாறி வருகின்றது, இதை பயன்படுத்திக் கொள்வதற்கு தற்கால தம்பதிகள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம், தெரிந்து கொள்வதற்கு
நிறைய தகவல்கள் இருக்கிறது, சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆணோ பெண்ணோ புற லட்ச்சணங்களை பற்றி யோசிக்கும் அதே சமயத்தில் பெண்ணின் பெற்றோருக்கு அல்லது ஆணின் பெற்றோருக்கு பரம்பரை வியாதிகள் ஏதாவது உள்ளதா என்பதை அறிந்து கொள்வது முக்கியமானது, சில தோல்வியாதிகள் பரம்பரையாகவும் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டதாகவும் உள்ளது, இம்மாதிரியான தோல் நோய்களை எளிதில் கண்டு பிடிப்பது சிரமம் என்பதால் அவர்கள் குடும்பத்துடன் சில காலம் சகஜமாக பழகும் வாய்ப்பை ஏற்ப்படுத்திக் கொண்டால் தெரிந்துகொள்வதற்க்கு சுலபமாகும்,

நீரிழிவு போன்ற குறைபாடுகள் இரு தரப்பிலும் இருந்தால் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் இந்த குறைபாடுகளை உடையவர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த திருமண வரன்களை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது, மூளை மற்றும் நரம்பு வியாதிகளில் சில வகைகள் மருந்துளால் சுகமாக்க இயலாத பரம்பரை வியாதியாக ஏற்ப்பட்டு மன நிம்மதியை இழக்கச்செய்து சீக்கிரத்தில் மரணம் நேருவதையும் நம்மால் காண முடிகிறது இதையும் கருத்தில் கொள்வது மிகவும் அவசியம்.

சாதாரணமாக மக்கள் வெளிப்படையாக பயப்படும் ஒருசில வியாதிகளைத் தவிர இன்னும் பல வியாதிகள் மறைவாக உடலில் இருந்து வாழ்க்கையை சோகமாக்கும் இயல்புடையது, இவற்றையெல்லாம் தாண்டி ரத்தவகைகளைப் (Blood groop) பற்றியும் திருமண பந்தத்தில் இணைவதற்கு முன்பே அறிவது அவசியம் சிலரது ரத்தவகைகளால் கர்ப்ப சிதைவு ஏற்ப்படும் வாய்ப்புகள் உண்டு என்பதால் அவ்வகையினர் திருமண பந்தத்தில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் திருமணம் செய்துகொள்வதால் இத்தகைய பிரச்சினைகளை நிச்சயமாக தவிர்க்க முடியும்.

குடும்ப வரலாறு என்று மேலை நாடுகளில் அதிகம் பேசப்படுவது, நம் நாட்டில் இல்லாதக் கலாச்சாரமாக உள்ளது, ஒரு குடும்பத்தில் இருந்து மற்றொரு குடும்பத்துடன் திருமணத்தின் மூலம் இணைக்கப்படுவதற்கு முன் அவர்களது முன்னோர்களைப்பற்றிய தகவல்களை அறிந்த பின் திருமணம் செய்வது சாலச் சிறந்தது, இதற்க்கு மிகவும் முக்கியமான காரணம், சிலருக்கு இயற்கையாகவே திருடு கொலை செய்வது பொய் சொல்வது போன்ற குணங்கள் இருக்கும், மிகப்பெரிய பணக்கார வீட்டில் பிறந்திருக்கும் ஒருவருக்கு கூட இவ்வகை குணங்கள் இயற்கையாகவே இருக்கும், இத்தகைய குறைபாடுகளால் அத்தகைய குற்றச்செயல்களை செய்யாமல் இருக்க இயலாதவர்களாக இருப்பார்கள் இதுவும் ஒருவகை நோய், இத்தகையவர்களை திருமண பந்தத்தில் ஈடுபடுத்தினால் சோகம் தான் மிஞ்சும்.

கடைசியாக திருமண பந்தத்தில் இணைவதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகளைப் போல் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும் ஒருவரையொருவர் மதிக்கவும் மன்னிக்கவும் எந்த காரணத்திற்காகவும் விவாகரத்திற்கு போகக் கூடாது என்று முடிவு எடுத்துக் கொண்டு திருமண பந்தத்தில் ஈடுபடுவது மிகவும் அவசியமானது. எந்த இரு நபர்களாலும் சுமூகமான சூழலை மட்டுமே வாழ்க்கையில் அனுபவிக்க முடியாது, கருத்து வேற்றுமைகள் என்பது இல்லாத மானிடனே இல்லை என்பது யாவரும் அறிந்திருப்பதால், விட்டு கொடுப்பது எப்படி என்பதை முதலில் தீர்மானம் செய்துகொள்வது மிகவும் அவசியம், தற்போதெல்லாம் சராசரியாக காணப்படும் ஒன்று சிலர் திருமணத்தில் ஈடுபடுவதற்கு முன்பே ஏதாவது தவிர்க்க இயலாத சூழல் ஏற்ப்பட்டால் இருக்கவே இருக்குது விவாகரத்து என்ற மன உறுதியுடனேயே வாழ்க்கையை துவக்குவது மிகவும் வருந்தவேண்டிய காலத்தின் கோலமாகவே நான் கருதுகிறேன்.

விவாகரத்து என்பதை உருவாக்கியவரை நான் மிகவும் மதிக்கிறேன், எத்தனையோ பெண்களின் கண்ணீருக்கு விடை கொடுத்தது, தீர்வு கொடுத்தது, ஆனால் அதையே நாம் மூலதனமாக சிந்தித்து திருமண பந்தத்திற்குள் காலடி எடுத்துவைத்தால், சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் முதலில் நம் சிந்தனைக்கு வருவது விவாகரத்து என்பது மிகவும் வேதனையான செய்தி.
Back to top Go down
 
திருமணத்திற்கு முன்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ கடிகாரம் நிற்பதற்கு ஒரு வினாடி முன்பு
» திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் .......
» BEFORE ~ MARRIAGE ~ AFTER - திருமணத்திற்கு முன் : பின்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: