தேவையான பொருட்கள்
* கீரை - 1 கட்டு,
* முட்டை - 2,
* சின்ன வெங்காயம் - 6,
* காய்ந்த மிளகாய் - 4,
* கடுகு - 1/2 தேக்கரண்டி,
* சர்க்கரை - 1/2 தேக்கரண்டி,
* உப்பு - தேவையான அளவு,
* எண்ணெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை
* கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், சுத்தம் செய்த கீரை, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
* ஒரு கை தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும்.
* கீரை வெந்தவுடன், முட்டைகளை உடைத்து, ஊற்றி நன்கு கிளறவும்.
* முட்டை நன்கு வெந்து, தேங்காய் துருவல் போலானதும் சர்க்கரை தூவி இறக்கவும்.