BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன? Button10

 

 அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 37
Location : india, tamil nadu

அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன? Empty
PostSubject: அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?   அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன? Icon_minitimeTue Mar 30, 2010 12:33 pm

கனவுகள் மெய்பட வாழ்க்கையில் பணம் மிக முக்கியமான ஒன்றாகி விடுகிறது.ஒவ்வொரு மனிதனும் செல்வந்தானாக வேண்டும் என்று விழைகிறான்.குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஒரே ஒரு நேர்வழியாக அயல் நாட்டு வாழ்கையை அவன் தேர்ந்தெடுக்கிறான். பாரின் வாழ்க்கையில் அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?.இவற்றை யதார்த்தமாய் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

சிறு வயதில் வானத்தை அண்ணாந்து பார்த்து சிறு குருவி போல் கடந்து செல்லும் விமானங்களை அதிசயமாக நாம் பார்த்ததுண்டு. அப்போதைக்கு அது எங்கு செல்கிறது ? ஏன் செல்கிறது நாம் யோசிப்பதில்லை,சிறு வயதில் நாம் அதனை வியப்போடு பார்க்க மட்டுமே செய்கிறோம்.

நாம் வளர்கிறோம் ,படிக்கிறோம்,கனவுகளும் நம்மோடு சேர்ந்து வளர்கிறது.வாழ்கையின் அடிப்படை தேவைகளுக்கு கூட கடின படும் எண்ணிலடங்காத குடும்பங்கள் இருக்கின்றன.செய்து முடிக்கவேண்டிய கடமைகள் கனவுகளை காட்டிலும் அதிகமாகி போகிறது.!

தங்கையின் திருமணம்...
படிக்க வாங்கிய கடன்...
விளையாத பூமி....
மருத்துவ செலவுக‌ள்...
ஏழ்மையில் உதாசின படுத்தும் சுற்றம்....
கட்டி முடிக்க வேண்டிய வீடு.....

இன்னும் இப்படி பல அயல் நாடு நோக்கி படை எடுப்போரின் பின்புல காரணங்கள் நீண்டு போகிறது.

அற்புதமான தனது தாய் நாட்டை ,அதன் கலாச்சாரத்தை கடந்து ,சொந்தம் ,பந்த பாசங்கள் மறந்து ,அடைய வேண்டிய உலக பூர்வமான இலக்குகளுக்காக ஒரு பயணம் ஆரம்பிக்கிறது.

படித்தவன், படிக்காதவன் எல்லோரும் இந்த எதிர் நீச்சலுக்கு தயாராகிறார்கள்.மிக சாதாரன கல்வி அறிவு இல்லாதவர்கள் கூட தங்களுடைய உடல் உழைப்பை நம்பி வளைகுடா நாடுகளில் பணம் ஈட்ட செல்கிறார்கள்.

உண்மையான போராட்டம் அவர்களுடயதாகவே தெரிகிறது..பாஸ்போர்ட் எடுப்பது தொடங்கி..ஏஜெண்டுகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி கொடுமைகளுக்கு ஆளாகி வாழ்கையை இழந்து திரும்பியவர்களும் , திரும்பாமல் அயல் மண்ணில் மறைந்து போனவர்களும் உண்டு.

மிக கடுமையான சீதோழன நிலைகள் வெயிலும் ,குளிரும் மிக உச்சத்தில் ...வயிற்றை நிரப்ப ஏதோ உணவு..மூர்க்க மான பல மனிதர்களை முதல் முறையாக காணுகின்ற எவரும் புதுமையான அந்த கற்றல் தேவைதானா? என எண்ணுவதில் வியப்பேதுமில்லை!

பறந்து விரிந்த பாலைவனங்களில்,ஓயாமல் இயங்கும் தொழிற்சாலைகளில்,சமையல் கூடங்களில், ஓட்டுனர் இருக்கையில்,மருத்துவ மனையில்,பெட்ரோல் பங்குகளில்,அலுவலகங்களில்,வணிக வளாகங்களில்,சாலையோர கடைகளில்......இப்படி எல்லா இடங்களிலும் கனவுகளை நெஞ்சில் சுமந்த படி ஒவ்வொரு மனிதனும், நெஞ்சில் நினைவுகளை அசை போட்டு கடமைகளுக்காக வாழ்கையை அடகு வைக்கிறார்கள்.

மாதா மாதம் அவரவருடைய சம்பள பணம் இந்தியா வந்தடைகிறது. காயும் செடிகளுக்கு தன்னிற் போல குடும்பம் தழைக்கிறது. அங்கு சுட்டெரிக்கும் வெயிலில் அவன் வாடும் போது அவனுடைய குடும்பம் குளுமையை உணர்கிறது.

பணம் சேர ,சேர ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் மனிதன் மனதளவிலும், உடல் அளவிலும் மாற்றங்களை பெறுகிறான்.நீடித்த தனிமை அவனை ஆரோக்கிய சிந்தனைகளிளிரிந்து தள்ளி வைக்கிறது. கடுமையான கால நிலைகள் அவனுடைய உடலில் நீரிழிவாகவும்,ரத்த அழுத்தமாகவும் மாறி உள்ளுக்குள் அமர்ந்து கொள்கிறது.

மனிதனுக்கு ஆசைகள் கட்டுக்குள் நிற்பதில்லை காலம் கூடினாலும் அவனுடைய புதிது புதிதான ஆசைகளும் கூடி போகிறது. வாழ்கை நீடித்த அடமானமாக அவன் வைத்து விடுகிறான்..அல்லது வைக்க நிர்பந்திக்க படுகிறான்.

பாளை வனமாக இருந்தாலும் பரவாயில்லை பாரின் வாழ்கையே சிறந்தது என அறை மனதோடு ஏற்க காரணம்? விடைகளை சராசரியான மனித மனதிற்கே விடுகிறேன் !
தாய் நாட்டில் சுற்றமும்,சொந்தமும் இவனுடைய வியர்வையின் முக்கியம் உணராமல் ,தங்களுக்கு என்ன கிடைக்கும் என நோட்டம் விடதொடன்குகிறார்கள்.காலம் கடந்து அதனை உணர்ந்து கொள்பவர்களே அதிகம்.

குழந்தையின் மழலை மொழி இழந்து...
நல்லதும் கெட்டதும் அவனை விலக்கி....
நாக்கின் சுவை இழந்து, ....
இளமை கடந்து....
உள்ளுக்குள் நோய் கண்டு...
ரசனை மிக்க மனம் இழந்து...
இன்னும் எத்தனையோ விழயங்களை வாழ்க்கையில் இழந்து கடல் கடந்து வாழும் பல கோடி மனிதர்களின் நிஜ முகத்தின் ஒரு தோற்றம் இது.
அவர்கள் கற்றதும்,பெற்றதும்,இழந்ததும் வெகு நிறைய.இந்த பதிவு அத்தகைய மனிதர்களுக்கு சமர்ப்பணம் !
Back to top Go down
 
அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ Tamil Story ~~ கற்றது தமிழ்...
» *~*சன் பிக்சர்ஸூக்கு சொந்தமான 'அவன் இவன்'*~*
» மனிதனின் வெற்றி அவன் மனோபாவத்தில்!
» அவள், அவன் மற்றும் நிலா ~~ சிறுகதைகள்
» நடந்தது என்ன....?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: