Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: அறப்போர் காசி ஆனந்தன் Thu Apr 01, 2010 12:53 am | |
| எட்டுத் திசைகளும் பட்டுத் தெறித்தன ஈனர் குண்டுகளே! - குண்டு பட்டுத் தமதுடல் கெட்டுச் சிதறிடப் பாய்ந்தார் தொண்டர்களே!
மானம் பெரிதென ஊன உடல்விழ மாண்டார் தமிழ் வீரர்! - ஆவி தானம் எனத்தந்த மானத் தமிழன் தோள் தங்கம்! தங்கமடா!
பெண்களை மென்மைப் பிறவிகளென்று பேச மனம் வருமோ? - அங்கே மண்ணி லுயிர்சிந்தும் இளைஞர்க்கு வாய்த்த மகளிர் குலமல்லவோ?
பள்ளிச் சிறார்களும் நல்லறப் போரிலே பாய்ந்து களிக்கின்றார்! - செந்நீர் வெள்ளத்திலாடி மரணத்தின் முத்தம் விரும்பித் துடிக்கின்றார்!
ஓவென்றிரைந்து நடக்குதடா எங்கும் உரிமைப் போராட்டம்! - வாழ்வு தாவென்று கேட்டு மடியுதடா எங்கள் தமிழர் படைக்கூட்டம்!
தன்னை வருத்தியும் தன்னுயிர் தந்தும் தமிழன் மடிகின்றான்! - தங்கள் பொன்னுயிர் சிந்தும் புறாக்களைக் கண்டு புலவன் மலர்கின்றான்!
எங்கும் பிணத்திரள்! எங்கும் பிணநெடி! இனிய அறமங்கை - கண்ணில் பொங்கி வழியும் புனலின் நெருப்பிலே பூமி அழியாதே?
ஈழம் தமிழ்மண் இரண்டிலுஞ் செந்நீர் எழுந்து பெருக்கெடுத்து - நின்ற ஆழியுஞ் செங்கடலானது கண்டார்! அதிர்ந்தார் புவிமாந்தர்! | |
|