Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: உணர்ச்சி காசி ஆனந்தன் Thu Apr 01, 2010 12:55 am | |
| என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத்தி லெதிர்ப்படை கண்டேன்! பின்னொரு வார்த்தை யுரைப்பதுண்டோ? கொடி பிடித்துப் பறக்குது தானை!
குன்றங்கள் தாவிக் கொடும்பகைவர் தலை கொண்டு வரும்படை போலே சென்றது தானை செருக்களத்தின்மிசை செப்புகிறார்.. அட மாற்றார் கொன்றிடல் போலும் வசைமொழிகள் எழில் கொஞ்சுந் தமிழ்மொழி மேலே! நன்றடா நன்று... பிறமொழிகள் தமிழ் நாட்டை அழிக்கவோ? பார்ப்போம்!
சித்திரச் சோலைப் புறத்தினில் வானிடை சிறகை அடித்தொலி செய்தே கத்திப் பறந்த பறவை அணியெனக் காற்றில் பறக்குது தானை! புத்தொளி வீசும் விழிகளைப் பாடவோ? மூச்சுப் புயலை எழுதவோ? தத்து நடைத்தமிழ் தானைநடையினைப் பாடத் தகுமோ தமிழரே? | |
|