அனைவருக்கும் வணக்கம் ! முள்ள முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது . அது சில நேரங்களில் சரியாக பொருந்துகிறது என்றுதான் சொல்லவேண்டும் . பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் அப்படிப்பட்ட பாம்பிலிருந்து எடுக்கப்படும் விஷமே மனிதனின் உடலில் ஏற்படும் பல கொடிய நோய்களை சரி செய்கிறது என்றால் நம்புவீர்களா ? . உண்மைதான் இப்படியும் சில அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது .
சில நோய்களுக்கு விஷமே மருந்தாக அமைவதை அறிந்திருக்கிறோம். குறிப்பாக பாம்பு விசத்தில் இருந்து பல ஆபத்தான நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இது போல கருந்தேள் விசத்தில் இருந்து மூளை புற்றுநோய்க்கு மருந்துதயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை செய்துள்ளனர். தேள் விசத்தை கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது அதில் உள்ள விசத் தன்மை மருத்துவ குணம் கொண்டதாக மாறிவிடுகிறது. இந்த மருந்து மூளைப் பகுதியில் ஏற்படும் புற்று நோய் மற்றும் மூளையில் ஏற்படும் சதை வளர்ச்சி நோயை விரைவில் குணப்படுத்துகிறது. கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது தேள் விசத்தில் உள்ள மூலப்பொருள் சிதைவடைகிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக விசத்தில் உல்ள குறிப்பிட்ட புரோட்டின் புற்றுநோய் உருவாக்கும் செல்களைமட்டும் தேடிச் சென்று அழிக்கும் மருத்துவத்தன்மை பெற்றுவிடுகிறது.
இப்பொழுதெல்லாம் யாரும் பாம்பை கண்டால் அடித்துக் கொல்வதில்லையாம் அதார்க்கு மாறாக அதைப் பிடித்த்து வளர்த்து வருகிறார்களாம் . என்னங்க அப்படி பாக்குறீங்க ? உண்மைத்தாங்க சொன்னேன் . நம்புனா நம்புங்க. நம்பாட்டி போங்க !