1939 வது ஆண்டில் எர்னெஸ்ட் வின்செண்ட் 50000 வார்த்தைகள் கொண்ட ஒரு நூலை எழுதினார். அதன் சிறப்பு அந்த நாவல் முழுவதும் E என்ற எழுத்தே கிடையாது.
***
Chess(சதுரங்கம்) பற்றி இதுவரை 20000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
***
விக்டர் ஹ்யூகோ எழுதிய Les miserable என்ற புத்தகத்தில் 823 வார்த்தைகள் கொண்ட ஒரே வாக்கியம் இருக்கிறது.
***
நியூயார்க்கில் உள்ள பொது நூலகத்தில் உள்ள புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்தால் 80 மைல் தொலைவிற்கு இருக்குமாம். நூலகத்தில் அடிக்கடி விரும்பிக் கேட்கப்படும் புத்தகங்கள் சோதிடம், மருத்துவம், ஆவிகள் உலகம் பற்றியது.
***
HURRY என்ற ஆங்கில வார்த்தையை ஷேக்ஸ்பியர்தான் முதலில் கண்டுபிடித்து உபயோகப்படுத்தினாராம்.
***
இதுவரை சுமார் 2.5 பில்லியன் பைபிள் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
***
பைபிளில் 3,566,480 எழுத்துக்களும் 810697 வார்த்தைகளும் இருக்கின்றன.
***
தட்டச்சில் முதலில் எழுதப்பட்ட புத்தகம் 1875ல் மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயரின் சாகசங்கள். இதை ரெமிங்டன் தட்டச்சில் எழுதினார்.
***
தன்னுடைய முதல் அகராதியை எழுதுவதற்கு Noah Websterக்கு 36 ஆண்டுகள் பிடித்தனவாம்.
***
Jonathan Swift தன்னுடைய Gullivers Travels (1726) என்ற நூலில் கற்பனையில் இரண்டு சந்திரர்கள் செவ்வாயை வட்டமிடுவது போலெழுதியிருந்தார். அவர் அந்த நூலை எழுதிய காலங்களில் அறிவியல் நாவல்கள் வழக்கிலேயே இல்லை. அந்த நூலில் அந்த கிரஹத்தின் வேகத்தையும் அளவையும் அவர் குறிப்பிட்டிருந்தார், வான் சாத்திர விஞ்ஞானிகள் இது பற்றி எழுதுவதற்கு 100 ஆண்டுகள் முன்பே இது பற்றி அவர் எழுதியிருந்தார் என்பதுதான் ஆச்சரியம்.
***
Sherlock Homes என்ற கற்பனை துப்பறியும் நிபுணரை மையமாக வைத்து துப்பறியும் கதைகள் எழுதிய கானன் டாயில் ஓரு பிரபல கண் அறுவை சிகிச்சை நிபுணர்.. அந்தக் காலங்களில் மருத்துவர்களுக்கு அதிக வரவு இல்லாததால் அவர் துப்பறியும் கதைகள் எழுதத் தொடங்கினார்.
***
லியோ டால்ஸ்டாய் தன் போரும் அமைதியும் என்ற பிரபலமான நாவலை கையாலேயே எழுதினார். அவர் மனைவி அந்தக் கையெழுத்துப் பிரதிகளை ஏழுமுறை தனித்தனியே பிரதி எடுக்க நேர்ந்ததாம்.
***
சார்லஸ் டிக்கன்ஸ் எப்போதும் வடக்கு திசை நோக்கியே அமர்ந்து எழுதுவதைத் தொடங்குவாராம்.
***
அமெரிக்கர்கள் ஒரு செகண்டிற்கு 57 புத்தகங்கள் வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு அவர்கள் வாங்கும் புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைப்பதற்கு 78 மைல் நீளமுள்ள அலமாரி தேவைப்படுமாம்.
[b]