இதனை எளிதில் செய்துவிடலாம். செய்யும் நேரமும் குறைவு. எண்ணெய்யும் ஊறிஞ்சாது. இதனை என் அம்மா கற்றுத் தந்தார்கள்…. இந்த வறுவலுடன் தயிர் சாதம் பிரமாதமாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்………
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி – 1/4கிலோ
சின்ன வெங்காயம் – 6
நாட்டுத் தக்காளி – 1
மிளகு – 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தேங்காய் – சிறிதளவு
தயிர் – பிரட்ட தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்
சோளமாவு – 2ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 பொடி
பஜ்ஜி பவுடர் – 1/4ஸ்பூன்
புதினா – பொடியாக நறுக்கியது சிறிதளவு
கொத்தமல்லி இழை – பொடியாக நறுக்கியது சிறிதளவு
கறிவேப்பிலை – பொடியாக நறுக்கியது சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோழிக்கறியை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் சின்ன வெங்காயம், தக்காளி, மிளகு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, தேங்காய் ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த கோழிக்கறியுடன் இந்த கலவை, தயிர், சோள மாவு, பஜ்ஜி பவுடர், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, உப்பு ஆகியவற்றை பிசைந்து 1மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு தோசைக்கல் காய்ந்தவுடன் சுற்றி எண்ணெய் விட்டு மீன் போல் கோழிக் கறியை பரப்பி மேலாக எண்ணெய் சிறிதளவு ஊற்றவும்.
குறைந்த தணலில் வேகவிடவும்
எல்லாப் பக்கமும் திருப்பி நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.
சுவையான கோழி வறுவல் தயார்.