lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Sun Jun 20, 2010 12:48 pm | |
| உலக தமிழ் செம்மொழி மாநாடு
கோவை - 2010
இந்தியாவின் தொழில் மற்றும் வணிக நகரங்களுள் குறிப்பிடத்தக்கது கோவை என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் ஆகும். பேருந்து, தொடர்வண்டி, விமானப் போக்குவரத்து வசதிகளோடு நவீன அறிவியல் தகவல் தொழில்நுட்பங்களையும் கொண்டு வளர்ந்து வருகிறது கோயம்புத்தூர். இது கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். கொங்கு மண்டலம்: இலக்கியம் - தொல்லியல் சான்றுகள்
வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்
களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாடு
குளித்தண் டலையளவும் கொங்கு
* சங்ககாலத்தில் சேரர் மற்றும் வேளிரின் ஆட்சிப் பகுதியாக விளங்கிய கொங்குப் பகுதி, சங்க இலக்கியங்களில் சிறப்பாகப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படுகிறது. பண்டைய கொங்குச் சமுதாயம் பற்றிய செய்திகள் பலவும் அவற்றில் காணப்படுகின்றன. சங்ககாலத்தில், வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பிடமாகவும் கொங்குப் பகுதி விளங்கியிருக்கிறது. இப்பகுதியில் இரும்புக்காலம் ( கி.மு. 1000 முதலாக ) முதற்கொண்டு மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் பல கிடைத்துள்ளன.
*அகநானூற்றில் (அகம் 1 , 61) பாடப்பெறும் நெடுவேள் ஆவிக்கோவும் குறிஞ்சி நிலத்திற்குரிய முருகனும் நிலைகொண்ட பொதினி (பழநி) மலையைக் கொங்குப் பகுதி கொண்டுள்ளது.
* பதிற்றுப்பத்தில் (30 ,79) புகழ்ந்து கூறப்படும் சேரரின் அயிரைமலை (அயிரைமலை>ஐவர்மலை) கொங்குப் பகுதியில் உள்ளது.
· பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய சங்கப்புலவர்களால் பாடப்பெற்ற இயல்தேர்க் குமணனும், பெருங்கல்நாடன் பேகனும் (கடையெழு வள்ளல்களுள் இருவர்) வாழ்ந்த பகுதி கொங்குப் பகுதியாகும்.
* அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகியனவற்றில் குறிப்பிடப்பெறும் சங்ககால மன்னன் கழுவுளின் காமூர் (தற்போதைய காங்கேயம்) கொங்குப் பகுதியில் உள்ளது. * இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
* எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது. * எனவே பண்பாட்டு, வணிகத் தொடர்பு மையமாகச் சங்க காலத்திலேயே விளங்கிய கொங்குப் பகுதியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகம் -கோவை [தற்போதய கட்சிகள்] முகப்பு கோபுரம் மாநாடு நடக்கும் உள் வளாகம்
கண்காட்சி வளாகம்
| |
|
karthis
Posts : 151 Points : 270 Join date : 2010-03-11 Age : 44 Location : chennai
| Subject: Re: தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Sun Jun 20, 2010 5:00 pm | |
| Superb ... manattuku nerla vantha mathiri iruku | |
|
Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 40 Location : srilanka
| |
KUTTY_MA
Posts : 40 Points : 105 Join date : 2010-03-14 Age : 37 Location : srilanka
| Subject: Re: தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC Mon Jun 21, 2010 2:09 pm | |
| | |
|
Sponsored content
| Subject: Re: தமிழ் செம்மொழி மாநாடு தற்போதைய படம்கள் முதல் முதலில் BTC | |
| |
|