lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: அறிந்ததும் அறியாததும் Fri Jul 16, 2010 9:21 am | |
| *பூமி உண்மையில் உருண்டையல்ல, நிலநடுக் கோட்டின் வழியாக பூமியின் விட்டம் 12,756 கி மீ , ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கி மீ ஆகும்.
*பூமியன் எடை 5,976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன் ஆகும்.
*சூரிய ஒளியில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்கள் அலை நீளம் அதிகமுடைய செந்நிறத்தை காட்டிலும் அதிகமாக சிதறுகின்றன. இவை வலி மண்டலத்திலுள்ள காற்று, நீர் மற்றும் தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப் பட்டு வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை காட்டலும் நீல நிறம் தான் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால் வானமே நீலமாக தெரிகிறது.
*ஒளி சூரியனிடமிருந்து பூமிக்கு வர சுமார் 8 நிமிடம் ஆகும்.
*பூமியின் மீது விழக் கூடிய பெரும்பாலான விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் புவியை விட அதிக ஈர்ப்பு விசை உடைய வியாழன் மீது விழுந்து விடுகின்றன. எனவே தான் வியாழன் 'பூமியின் பாதுகாவலன்” என அழைக்கப்படுகிறது.
*சந்திர மண்டலத்தில் ஒரு நாள் என்பது முப்பது நாளுக்கு சமம். அங்கு 15 நாட்கள் தொடர்ந்து இரவாகவும், 15 நாட்கள் தொடர்ந்து பகலாகவும் இருக்கும்.
*அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய ஒரே நேர்கோட்டில் இருக்கும்.
*நமக்கு மிகவும் அருகில் இருக்கும் நட்சத்திரம் சூரியன்.
*நட்சத்திரங்கள் பிரகாசிப்பதை ஆழமான கிணற்றின் அடியிலிருந்து பகலில் பார்த்தால் கூட தெரியும்.
| |
|