Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: வெற்றி விழா காசி ஆனந்தன் Thu Apr 01, 2010 12:54 am | |
| முரசுகள் அதிர்ந்தன கேண்மினோ! கேண்மின்! முழங்கின ஊதுகுழல்! புரவிகள் ஆடின காண்மினோ! காண்மின்! பொழிந்தன தமிழ்ப்பாடல்! நிரை நிரை காவடி நிறைந்தன கண்டீர்! நிகழ்ந்தன நடனங்கள்! அரசொடு தமிழகம் மலர்ந்தது கண்டார்! அனைவரும் மகிழ்கின்றார்!
தூயவெண் சங்குகள் கூவின! கூவின! தோன்றின கவிதைகள்! ஆயிரம் வகை வகை வீணைகள் ஆர்த்தன! அதிர்ந்தன வேட்டுக்கள்! தாயகம் தனியரசானது! தேனிசை தவழ்ந்தது காற்றெல்லாம்! சேயிழை தமிழ்மகள் வாய்மலர் இதழ்களும் சிரித்தன சிரித்தனவே!
நீள்நெடு மாளிகை வீடுகள் நிறைந்தன! குடிசைகள் நீங்கினவே! நாள்தொறும் வாடிய ஏழையர் பூமுகம் நகைத்தன! நகைத்தனவே! ஆள்பவர் அடிமையர் உள்ளவர் அற்றவர் ஆகிய பேதங்கள் தூள்பட விடுதலை வந்தது! விண்மிசை பறவைகள் துள்ளுதடா!
பனிமலர் புகைப்பொருள் சந்தனம் மணந்தன! பாவையர் எழில் காட்டும் கனிவகை பாலொடு சர்க்கரை கரும்புகள் இனித்தன வாயெல்லாம்! தனியெழில் கொண்டது தமிழகம்! பந்தல்கள் தாங்கின வீதிகளை மனிதரின் திரள்நிறைக் கின்றதால் ஊர்மிசை வீதிகள் மறைந்தன காண்!
கோயில்க ளெங்கணும் மணியொலி கொஞ்சின! தமிழ்மனம் குளிர்ந்ததடா! போயின ஊர்வலம்! வீடெலாம் பொன்விழா! பூத்தன நிறைகுடங்கள்! ஆயிரம் எழில்வகை! விடுதலை நாளெனில் அழகொரு காட்சியன்றோ? வாயிதழ் எங்கணும் வாழ்த்தொலி நின்றது! வாழிய தமிழ் நாடே! | |
|