BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபடித்ததில் பிடித்தது - 13 Button10

 

 படித்ததில் பிடித்தது - 13

Go down 
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

படித்ததில் பிடித்தது - 13 Empty
PostSubject: படித்ததில் பிடித்தது - 13   படித்ததில் பிடித்தது - 13 Icon_minitimeMon Jun 28, 2010 4:25 am

அன்பான BTC தோழமைகளே, வணக்கம்!

ஒரு இயக்கத்தை அல்லது ஒரு இனத்தை அல்லது ஒரு சமூகத்தை வழி நடத்தி செல்லக்கூடிய தலைவருக்கு இருக்கக் கூடாத பண்புகள் பற்றிப் பார்க்கலாம்.

1 தேவையான தகவல்களைத் திரட்டும் திறமையின்மை: தகவல்களையெல்லாம் ஒன்று திரட்டி, அதைப்பற்றியெல்லாம் விலாவரியாகத் தெரிந்து வைத்திருப்பது திறமையான தலைவருக்கு மிகவும் அவசியம். தலைவர் என்ற முறையில் அவரிடம் எதிர்பார்க்கப்படும் விஷயங்களைச் செய்ய முடியாத அளவுக்கு “ரொம்ப பிஸியாக” இருப்பவர் நல்ல தலைவர் இல்லை. தனது திட்டங்களை மாற்றிக் கொள்ளவோ அல்லது ஏதாவது அவசர விஷயத்தில் கவனம் செலுத்தவோ முடியாமல் இருந்தால், பிரச்சனைகளைக் கையாளும் திறன் அவருக்கு இல்லை என்பதே உண்மையாகும்.

2 எளிமையான பணிகளைச் செய்வதற்குத் தயங்குதல்: மற்றவர்களைச் செய்யச் சொல்லும் பணியை, தேவையேற்படும் போது தான் செய்யத் தயங்காதவனே உண்மையான தலைவன்.

3 விஷய ஞானத்துக்கான மதிப்பை எதிர்பார்த்தல்:
ஒருவருக்கு என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதை வைத்து அவரை உலகம் மதிப்பதில்லை. அவர் என்ன செய்கிறார் அல்லது மற்றவர்கள் திறம்பட வேலை செய்யும்படி எப்படி உத்வேகம் அளிக்கிறார் என்பதை வைத்துத் தான் உலகம் அவரை மதிப்பிடுகிறது.

4 தொண்டர்களின் போட்டி பற்றிய பயம் : தன் கீழ் வேலை செய்யும் ஒருவர் தன் பதவியைப் பறித்து விடுவார் என்று பயப்படும் தலைவர், தோல்வியடைவார். இவ்வாறன பயமற்றவர் தனது வேலையை திறமைமிக்க சக ஊழியரிடம் பகிர்ந்து கொடுத்து பயிற்சி அளிப்பார். இதனால் ஒரே சமயத்தில் பல வேலைகளைக் கவனிக்க முடியும். தனது வேலை பற்றித் தெளிவாக அறிந்திருக்கும் தலைவர் தனது வசீகர சக்தியால் மற்றவர்களின் திறமையை மேம்படுத்த முடியும்.

5 கற்பனை இல்லாமை: கற்பனை வளம் இல்லவிட்டால் ஒரு தலைவரால் நெருக்கடியான சந்தர்ப்பங்களைச் சமாளிக்க முடியாது. தனது ஊழியர்களுக்கு வழிகாட்டும் பிரமாதமான திட்டங்களை உருவக்க முடியாது.

6 சுயநலம்: தன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களின் செயலுக்கான பெருமைகளுக்கு எல்லாம் தானே காரணம் என்று நினைக்கும் தலைவர், பிறர் கோபத்துக்கு ஆளாவார். பணத்துக்காக மட்டுமல்லாது ஏரளமானவர்கள் பராட்டுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் பாடுபடுவார்கள் என்பதை அறிந்து கொள்வது நல்ல தலைமைப் பண்பாகும்.

7 அதிகார போதை:
அதிகார போதையில் ஆட்டம் போடும் தலைவரை யாரும் மதிக்க மாட்டார்கள். அதிகார போதை எந்த விதத்தில் வெளிப்பட்டாலும் அது ஆபத்தாய் தான் போய் முடியும்.

8 நம்பிக்கைத் துரோகம்:
தனது பொறுப்புக்களுக்கும், சகாக்களுக்கும், தனக்கு மேலே பதவியில் உள்ளவர்க்கும் , தன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் , விசுவாசமாக இல்லாவிட்டால், தலைமைப்பதவி அதோ கதியாகிவிடும். நம்பிக்கைத் துரோகம் ஒருவரைச் செல்லாக் காசாக்கிவிடும். எல்லாத் துறைகளிலும் தோல்விக்கு மிக முக்கிய காரணம் இது தான்.

9 ”அதிகார மிரட்டல்” : தொண்டர்களை, ஊழியர்களைத் தட்டிக் கொடுத்து வழிநடத்துபவர் தான் திறமையான தலைவர். அவர் அச்சுறுத்தி வேலை வாங்க மாட்டார். தனது அதிகாரத்தைக் காட்டி மிரட்டித் தொண்டர்களைக் காயப்படுத்த முயலும் தலைவர் சர்வாதிகாரி ரகத்தைச் சேர்ந்தவர். ஒரு நிஜமான தலைவர் தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவரது நடத்தை, அக்கறை, புரிந்து கொள்ளும் திறன், நியாய உணர்வு ஆகியவையே அவர் தான் தலைவர் என்பதைப் பறைசாற்றும். அத்துடன் தனது வேலையில் தான் கை தேர்ந்தவன் என்பதைக் காட்டுவதும் தலைவர், என்ற அந்தஸ்துக்கு சிறந்த விளம்பரமாக அமையும்.

மேற்கூறிய தலைமைப் பண்புக்குத் தேவையற்ற 9 இயல்புகளையும் விடுத்து சிறந்த தலைவர்களாக பரிணமிக்க வாழ்த்துக்கள்....!

வாழ்த்துக்களுடன்..... ப்ரியமுடன்

Back to top Go down
 
படித்ததில் பிடித்தது - 13
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» படித்ததில் பிடித்தது - 5
» படித்ததில் பிடித்தது - 6
» படித்ததில் பிடித்தது-1
» படித்ததில் பிடித்தது - 7
» படித்ததில் பிடித்தது..

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: